மேரி சோமர்வில்லி
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
மேரி சோமர்விலே | |
---|---|
மேரி சோமர்வில்லி | |
பிறப்பு | மேரி பேர்பாக்சு 26 திசம்பர் 1780 யேத்பர்கு, சுகாட்லாந்து |
இறப்பு | 29 நவம்பர் 1872 நேப்பிள்சு, இத்தாலி | (அகவை 91)
தேசியம் | இசுகாட்டியர் |
துறை | அறிவியல் எழுத்தாளர்]] பல்துறை வல்லுநர் |
விருதுகள் | தங்கப் பதக்கம் (1869) |
மேரி பேர்பாக்சு சோமர்வில்லி (Mary Fairfax Somerville) (26 திசம்பர் 1780 – 28 நவம்பர் 1872) ஓர் இசுகாட்டிய அறிவியல் எழுத்தாளரும் பலதுறை வல்லுநரும் ஆவார். இவர் காலத்தில் அறிவியலில் பெண்கள் பங்கேற்க மறுக்கப்பட்டனர்.[1] இவர் வானியலும் கணிதவியலும் பயின்றார். இவரே அரசு வானியல் கழகத்தின் முதன்முதலாக பெண் உறுப்பினராகக் கரோலின் எர்ழ்செலுடன் கூட்டாகத் தேர்வு பெற்றவர் .
தத்துவஞானியும் பொருளாதார வல்லுனருமான ஜான் எசுடூவர்ட் மில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்காக பாராளுமன்றத்தில் ஒரு பாரிய மனுவை ஏற்பாடு செய்தபோது, அந்த மனுவின் முதல் கையெழுத்தாக சோமர்வில்லேவை கையொப்பிட வைத்தார்.
1871 ஆம் ஆண்டில் இவர் இறந்தபோது, தி மார்னிங் போஸ்ட் என்ற இதழ் தனது இரங்கலில் இவ்வாறு அறிவித்தது: "பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் விஞ்ஞான மன்னரைத் தேர்ந்தெடுப்பதில் நாம் எந்த சிரமத்தை அனுபவித்தாலும், விஞ்ஞான இராணியைப் பற்றி எந்த கேள்வியும் இருக்க முடியாது" என்றது.[2][3]
2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இசுகாட்லாந்து வங்கியின் £ 10 ரூபாய் பவுன்டின் மேற்புறத்தில் இவரது படைப்பான இயற்பியல் அறிவியலின் இணைப்பு என்ற கோட்பாட்டுடன் இடம்பெற்றுள்ளார்.[4]
இளம்பருவம்
[தொகு]இவர் சர் வில்லியம் பேர்பாக்சின் மகள் ஆவார்.[5] தன் தந்தை வழியாக பல தகைசான்ற பேர்பாக்சு குடும்பங்களின் சிங்கம். தன் தாய்வழியாக பல புகழ்மிக்க சுகாட்டியக் குடும்பங்களுடன் உறவுள்ளவர்.[6] இவர் இசுகாட்டிய எல்லையில் உள்ள யேத்பர்கு, மன்சே நகரில் தன் தாயின் தங்கை வீட்டில் பிறந்தார். தாயின் தங்கையின் கணவர் அமைச்சரான முனைவர் [[தாமசு சோமர்வில்லி (1741–1830). தாமசு சோமர்வில்லி மை ஓன் லைஃப் அண்ட் டைம்ஸ் எனும் நூலின் ஆசிரியராவார்.[6] இவரது இளம்பருவ வீடு பிபேயில் அமைந்த பர்ண்டிசுலாந்து வீடாகும்.[5] கடற்பயணத்திலிருந்து வந்த இவரது தந்தையார் பத்து அகவையிலும் இவரது காட்டுமிராண்டி இயல்பைப் பார்த்து முசேல்பர்கு உண்டுறை பள்ளிக்குப் பயிற்சிக்காக அனுப்பியுள்ளார்.[6] அங்கிருந்து ஓரளவு படிக்கவும் எழுதவும் அடிப்படை பிரெஞ்சு மொழியும் மற்றும் ஆங்கில இலக்கணமும் கற்று வீடு திரும்பினார். அப்போது இவர் எளிய கணக்குகளையும் போடலானார்.[7]
மேரிக்கு 13 வயதாக இருந்தபோது, குளிர்கால மாதங்களில் இவரது தாயார் எடின்பர்க்கில் எழுத்துப் பள்ளிக்கு அனுப்பினார். அங்கு இவர் தனது எழுதும் திறனை மேம்படுத்தி, எண்கணிதத்தின் பொதுவான விதிகளைப் படித்தார். [8] பின்னர், பர்ண்டிசுலாந்து வீட்டு நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் படிக்கத் தேவையான லத்தீன் மொழியைக் கற்றுக் கொண்டார். [9] ஜெட்பர்க்கில் உள்ள தனது அத்தை வீட்டிற்குச் சென்றபோது, இவர் தனது மாமா மருத்துவர் தாமஸ் சோமர்வில்லைச் சந்தித்து, லத்தீன் மொழியைக் கற்க முயற்சிப்பதாக கூறினார். மருத்துவர் சோமர்வில் பண்டைய காலங்களில் பல பெண்கள் மிகவும் நேர்த்தியான அறிஞர்களாக இருந்ததாக இவருக்குத் தெரிவித்தார். மேலும் இவருக்கு வேர்ஜிலை படிப்பதன் மூலம் லத்தீன் மொழியைக் கற்பித்தார். [10][5] எடின்பர்க்கில் உள்ள வில்லியம் சார்ட்டர்ஸ் என்ற மற்றொரு மாமாவைப் சந்த்தித்து, மேரி ஸ்ட்ரேஞ்சின் நடனப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு இவர் நடத்தை நெறி மற்றும் முழங்காலை வளைத்து வணக்கும் செய்யும் முறை போன்றவற்றைக் .கற்றுக்கொண்டார். [11]
அக்கால அரசியல் எழுச்சி மற்றும் பிரெஞ்சு புரட்சி குறித்து, பின்னர் இவர் தனது தந்தை பிரித்தானிய கன்சர்வேடிவ் கட்சி அல்லது அதன் ஆதரவாளர்களுடன் தொடர்புடையவர் என்று எழுதினார். "லிபரல் கட்சியின் அநியாய மற்றும் மிகைப்படுத்தப்பட்ட துஷ்பிரயோகம் என்னை ஒரு தாராளவாதியாக ஆக்கியது. எனது ஆரம்ப காலத்திலிருந்தே என் மனம் அடக்குமுறைக்கும் கொடுங்கோன்மைக்கும் எதிராக சுழன்றது. மேலும் ஆண்களுக்கு மிகவும் பகட்டாக வழங்கப்பட்ட எனது பாலினத்திற்கு எதிரானகல்விச் சலுகைகள் அனைத்தையும் மறுப்பதில் உலகின் அநீதியை நான் எதிர்த்தேன்.
அடிமைத்தனத்தை எதிர்த்து மேரியும் இவரது மூத்த சகோதரர் சாம் ஆகியோர் தங்களது தேநீரில் சர்க்கரை சேர்க்க மறுப்பார்கள். சோமர்வில் தனது தாராளவாத மத மற்றும் அரசியல் கருத்துக்களில் தனது வாழ்நாள் முழுவதும் மாறாமல் இருந்தார். ஆனால் தன்னை ஒருபோதும் குடியரசுக் கட்சிக்காரர் அல்ல என்று வலியுறுத்தினார்.
திருமணம் மற்றும் படிப்பு
[தொகு]1804 ஆம் ஆண்டில் இவர் தனது முதல் கணவரான அட்மிரல் சாமுவேல் கிரேக்கின் மகன் லெப்டினன்ட் சாமுவேல் கிரேக்கை சந்தித்தார். அப்போது. அவர் உருசிய கடற்படை ஆணையராகவும், பிரிதனுக்கான உருசிய தூதராகவும் இருந்தார். இவர்கள் திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளைப் பெற்றனர், அவர்களில் ஒருவரான வொரோன்சோ கிரேக் ஒரு பேரறிஞராகவும் விஞ்ஞானியாகவும் மாறினார்.
இறப்பு
[தொகு]1868 ஆம் ஆண்டில், 91 வயதில் இறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஜான் எசுடூவர்ட் மில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்காக பாராளுமன்றத்தில் ஒரு பாரிய மனுவை ஏற்பாடு செய்தபோது, மனுவில் கையெழுத்திட்ட முதல் நபர் இவராவார். சோமர்வில்லே தனது சுயசரிதையில் "பிரித்தன் சட்டங்கள் பெண்களுக்கு பாதகமானவை" என்று எழுதினார். ஒரு இளம் பெண்ணாக கல்வி பெறுவதில் தான் எதிர்கொண்ட தடைகளைப் பற்றி அதில் இவர் விவரித்தார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ O'Connor & Robertson: "in keeping with the ideas of the time, little need was seen to educate girls".
- ↑ Boreham, Ruth (8 March 2017). "Mary Somerville: Queen of Science". Dangerous Women. பார்க்கப்பட்ட நாள் 12 July 2018.
- ↑ "Mrs. Somerville (Obituary)". The Morning Post from London. 2 December 1872. https://www.newspapers.com/new/396253539/.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Royal Bank of Scotland - £10 Polymer". www.scotbanks.org.uk. Archived from the original on 18 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 19 August 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 5.0 5.1 5.2 Mary T Brück. "Mary Somerville, mathematician and astronomer of underused talents". Journal of the British Astronomical Association 206 (4): 201. http://adsbit.harvard.edu/cgi-bin/nph-iarticle_query?bibcode=1996JBAA..106..201B.
- ↑ 6.0 6.1 6.2 Somerville, Mary Fairfax Greig. Dictionary of Scientific Biography. Vol. 11 & 12. New York: Charles Scribner's Sons. p. 521.
- ↑ Somerville, Mary Fairfax Greig. Dictionary of Scientific Biography. Vol. 11 & 12. New York: Charles Scribner's Sons. pp. 521–522.
- ↑ Somerville (1874), ப. 35.
- ↑ Somerville (1874), ப. 36.
- ↑ Somerville (1874), ப. 37.
- ↑ Somerville (1874), ப. 41.
மேற்கோள்கள்
[தொகு]- Somerville, Martha. Personal Recollections, From Early Life to Old Age, of Mary Somerville. Boston: Roberts Brothers, 1874. (written by her daughter) Reprinted by AMS Press (January 1996), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-404-56837-8 Fully accessible from Google Books project.
- Neeley, Kathryn A. Mary Somerville: Science, Illumination, and the Female Mind, Cambridge & New York: Cambridge University Press, 2001.
- Fara, Patricia (September 2008). "Mary Somerville: a scientist and her ship". Endeavour (England) 32 (3): 83–5. doi:10.1016/j.endeavour.2008.05.003. பப்மெட்:18597849. https://archive.org/details/sim_endeavour_2008-09_32_3/page/83.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Mary Fairfax Somerville", Biographies of Women Mathematicians, Agnes Scott College
- Mary Somerville பரணிடப்பட்டது 2015-03-23 at the வந்தவழி இயந்திரம், an article by Maria Mitchell, Atlantic Monthly 5 (May 1860), 568–571.
- Bibliography from the Astronomical Society of the Pacific
- வார்ப்புரு:NRA
- Catalogue of correspondence and papers of Mary Somerville and of the Somerville and related families, c.1700–1972, held at the Bodleian Library, University of Oxford
- குட்டன்பேர்க் திட்டத்தில் Mary Somerville இன் படைப்புகள்
- ஆக்கங்கள் மேரி சோமர்வில்லி இணைய ஆவணகத்தில்
- Personal Recollections, from Early Life to Old Age, of Mary Somerville, her autobiography, at Project Gutenberg