மத்திய தமிழ்
மத்திய தமிழ் (The Central Tamil dialect ) என்பது தமிழகத்தின் மத்திய பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பேசப்படும் பேச்சு மொழியாகும். மத்திய தமிழகத்திற்கு அண்டையிலுள்ள கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட இப்பேச்சு மொழியே பேசப்படுகிறது[1][2] . மதுரைத் தமிழும் மத்தியப் பேச்சுத்தமிழ் மற்றும் இலங்கை வட்டார மொழிகளும் தமிழ் மொழியின் தூய்மையான பேச்சுத்தமிழ் வடிவங்களாகக் கருதப்படுகின்றன[3][4]. இவையே தரப்படுத்தப்பட்ட பேச்சுத் தமிழாகவும் திகழ்கின்றன. தமிழ் மொழியில் காணப்படும் பல்வேறு வகையான பேச்சுத்தமிழ் வழக்காறுகளில் மத்தியப் பேச்சுத்தமிழ் கிட்டத்தட்ட பிராமணத் தமிழ் வகையுடன் நெருக்கம் கொண்டுள்ளது[5] .குறிப்பாக உயர் சாதிப் பிரிவினர்களாக கருதப்படும் வெள்ளாளர்கள் மற்றும் முதலியார்கள் இப்பேச்சுத் தமிழைப் பேசுகிறார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dravidian case system, Volume 1. Annamalai University. 1976. p. 264.
- ↑ "Language Variation in Tamil". Archived from the original on 2011-07-23. பார்க்கப்பட்ட நாள் 2015-02-22.
- ↑ Sanford B. Steever (1998). Dravidian Languages. Taylor & Francis. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415100232, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-10023-6.
- ↑ Balasubramaniam, K. M. (1934). South Indian Celebrities Vol 1. Madras: Solden & Co. p. 84.