உள்ளடக்கத்துக்குச் செல்

முன்கழுத்துக் கழலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முன்கழுத்துக் கழலையுடன் ஒருவர்

முன்கழுத்துக் கழலை அல்லது கண்டக்கழலை (goitre) என்பது தைராய்டு சுரப்பி பெரிதாவதால் கழுத்தில் தொண்டைப் பகுதிக்குக் கீழே ஏற்படும் வீக்கமாகும்.[1].[2] இது பெரும்பாலும் அயோடின் குறைபாட்டின் விளைவாகவே ஏற்படுகிறது. சில வேளைகளில் உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாகவும் சிலரிடையே தோன்றுவதாகவும் அறியப்பட்டுள்ளது. தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாததால் முன்கழுத்துக் கழலை உருவாகிறது. உலக அளவில் 90% முன்கழுத்துக் கழலை நோய்கள் அயோடின் குறைபாட்டால் ஏற்படுகிறது.[3] அவை பெரும்பாலும் தீங்கற்ற கட்டிகளாகவே உள்ளன.

முன்கழுத்துக் கழலை நோயின் அறிகுறிகள்

[தொகு]

தைராய்டு சுரப்புக் குறை மற்றும் அதிதைராய்டியம் ஆகியவற்றின் காரணமாக முன்கழுத்துக் கழலை நோயின் அறிகுறிகள் தோன்றுகின்றன. அதிதைராய்டியம் காரணமாக அட்ரீனல்வினையிய செயல்பாடுகளான: இதயத் துடிப்பு மிகைப்பு, மிகுதியான நெஞ்சுத்துடிப்பு (palpitations), பதற்றம் (nervousness), உடல் நடுக்கம் (tremor), உயர்த்தப்பட்ட குருதி அழுத்தம் மற்றும் சுற்று சூழலால் ஏற்படும் வெப்பத்தை தாங்க முடியாமல் போவது (heat intolerance) ஆகியவை உண்டாகும். அதியவளர்சிதைமாற்றம் (hypermetabolism), அதிகப்படியான தைராய்டு இயக்குநீர் சுரப்பு, அதிக ஆக்சிசன் நுகர்வு, புரத வளர்சிதையில் ஏற்படும் மாற்றங்கள், இயல்புக்கு மீறிக் கண்விழி பிதுங்கியிருத்தல் (exophthalmos) ஆகிய அறிகுறிகள் மூலமாகவும் முன்கழுத்துக் கழலை நோயின் அறிகுறிகள் தென்படுகின்றன.[4] தைராய்டு சுரப்புக் குறைவால் பசியில்லாவிட்டாலும் உடல் எடை அதிகரிக்கிறது, மலச்சிக்கல், சோம்பல் மற்றும் குளிர் தாங்க இயலாமை (cold intolerance) ஆகிய அறிகுறிகளும் காணப்படுகிறது.

சுரப்பி வீக்கமடைதல்

[தொகு]

குறைந்த அயோடின் மட்டத்தில் றைஅயடோதைரோனின்(Triodothyronin) மற்றும் ரெட்ராஅயடோதைரோனின்(Tetreiodothyronin) குறைவடைகின்றன. இதனால் அசினர் கலங்கள்(Acini Cell) தைராயிட்டு சுரப்பியிலிருந்து வீக்கமடையத் தொடங்குகின்றன.

முன் கழுத்துக் கழலை ஏற்படக் காரணங்கள்

[தொகு]

உலக அளவில், முன் கழுத்துக் கழலை ஏற்பட அயோடின் குறைபாடே காரணமாகும். அயோடின் கலந்த உப்பு பயன்படுத்தாத நாடுகளில் இந் நோய் அதிகமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. செலீனியம் குறைவாலும் இந் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அயோடின் கலந்த உப்பை பயன்படுத்தும் நாடுகளில் காசிமோடோவின் தைராய்டழற்சி (Hashimoto's thyroiditis) என்ற நோய் உண்டாகிறது.[5] சயனைடு விசத்தாலும் முன் கழுத்துக் கழலை ஏற்படுகிறது. வெப்ப மண்டல நாடுகளில் சயனைடு அதிகமுள்ள மரவள்ளி கிழங்கை அதிகம் உண்ணும் நாடுகளில், இந் நோய் அதிகம் காணப்படுகிறது.[6]

குறை தைராய்டு, அயோடின் குறைபாடு, தைராய்டு வீக்க நோய்க் காரணி (Goitrogen), கபச்சுரப்பி நோய் (Pituitary disease), கிரேவின் நோய் (Graves' disease), தைராய்டு புற்று நோய் ஆகியவையும் முன் கழுத்துக் கழலையுடன் தொடர்புடைய சில நோய்கள் ஆகும்.

அயோடின் பற்றாக்குறை காரணமாகவே பொதுவாகக் கண்டக் கழலை ஏற்படுகின்றது.ஆயினும் அயோடின் குறைபாடு இல்லாத வேளையிலும் உணவில் கழலையைத் தோற்றுவிக்கும் கூறுகள் (Goitrogenic substances) உள்ளெடுக்கப்படும் போது சிலருக்கு கண்டக் கழலை ஏற்படுகின்றது.

கழலையைத் தோற்றுவிக்கும் கூறுகள்

[தொகு]

சில தாவர உணவு வர்க்கங்களில் காணப்படும் எதிர்ப் போசனைக் கூறுகள்(Anti nutritional Factors) கழலையைத் தோற்றுவிக்கின்றன.

எ.கா:

  • தயோசயனைட்டு(Thiocyanate):
மரவள்ளி, கோவா, பூக்கோவா, முள்ளங்கி என்பவற்றில் தயோசயனைட்டு அதிக அளவில் காணப்படுகின்றது.
  • பேர்க்குளோரேட்டு(Perchlorate):
கரட், கடுகு என்பவற்றில் பேர்க்குளோரேட்டு அதிக அளவில் காணப்படுகின்றது.
  • தயோயூரியா(Thiourea):
  • தயோயுரசில்(Thiouracil):
  • கோயிற்றின்(Goitrin)

புற அமைப்பியல்

[தொகு]

முன் கழுத்துக் கழலைகள் வளர்ச்சி வீதம் அல்லது வளர்ச்சியின் அளவைப் பொறுத்து, அவை வகைப்படுத்தப்படுகின்றன.

வளர்ச்சி வீதம்
  • ஒரு கணுவுள்ள முன் கழுத்துக் கழலை:
  • பல கணுக்களுள்ள முன் கழுத்துக் கழலை;[7][8]
  • பரவலான முன் கழுத்துக் கழலை: மிகைப்பெருக்கம் காரணமாக உருவாகிறது.
அளவு
  • வகை I (அழுத்தச்சோதனை முன் கழுத்துக் கழலை (palpation goitre)): பொதுவாகத் தெரிவதில்லை, ஆனால் அழுத்தச்சோதனை மூலமே கண்டறிய முடியும்.
  • வகை II: தொட்டு உணரக்கூடிய முன் கழுத்துக் கழலையாக இருக்கும், எளிதில் கண்டறியலாம்.
  • வகை III: மிகப் பெரிய முன் கழுத்துக் கழலை, அழுத்திய இடம் அமுக்கப்பட்டிருக்கும்.

முன் கழுத்துக் கழலை நோயின் அறிகுறிகள்

[தொகு]

சிகிச்சை

[தொகு]

முன் கழுத்துக் கழலை ஏற்படும் காரணத்தைப் பொறுத்து சிகிச்சை முறை மாறுபடுகிறது. தைராய்டு இயக்குநீர் (thyroid hormone) அதிகமாக சுரக்கும் பட்சத்தில் அவற்றை சுருக்க கதிரியக்க அயோடின் (radioactive iodine) பயன்படுத்தப்படுகிறது. முன் கழுத்துக் கழலை அயோடின் குறைபாட்டால் ஏற்பட்டால் லுகோலின் அயோடின் (Lugol's Iodine) அல்லது பொட்டாசியம் அயோடைடு கரைசல் ஆகியவை குறைந்த அளவில் மருந்தாக வழங்கப்படும். தைராய்டு சுரப்பியின் செயல்பாடு குறைவால் முன் கழுத்துக் கழலை ஏற்பட்டால், அவற்றை தூண்டும் உணவுகள் வழங்கப்படும். மிகவும் முடியாத நோயாளிகளின் தைராய்டு சுரப்பி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நீக்கப்படும்.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Foundation, British Thyroid. "Thyroid Nodules and Swellings - British Thyroid Foundation". www.btf-thyroid.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2019-10-23. பார்க்கப்பட்ட நாள் 2018-05-13.
  2. Choices, NHS. "Goitre - NHS Choices". www.nhs.uk (in ஆங்கிலம்).
  3. R. Hörmann: Schilddrüsenkrankheiten. ABW-Wissenschaftsverlag, 4. Auflage 2005, Seite 15–37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-936072-27-2
  4. Porth, C. M., Gaspard, K. J., & Noble, K. A. (2011). Essentials of pathophysiology: Concepts of altered health states (3rd ed.). Philadelphia, PA: Wolters Kluwer/Lippincott Williams & Wilkins.
  5. Mitchell, Richard Sheppard; Kumar, Vinay; Abbas, Abul K.; Fausto, Nelson. Robbins Basic Pa thology (8th ed.). Philadelphia: Saunders. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4160-2973-7.
  6. "Toxicological Profile For Cyanide" (PDF). Atsdr.cdc.gov. பார்க்கப்பட்ட நாள் 2017-03-16.
  7. Frilling, A; Liu, C; Weber, F (2004). "Benign multinodular goiter". Scandinavian Journal of Surgery 93 (4): 278–81. doi:10.1177/145749690409300405. பப்மெட்:15658668. 
  8. Gandolfi, P. P.; Frisina, A; Raffa, M; Renda, F; Rocchetti, O; Ruggeri, C; Tombolini, A (2004). "The incidence of thyroid carcinoma in multinodular goiter: Retrospective analysis". Acta bio-medica : Atenei Parmensis 75 (2): 114–7. பப்மெட்:15481700. 
  9. "Goiter". பார்க்கப்பட்ட நாள் 13 மே 2018.
  10. "Goiter – Simple". The New York Times. http://health.nytimes.com/health/guides/disease/goiter/overview.html. 

வெளி இணைப்புகள்

[தொகு]