மம்தா தாக்கூர்
Appearance
மம்தா தாகூர் | |
---|---|
பங்கோன் தொகுதியின் மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 16 பிப்ரவரி 2015 – 23 மே 2019 | |
பின்னவர் | சாந்தனு தாக்கூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மே 15, 1964 சந்திரபூர், மகாராட்டிரம், இந்தியா |
அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
தொழில் | சமூகப்பணி |
மம்தா தாக்கூர்(Mamata Thakur) (பிறப்பு 15 மே, 1967) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர், பங்கான் மக்களவைத் தொகுதியில் 2015இல் நடந்த இடைத்தேர்தலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2019இல் நடந்த பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
தொழில்
[தொகு]மார்ச் 2015 முதல் இவர் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் நிலைக்குழுவின் உறுப்பினராக பணியாற்றினார். மக்களவை 2019இல் கலைக்கப்பட்டபோது இந்தப் பதவி முடிந்தது. சமயம் மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக, அரிசந்த் தாகூர் என்பவரால் 1860-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்து சமயத்தின் வைணவப் பிரிவு அமைப்பான் மாத்துவ மகாசங்கத்தின் மதத் தாயாக இருக்கிறார். இவர் தாகூர்நகரில் வசிக்கிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sixteenth Lok Sabha Members Bioprofile : Thakur, Smt. Mamata. loksabhaph.nic.in.