பிளாங்கு குளோரோ மெத்திலேற்றம்
Appearance
பிளாங்க் குளோரோ மெத்திலேற்றம் (Blanc chloromethylation) என்பது அரோமாட்டிக் வளையங்கள் வினைவேக மாற்றி துத்தநாக குளோரைடு முன்னிலையில் பார்மால்டிகைடு மற்றும் ஐதரசன் குளோரைடுடன் சேர்ந்து குளோரோ மெத்தில் அரீன்களைத் தரும் வேதி வினையாகும்[1][2]. குளோரோ மெத்திலேற்ற வினைகளைப் போலவே இவ்வினையையும் எச்சரிக்கையோடு மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், புற்றுநோயை விளைவிக்கக்கூடிய குளோரோ மெத்தில் ஈதர் உடன் விளை பொருளாகக் கிடைக்கிறது.