உள்ளடக்கத்துக்குச் செல்

பிரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரோ
பிறப்புஅண். கி.மு360
எலிசு, கிரீசு
இறப்புஅண். கி.மு270
காலம்பண்டைய மெய்யியல்
பகுதிமேற்கத்திய மெய்யியல்
பள்ளிஐயுறவியம்
செல்வாக்குச் செலுத்தியோர்

பிரோ (Pyrrho, (/ˈpɪr/; கிரேக்க மொழி: Πύρρων பிரோன், அண். கி.மு360 – அண். கி.மு270) ஒரு தொல்செவ்வியல் காலக் கிரேக்க மெய்யியலாளர். இவர் முதல் கிரேக்க ஐயுறவுவாத மெய்யியலாளராகக் கருதப்படுபவர். கி.மு முதல் நூற்றாண்டில் பிரோனியம் எனும் மெய்யியல் பள்ளி அனெசிடெமசுவால் நிறுவப்பட்டது.

வாழ்க்கை

[தொகு]

பிரோ அயோனியக் கடற்கரையில் அமைந்த எலிசைச் சேர்ந்தவர்.ஏதென்சுவின் அப்பொல்லோடோரசுவின் நூல்களில் இருந்துபெற்ற டையோஜீனெசு இலாயெர்ழ்சுவின் கூற்றுப்படி, இவர் முதலில் வண்ண ஓவியராக இருந்துள்ளார். இவரது ஓவியங்கள் எலிசுப் பள்ளியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பிறகு இவர் [[டெமாக்கிரட்டீசுவின் நூல்களால் ஈர்க்கப்பட்டு மெய்யியலுக்கு வந்துள்ளார். மேலும் இவர் மெகாரிய இணைமுரணியல் சிந்தனையில் சுட்டில்போவின் மாணவரான பிரைசனிடம் பயிற்சி பெற்றுள்ளார்.[1]

பேரரசர் அலெக்சாந்தர் கிழக்கத்திய நாடுகளை வெல்ல படையெடுத்தபோது பிரோவும் அனாக்சர்க்கசுவும் அவருடன் வந்துள்ளனர். அப்போது இந்திய மெய்யியல் பள்ளிகளிலும் பாரசீக அச்சாமெனிடு பேரரசின் மேகியிலும் படித்துள்ளார். இந்தக் கிழக்கத்திய மெய்யியலின் தொடர்புதான் இவரை துறவமைதியை நாட வைத்திருக்கலாம் எனக் கருதலாம்; பிறகு எலிசு திரும்பியதும் இவர் ஏழ்மையான வாழ்க்கையையே மேற்கொண்டுள்ளார். என்றாலும் எலிசு மக்களாலும் அதீனியர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டுள்ளார். குடிமகன் உரிமைகளும் தரப்பட்டுள்ளார்.

பிரோ எதையும் எழுதிவைக்கவில்லை. இவரது நெறிமுறைகள் மாணவரான பிலியசுவின் திமோன் இயற்றிய எள்ளற்பாணி எழுத்துகளில் பதிவாகியுள்ளன. இவையும் இப்போது கிடைக்கவில்லை. கிரேக்க மருத்துவரான Sextus Empiricus எழுதிய பிரோனிய அடிப்படைகள் என்ற நூல் வழியாகத் தான் பிரோவின் சிந்தனைகள் கிடைக்கின்றன.

மெய்யியல்

[தொகு]

பிரோ சிந்தனையின் முதன்மை நெறிமுறை acatalepsia என்ற கிரேக்கச் சொல்லால் குறிக்கப்படுகிறது. இதன் பொருள் தம்மியல்பாக உள்ள இம்மைப் பொருள்களின் உண்மையைப் பற்றிய நெறிமுறைகளில் இருந்து விலகி அறிஞர்கள் அவற்றைப் பற்றிப் பெருமிதம் பாராட்டாமல் நிற்கவேண்டும்.; ஏனெனில் முதலாவதாக ஒவ்வொரு கூற்றுக்கும் அதே வலுவுள்ள ஏரண முறையில் எதிர்முரண் கூற்றை கூறமுடியும். இரண்டாவதாக, இதனால் அறிதிற ஒத்திப்போடலைக் காக்கவேண்டும்.அல்லது திஓன் கூறுவதுபோல எந்த உறுதிப்பாடும் மற்றதைவிட எந்தவகையிலும் சரியன்று. மூன்றாவதாக, இந்த முடிவுகளைப் பொதுவாக வாழ்க்கை முழுவதற்குமே அவர் பயன்படுத்தினார். எதையுமே அறியமுடியாது என்பதால் ஒரேவழி ataraxia மனப்பான்மையை மேற்கொள்வதே என்றார். அதாவது கவலையின்றி வாழ்வதே நல்லது என முடிவாகக் கூறினார். ("உண்மைகாண் தீர்ப்பை ஒத்திப்போட்டுவிட்டு பொருள்களையும் நிகழ்வுகளையும் அவை தோன்றும்வகையில் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவற்றின் நிலவலைப் பற்றி உறுதியான முடிவேதும் கொள்ளவிட்டால் சிக்கலான புற அல்லது இம்மை வாழ்வை எளிதாகக் கடக்கலாம். மேலும் கட்டற்ற அமைதியில் வாழலாம்.")

பிரோவின் கூற்றுப்படி ஒரு முனிவர்/ அறிஞருக்கான சரியான வழி, அவர் தனக்குள் மூன்று கேள்விகளைக் கேட்டுக்கொள்ளவேண்டும்.. முத்லாவதாக,பொருள்வகைகள் எப்படி இருக்கின்றன எனக் கேட்டுக்கொள்ளவேண்டும். இரண்டாவதாக, அவற்றோடு நாம் கொண்டுள்ள உறவு எப்படி அமைந்துள்ளது என்று கேட்டுக்கொள்ளவேண்டும். மூன்றவதாக, அவற்றோடு நம் மனப்பான்மை எப்படி அமையவேண்டும் என்று கேட்டுக்கொள்ளவேண்டும். பிரோவின் விடை பொருளினங்கள் பிரித்துணர முடியாமலும் அளக்க அரிதாகவும் முடிவெடுக்க அரியனவாகவும் உள்ளன என்பதேயாகும். இது அதைவிட சரியல்ல அல்லது இதுவும் அதுவும் இரண்டுமே சரி அல்லது இதுவும் சரியன்று;அதுவும் சரியன்று. மந்தப் புலன்கள் உண்மையோ பொய்யோ தரவல்லன அல்ல என்று முடிவாகக் கூறுகிறார்.[2] பொருளைனங்களின் உட்கிடையை நாம் அறியவியலாது. அவற்றின் தோற்றம்மட்டுமே காணவியலும்.

அறிவை அடைய இயலாமை நம்சொந்த அறியாமையையும் ஐயத்தையும் கூட அறிய இயலாமை பேரறிஞனைத் தன்னுள் முடங்கவைக்கும். இது அவரை பொருளற்ற வீண்கற்பனைகள் தூண்டும் உணர்ச்சிகளில் இருந்தும் மன இறுக்கத்தில் இருந்தும் விடுபட வழிவகுக்கும். இந்த அறிவை அடைய இயலாமைக் கோட்பாடு மேற்கத்திய மெய்யியலில் முதன் முதலாக நன்கு விளக்கப்படும் [[அறிதல் மறுப்பியம்]] ஆகும்.[சான்று தேவை] சுதயிக்குகள், எபிக்கியூரியர்கள் சார்ந்த கருத்தியலான அமைதியோடு ஒப்பிட்டு இவரது கூற்றின் அறவியல் தாக்கத்தை உணரலாம்.

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Diogenes' testimony is doubtful. See Bett (2000) 1.
  2. Long and Sedley (1987) vol. 1, pp. 14-17, vol. 2, pp. 5-7.

மேற்கோள்கள்

[தொகு]
  • Public Domain இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 
  • Algra, K., Barnes, J., Mansfeld, J. and Schofield, M. (eds.), The Cambridge History of Hellenistic Philosophy, Cambridge: Cambridge University Press, 1999.
  • Annas, Julia and Barnes, Jonathan, The Modes of Scepticism: Ancient Texts and Modern Interpretations,Cambridge: Cambridge University Press, 1985.
  • Bett, Richard, "Aristocles on Timon on Pyrrho: The Text, Its Logic and its Credibility" Oxford Studies in Ancient Philosophy 12, (1994): 137-181.
  • Bett, Richard, "What did Pyrrho Think about the Nature of the Divine and the Good?" Phronesis 39, (1994): 303-337.
  • Bett, Richard, Pyrrho, His Antecedents, and His Legacy, Oxford: Oxford University Press, 2000.
  • Brunschwig, Jacques, "Introduction: the Beginnings of Hellenistic Epistemology" in Algra, Barnes, Mansfeld and Schofield (eds.), The Cambridge History of Hellenistic Philosophy, Cambridge: Cambridge University Press, 1999, 229-259.
  • Burnyeat, Myles (ed.), The Skeptical Tradition, Berkeley: University of California Press, 1983.
  • Burnyeat, Myles and Frede, Michael (eds.), The Original Sceptics: A Controversy, Indianapolis: Hackett, 1997.
  • Doomen, Jasper, "The Problems of Scepticism" Logical Analysis and History of Philosophy 10 (2007): 36-52.
  • Hankinson, R.J., The Sceptics, London: Routledge, 1995.
  • Kuzminski, Adrian, Pyrrhonism; How the Ancient Greeks Reinvented Buddhism, Lanham, Lexington Books, 2008.
  • Long, A.A., Hellenistic Philosophy: Stoics, Epicureans, Sceptics, University of California Press, 1986.
  • Long, A.A. and Sedley, David, The Hellenistic Philosophers, Cambridge: Cambridge University Press, 1987.
  • Striker, Gisela, "On the difference between the Pyrrhonists and the Academics" in G. Striker, Essays on Hellenistic Epistemology and Ethics, Cambridge: Cambridge University Press, 1996, 135-149.
  • Striker, Gisela, "Sceptical strategies" in G. Striker, Essays on Hellenistic Epistemology and Ethics, Cambridge: Cambridge University Press, 1996, 92-115.
  • Striker, Gisela, "The Ten Tropes of Aenesidemus" in G. Striker, Essays on Hellenistic Epistemology and Ethics, Cambridge: Cambridge University Press, 1996, 116-134.
  • Svavarsson, Svavar Hrafn, "Pyrrho’s dogmatic nature", The Classical Quarterly, 52 (2002): 248-56.
  • Svavarsson, Svavar Hrafn, "Pyrrho’s undecidable nature", Oxford Studies in Ancient Philosophy, 27 (2004): 249-295.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரோ&oldid=4025282" இலிருந்து மீள்விக்கப்பட்டது