உள்ளடக்கத்துக்குச் செல்

மாவுப்பூச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாவுப்பூச்சி
Mealybugs on a flower stem, Yogyakarta
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
பெருங்குடும்பம்:
குடும்பம்:
Pseudococcidae

Heymons, 1915 [1]
Genera
See text
[2]

மாவுப்பூச்சி (Mealybugs) என்பது ஒரு வகைப் பூச்சி ஆகும். இவை ஈரப்பமான, வெப்பமான காலநிலை உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன. இதில் பலவகையானவை தீங்குயிர்களாக கருதப்படுகின்றன. இவை தாவரங்களில் இருந்து அதன் சாறை உறிஞ்சி வாழ்பவை. இவை பசுமைக் குடில் தாவரங்கள், வீட்டுத் தாவரங்கள் வீட்டில், துணை வெப்பமண்டல மரங்கள் போன்றவற்றிற்கு நோய்ப் பரப்பியாக செயல்படுகிறது. ஒரு தாவரத்தின் மீது மாவுப்பூச்சிகள் எண்ணிக்கையில் அதிகரிக்கும்போது, தாவரங்கள் இறக்க நேரிடலாம்.

பரவல்

[தொகு]

உலகின் அனைத்துப் பகுதிகளிலும் மாவுப்பூச்சிகள் உள்ளன. என்றாலும் மிகவும் வெப்பமான பகுதிகளில் மட்டுமே மிகுதியாக காணப்படுகின்றன, மற்றும் குளிர்ந்த நாடுகளில் உள்ள பசுமைக் குடில் மற்றும் பிற கட்டிடங்களில் பரவியுள்ளன. இவை ஆர்க்டிக் அல்லது அண்டார்டிக்கில் காணப்படுவதில்லை, ஒருவேளை ஏதாகினும் கட்டிடங்களில் இருக்கலாம் அதைத் தவிர வேறு எங்கும் இல்லை.

விளக்கம்

[தொகு]
ஆண் மாவுப் பூச்சி
மாவுப்பூச்சிக் கூட்டத்துடன் எறும்புகள்

இந்தப் பூச்சிகளில் ஆண் பூச்சிகளுக்கு இறக்கை உண்டு. ஆனால் பெண் பூச்சிகளோ பறக்க முடியாதவை. சில வகை பெண் பூச்சிகள் நடக்கக் கூடியன.

பெண் மாவுப்பூச்சிகளே தாவரச் சாறை உறிஞ்சி வாழ்கின்றன. தாவரப் பிளவுகள், வேர்கள், பழத்தின் அடிப்பகுதிகளில் இருந்து சாறை எடுக்கின்றன. தாவரங்களோடு ஒட்டியிருக்கும் இவை, சாறை எடுக்கும்போது தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மாவு போன்ற படலத்தைச் சுரக்கின்றன. அதனால் இவை வாழும் தாவரத் தண்டுகள் மாவைப் பூசியது போன்று காணப்படும்.

தாவரங்களில் இருந்து சாறை உறிஞ்சும் மாவுப்பூச்சிகள் அதைத் தேனாக மாற்றுகிறன. இதை எறும்புகள் உணவாகக் கொள்கின்றன. அதேநேரம் மாவுப்பூச்சிகளை ஒரு தாவரத்திலிருந்து மற்றொரு தாவரத்துக்கு எறும்புகளே எடுத்துச் சென்று பரப்புகின்றன. எறும்புகளும் மாவுப்பூச்சிகளும் இப்படி இணக்கமான உறவைப் பராமரிக்கின்றன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pseudococcidae Heymons, 1915". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
  2. Encyclopedia of Life
  3. ஆதி வள்ளியப்பன் (27 சனவரி 2018). "பூச்சி வளர்க்கும் எறும்பு". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 29 சனவரி 2018.

மேலும் வாசிக்க

[தொகு]
  • Jahn, G. C. and J.W. Beardsley 1994. Big-headed ants, Pheidole megacephala: Interference with the biological control of gray pineapple mealybugs. In D.F. Williams [ed.] "Exotic Ants: Biology, Impact and Control of Introduced Species." Westview Press, Oxford, 199–205.
  • Jahn, G. C. and J.W. Beardsley 1998. Presence / absence sampling of mealybugs, ants, and major predators in pineapple. J. Plant Protection in the Tropics 11(1):73–79.
  • Jahn, Gary C., J. W. Beardsley and H. González-Hernández 2003. A review of the association of ants with mealybug wilt disease of pineapple. Proceedings of the Hawaiian Entomological Society. 36:9–28.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவுப்பூச்சி&oldid=3720022" இலிருந்து மீள்விக்கப்பட்டது