மெக்கல்லே
மெக்கல்லே
መቐለ Mak'allè | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): வடக்கத்திய நட்சத்திரம் | |
எத்தியோப்பியாவின் வடக்கில் திக்ரே மாகாணத்தில் மெக்கெல்லே நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 13°29′49″N 39°28′37″E / 13.49694°N 39.47694°E | |
நாடு | எதியோப்பியா |
பிரதேசம் | சிறப்பு மண்டலம் |
திக்ரே பிரதேசம் | மெக்கல்லே சிறப்பு மண்டலம் |
ஏற்றம் | 2,254 m (7,395 ft) |
மக்கள்தொகை (2016) | |
• மொத்தம் | 3,10,436[1] |
நேர வலயம் | ஒசநே+3 (கிழக்கு ஆப்பிரிக்க நேரம்) |
இடக் குறியீடு | (+251) 14 |
தட்பவெப்பம் | அரை வறண்ட காலநிலை, சூடான அரை வறண்ட காலநிலை |
மெக்கல்லே (Mekelle) அம்காரியம்: መቀሌ?) கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் வடக்கில் மலைகள் சூழ அமைந்த திக்ரே மாகாணத்தின் தலைநகரம் ஆகும் [2]இது எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவுக்கு வடக்கில் 780 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மெக்கல்லே நகரம் கடல் மட்டத்திலிருந்து 2,254 மீட்டர்கள் (7,395 அடி) உயரத்தில் உள்ளது. சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மெக்கல்லே நகரம் 7 துணை நகரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மெக்கல்லே நகரம் வடக்கு எத்தியோப்பியாவின் பொருளாதாரம், பண்பாடு மற்றும் அரசியல் மையமாக விளங்குகிறது.
1991-ஆம் ஆண்டு முதல் மெக்கல்லே நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவிற்கு அடுத்து மெக்கல்லே இரண்டாவது பெரிய நகரம் ஆகும். 2007-இல் மெக்கல்லே நகரம் சிமெண்ட், ஜவுளி தொழிற்சாலைகளிலிருந்து உள்நாட்டிற்கும், வெளிநாட்டிற்கு தேவையானவைகள் உற்பத்தி செய்கிறது. இங்கு மெக்கல்லே பல்கலைக்ழகம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளது.
புவியியல்
[தொகு]மலைகள் சூழ்ந்த மெக்கல்லே நகரம் கடல்மட்டத்திலிருந்து 2,254 மீட்டர்கள் (7,395 அடி) உயரத்தில் உள்ளது. இது வடக்கு எத்தியோப்பிய சுண்ணாம்புக் கல் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்நகரம் அரை வறண்ட காலநிலை மற்றும் சூடான அரை வறண்ட தட்பவெப்பம் கொண்டது. இந்நகரத்தின் சராசரி ஆண்டு மழைப் பொழிவு 714 மில்லிமீட்டர்கள் (28.1 அங்) ஆகும்.[3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2007-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மெக்கல்லே நகரத்தின் மொத்த மக்கள் தொகை 2,15,914 ஆகும். இந்நகரத்தின் இரண்டு முதன்மையான இனக்குழுக்களில் திக்ரே மொழி பேசும் இனத்தவர் (96.2%) மற்றும் அம்ஹாரா மொழி பேசும் இனத்தவர் (2.26%), பிற மொழி பேசும் இனத்தவர்கள் 1.27% ஆக உள்ளனர். மெக்கல்லே நகர மக்களில் கிறித்துவர்கள் 92.68% மற்றும் இசுலாமியர் 6.03% ஆகவுள்ளனர்.[4]இதன் சராசரி எழுத்தறிவு 51.75% ஆகவுள்ளது. 51% மக்களுக்கு கழிப்பறை வசதி உள்ளது.[5]
தட்பவெப்பம்
[தொகு]மெக்கல்லே நகரம் அரை வறண்ட காலநிலை மற்றும் சூடான அரை வறண்ட காலநிலை கொண்டது.
தட்பவெப்ப நிலைத் தகவல், மெக்கல்லே | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 22.8 (73) |
23.9 (75) |
25 (77) |
26.1 (79) |
27.2 (81) |
27.2 (81) |
26.7 (80) |
22.8 (73) |
25 (77) |
23.9 (75) |
22.8 (73) |
22.2 (72) |
24.33 (75.8) |
தினசரி சராசரி °C (°F) | 19.5 (67.1) |
20.5 (68.9) |
21.5 (70.7) |
22.5 (72.5) |
23.5 (74.3) |
23.5 (74.3) |
20.5 (68.9) |
20 (68.0) |
21.5 (70.7) |
20.5 (68.9) |
19.5 (67.1) |
18.5 (65.3) |
20.94 (69.7) |
தாழ் சராசரி °C (°F) | 16.1 (61) |
17.2 (63) |
17.8 (64) |
18.9 (66) |
20 (68) |
20 (68) |
17.8 (64) |
17.2 (63) |
17.8 (64) |
17.2 (63) |
16.1 (61) |
15 (59) |
17.61 (63.7) |
மழைப்பொழிவுmm (inches) | 36 (1.4) |
10 (0.4) |
25 (1) |
46 (1.8) |
36 (1.4) |
30 (1.2) |
201 (7.9) |
216 (8.5) |
36 (1.4) |
10 (0.4) |
30 (1.2) |
41 (1.6) |
716 (28.2) |
ஆதாரம்: Weatherbase[6] |
இதனையும் காண்க
[தொகு]- அக்சும் பேரரசு
- திக்ரே பிரதேசம்
- திக்ரே மாகாணம்
- திக்ரே மக்கள் விடுதலை முன்னணி
- எத்தியோப்பியா உள்நாட்டுப் போர் (2020-தற்போது வரை)
- எத்தியோப்பிய உள்நாட்டுப் போர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The 2015/16 Ethiopian Household Consumption – Expenditure (HCE) Survey. Federal Democratic Republic of Ethiopia Central Statistical Agency. p. 42. Archived from the original on 6 June 2018. பார்க்கப்பட்ட நாள் 26 August 2018.
{{cite book}}
: More than one of|archivedate=
and|archive-date=
specified (help); More than one of|archiveurl=
and|archive-url=
specified (help) - ↑ Aberra, Yohannes (2007). "Mäqälä". Encyclopaedia Aethiopica. Wiesbaden: Harrassowitz Verlag.
- ↑ Britannica, Mekele, britannica.com, USA, accessed on January 5, 2020
- ↑ Census 2007 Tables: Tigray Region பரணிடப்பட்டது நவம்பர் 14, 2010 at the வந்தவழி இயந்திரம், Tables 2.1, 3.1, 3.2, 3.4.
- ↑ 1994 Population and Housing Census of Ethiopia: Results for Southern Nations, Nationalities and Peoples' Region, Vol. 1, part 1 பரணிடப்பட்டது நவம்பர் 19, 2008 at the வந்தவழி இயந்திரம், Tables 2.1, 2.12, 2.19, 3.5, 3.7, 6.3, 6.11, 6.13 (accessed 30 December 2008)
- ↑ "Weatherbase.com". Weatherbase. 2018. Retrieved on October 30, 2018.
வெளி இணைப்புகள்
[தொகு]- Ethiopian Treasures - The castle of Emperor Yohannes IV
- Cities of Ethiopia: Mekelle by John Graham (Addis Tribune, 12 October 2001)