உள்ளடக்கத்துக்குச் செல்

மத்ரித் முற்றுகை

ஆள்கூறுகள்: 40°25′08″N 3°41′31″W / 40.41889°N 3.69194°W / 40.41889; -3.69194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்ரித் முற்றுகை
எசுப்பானிய உள்நாட்டுப் போர் பகுதி

மத்ரிதின் பார்க் டெல் ஓயெஸ்த் (மேற்கு பூங்கா)வில் பதுங்கு குழிகள்
நாள் முற்றுகை: நவம்பர் 1936 - மார்ச் 28, 1939
தேசியவாதிகளின் தாக்குதல்: நவம்பர் 8, 1936 - திசம்பரின் துவக்கம் 1936
இடம் மத்ரித், எசுப்பானியா
குடியரசுவாதிகள் 1936இல் தாக்குதலை எதிர்த்தும் முடிவில் 1939இல் தேசியவாதிகளுக்கு வெற்றி
பிரிவினர்
எசுப்பானியா இரண்டாவது எசுப்பானியக் குடியரசு எசுப்பானியா எசுப்பானிய தேசியவாதிகள்
இத்தாலி இராச்சியம் லீஜியன் வான்படை
நாட்சி ஜெர்மனி கொண்டோர் லீஜியன்
தளபதிகள், தலைவர்கள்
எசுப்பானியா ஒசே மியாகா
ஆன்சு பெய்ம்லெர்  
எசுப்பானியா என்ரிக் லிஸ்டர்
எசுப்பானியா அடோல்ஃபா பிராடா
எசுப்பானியா கார்லோசு ரோமெரோ
எசுப்பானியா ஒசே மாரியா கலன்
எசுப்பானியா பிரான்சிஸ்கோ கலன்
எசுப்பானியா லூயிசு பார்செலோ  மரணதண்டணை
எசுப்பானியா அன்டோனியோ எசுகோபார்
எசுப்பானியா எமிலியோ புயினோ
எசுப்பானியா ஒசே மாரியா என்சிசோ
பவோல் லூகாக்சு
சிப்ரியனோ மெரா
ஒசே பி. துர்ருடி 
எசுப்பானியா பிரான்சிஸ்கோ பிராங்கோ
எசுப்பானியா எமிலியோ மோலா
எசுப்பானியா ஒசே என்ரிக் வரேலா
எசுப்பானியா ஒசே மோசுகார்டோ இதுவார்தோ
எசுப்பானியா மொகமது மெசியான்
எசுப்பானியா கார்லோசு அசென்சியோ கபானில்லாசு
எசுப்பானியா ரோலண்டோ டெ டெல்லா
எசுப்பானியா பெர்னாண்டோ பேரன்
எசுப்பானியா அன்டானியோ கேஸ்ட்கான்
எசுப்பானியா பிரான்சிஸ்கோ அஃபான் டெல்கடோ
பலம்
42,000
50 பீரங்கிகள்
70 துப்பாக்கிகள்
20,000
30 பீரங்கிகள்
120 வானூர்திகள்
இழப்புகள்
~5,000 இறப்பு அல்லது காயம் (குடிகள் உட்பட) ~5,000 இறப்பு அல்லது காயம்
இழப்புகள் 1936ஆம் ஆண்டு நவம்பர் சண்டையில் மட்டும்

மத்ரித் முற்றுகை (Siege of Madrid) 1936 முதல் 1939 வரை நடந்த எசுப்பானிய உள்நாட்டுப் போரின் போது எசுப்பானியத் தலைநகரம் மத்ரித் இரண்டரை ஆண்டுகள் முற்றுகையிடப்பட்டதைக் குறிப்பதாகும். அக்டோபர் 1936 முதல் முற்றுகையிடப்பட்ட நகரம் முடிவில் மார்ச் 28, 1939இல் தேசியவாதிகளிடம் வீழ்ந்தது. இரண்டாவது எசுப்பானியக் குடியரசுக்கு விசுவாசமான பல படைகள் மத்ரித் வீழ்ச்சியடையாது இருக்கப் போராடின; தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோ தலைமையிலான போராளிக் குழுக்கள் முற்றுகையை நடத்தியும் வான்வழி குண்டு வீசியும் நகரை கைக்கொள்ள முயன்றன. 1936இல் நடந்த மத்ரித் சண்டையின் (Battle of Madrid) போது நகரைச் சூழ்ந்து மிகக் கடுமையான சண்டை நடந்தது; குடியரசுவாதிகளின் ஆதிக்கத்தில் இருந்த தலைநகரைக் கைப்பற்ற தேசியவாதிகள் மிகுந்த முயற்சி எடுத்தனர்.

எசுப்பானிய குடியரசின் மிக உயரிய படைத்துறை விருதுகளான மத்ரித் லாரேட் பிளேட் (எசுப்பானியம்: Placa Laureada de Madrid) மற்றும் மத்ரித் மேன்சிறப்பு (எசுப்பானியம்: Distintivo de Madrid),[1][2] எசுப்பானியத் தலைநகரத்தின் பெயரைத் தாங்கி நிற்கின்றன; உள்நாட்டு போரின்போது இந்த நீண்ட முற்றுகைக் காலத்தில் காட்டிய வீரத்தையும் துணிவையும் குறிக்கும் விதமாக இந்த விருதுகளுக்கு பெயரிடப்பட்டுள்ளன.[3]

மேற்சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]