பெரிய கேளையாடு
பெரிய கேளையாடு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | முந்தியாகசு
|
இனம்: | மு. வூகுவாங்ஜெனிசிசு
|
இருசொற் பெயரீடு | |
முந்தியாகசு வூகுவாங்ஜெனிசிசு (துவாக், துவாங், தாவ்சன், அர்க்டாண்டெர் & மாக்கினோன், 1994) | |
புவிப்பரவல் | |
வேறு பெயர்கள் | |
மெகாமுந்தியாகசு வூகுவாங்ஜெனிசிசு (துவாக் மற்றும் பலர், 1994) |
பெரிய கேளையாடு (Giant muntjac)(முந்தியாகசு வூகுவாங்ஜெனிசிசு) சில நேரங்களில் பெரிய-கொம்பு கேளையாடு என்று குறிப்பிடப்படுகிறது. இது கேளையாட்டின் சிற்றினம் ஆகும். இது 1994ஆம் ஆண்டில் வியட்நாமின் ஹா டின்ஹ் மாகாணத்தின் வு குவாங் மற்றும் மத்திய லாவோசில் கண்டுபிடிக்கப்பட்டது. நாம் தியூன் 2 பல்நோக்கு திட்டத்திற்காக லாவோசின் கம்மோவான் மாகாணத்தில் உள்ள நகாய் நீர்த்தேக்கம் நீரில் மூழ்கியபோது, 38 மாபெரும் கேளையாடு மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு, அருகிலுள்ள நகாய்-நாம் தியூனின் தேசிய பாதுகாக்கப்பட்ட பகுதியில் விடுவிக்கப்பட்டது. இந்த விலங்குகளின் மாதிரியை அடுத்தடுத்த கதிர்வழி தடங்காணல் முறையில் இந்த இடமாற்றம் வெற்றிகரமாகச் செயல்பட்டதைக் காட்டியது.[3] இந்தச் சிற்றினம் கிழக்கு கம்போடியாவில் சில பகுதிகளிலும், அன்னமைட் மலைகளிலும் காணப்படுகின்றன.[4]
பெரும் கேளையாடு பொதுவாகப் பசுமைக் காடுகளில் காணப்படுகிறது. இது மற்றும் சுமார் 30 முதல் 50 கிலோ எடையைக் கொண்டுள்ளது.[5] இது சிவப்பு-பழுப்பு நிற மேற்றோலினைக் கொண்டுள்ளது.[4] காடு அழித்தல், விவசாயக் கழிவு எரிப்பு, வேட்டையாடுதலுடன் இணைந்து, மாபெரும் ஆபத்தினைக் கேளையாடு வாழ்வில் ஏற்படுத்துகிறது. எனவே இது மிக அருகிய இனமாகக் கருதப்படுகிறது.[4] இது புலி மற்றும் சிறுத்தை போன்ற விலங்குகளால் வேட்டையாடப்படுகிறது.[4] இது முந்தியகசு முன்ட்ஜக் (பொதுவான கேளையாடு) உடன் மிகவும் நெருக்கமாகத் தொடர்புடையது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Timmins, R.J.; Duckworth, J.W.; Robichaud, W.; Long, B.; Gray, T.N.E.; Tilker, A. (2016). "Muntiacus vuquangensis". IUCN Red List of Threatened Species 2016: e.T44703A22153828. https://www.iucnredlist.org/species/44703/22153828. பார்த்த நாள்: 9 June 2022.
- ↑ "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
- ↑ Stone, R. (2009). "Dam project reveals secret sanctuary of vanishing deer". Science 325 (5945): 1192. doi:10.1126/science.325_1192b. பப்மெட்:19729627.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 "Giant muntjac". WWF (World Wide Fund for Nature). 2020. Archived from the original on 2022-05-14. பார்க்கப்பட்ட நாள் 2023-04-06.
- ↑ Animal Info - Giant Muntjac