உள்ளடக்கத்துக்குச் செல்

மண்ணுளிப் பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்ணுளிப் பாம்பு
Gongylophis conicus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
பாம்புகள்
Serpentes
குடும்பம்:
Boidae
துணைக்குடும்பம்:
Erycinae
பேரினம்:
Gongylophis
இனம்:
G. conicus
இருசொற் பெயரீடு
Gongylophis conicus
(சினைடர், 1801)
வேறு பெயர்கள் [1]
  • போ கோனிகா - சினைடர், 1801
  • போ வைப்பெரினா - சா, 1802
  • போ ஒமாட்டா - டாட்லின், 1803
  • எரிக்சு பெங்காலென்சிசு - குரெய்ன், 1830
  • டார்ட்ரிக்சு எரிக்சு பெங்காலென்சிசு - Schlegel, 1837
  • காங்லிப்பிசு கோனிகசு - வாக்லர், 1842
  • எரிக்சு கோனிகசு - துமெரில் & பைப்ரன், 1844
  • எரிக்சு கோனிகசு வர். லேவிசு - பீட்டர்சு, 1869
  • காங்லிப்பிசு கோனிகசு - பெளலென்ஜெர், 1890
  • எரிக்சு கோனிகசு - பெளலென்ஜெர், 1893
  • எரிக்சு கோனிகசு பிரேவிசு - Deraniyagala, 1951
  • எரிக்சு கோனிகசு கோனிகசு - இராஜேந்திரன், 1967
  • எரிக்சு கோனிகசு கானசி - இராஜேந்திரன், 1971
  • காங்லிப்பிசு (காங்லிப்பிசு) கோனிகசு - Tokar, 1989
  • எரிக்சு கோனிகசு - Kluge, 1993
  • எரிக்சு. கோனிகசு - Szyndlar & Schleich, 1994
  • காங்லிப்பிசு (காங்லிப்பிசு) கோனிகசு - தோகர், 1995

மண்ணுளிப் பாம்பு[2] அயகரம்[3] (Gongylophis conicus) என்பது ஒரு நச்சுத் தன்மையற்ற பாம்பு. இது தன் இரையை நெரித்துக்கொன்று பின்னர் உட்கொள்ளும் என்பதால் இது ஒரு மலைப்பாம்பு வகையாகும். இதை மண் மலைப்பாம்பு என்றும், சிறிய மலைப்பாம்பு என்றும், மணியன் என்றும் அழைப்பர்.

உடலளவு

[தொகு]

இந்த பாம்பின் நீளம் பிறக்கும் போது 12.5 செ. மீட்டராகவும், நன்கு வளர்ந்தபின் சுமாராக 50 செ. மீட்டராக இருக்கும். அதிக அளவாக 100 செ. மீட்டர் வரை இதனுடைய நீளம் இருக்கலாம்.

மண் மலைப்பாம்பு

உடல் தோற்ற விளக்கம்

[தொகு]
  • சிறிய, தடித்த உடலுடையது.
  • தலை மற்றும் வாலின் செதில்கள் அதிகளவு கீலுடையது [சில சமயங்களில் கணுக்களாகவும் இருப்பதுண்டு]
  • சிறிய கண்ணும் செங்குத்தான கண்மணியும் உடையது.
  • மிகச்சிறிய வாலுடையது.

நிறம்

[தொகு]
  • பல்வேறு நிறங்களையுடையது : செம்பழுப்பு, மஞ்சள் கலந்த வெள்ளை, கரும்பழுப்பு அல்லது கருப்பு; சீரற்ற திட்டுகள் இப்பாம்பை கண்ணாடி விரியனைப்போல தோற்றமளிக்கச் செய்கின்றன.
  • உடலின் கீழ்ப்பகுதி மஞ்சள் கலந்த வெண்ணிறம்.

இயல்பு/பழக்கவழக்கம்

[தொகு]

இவை மாலை நேரங்களிலும் சூரியன் மறையும் நேரத்திலும் இரவிலும் தீவிரமாக நடமாடக்கூடியது. இரையை நெரித்துக் கொல்லும் தன்மையுடையன. எலி, இந்தியப் பெருச்சாளி போன்ற கொறித்துண்ணிகளின் வளைகளில் அதிகளவு காணப்படும்.[4] பதுங்கியிருந்து தாக்கும் முறையைப் பின்பற்றி பறவைகள் மற்றும் ஊர்வன ஆகியவற்றையும் வேட்டையாடும்.

இனப்பெருக்கம்

[தொகு]

இவை குட்டிகளை ஈனும் வகையினைச் சார்ந்தவை. 6 முதல் 8 குட்டிகளை மே முதல் சூலை வரை காலத்தில் ஈனுகின்றன.[5]

பிற முக்கிய இயல்புகள்

[தொகு]

தொந்தரவு தரப்பட்டால், உடலை உப்பச்செய்து விரியன் பாம்புகளைப் போல் இவை கொத்தும். ஆனால் இவற்றிற்கு நஞ்சு இல்லாததால் மாந்தருக்கும் பிற பெரிய விலங்குகளுக்கும் உயிரிழக்கும் வாய்ப்பு இல்லை.

பரவல்

[தொகு]

இவை இந்தியா முழுவதும் வடகிழக்கு, அந்தமான்-நிக்கோபார், இலச்சத்தீவுகள் நீங்கலாகவும், பாக்கித்தான், நேபாளம், வங்காளதேசம் மற்றும் இலங்கையில் காணப்படுகிறது.[1]

உருவ ஒற்றுமையுள்ள பிற பாம்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

தகவல் உதவி

[தொகு]

Snakes of India - The Field Guide -- இரோமுலசு விட்டேக்கர் மற்றும் அசோக் கேப்டன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 McDiarmid RW, Campbell JA, Touré T (1999). Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, Volume 1. Washington, District of Columbia: Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
  2. "நல்ல பாம்பு 7: மண்ணுளியும் இருதலை மணியனும் ஒன்றா?". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-06.
  3. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  4. Das (2002).
  5. சிற்றினம் Eryx conicus at The Reptile Database. Accessed 3 June 2019.