உள்ளடக்கத்துக்குச் செல்

பிரீதிகா ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரீதிகா ராவ்
2015 ஆம் ஆண்டின் ஒரு நிகழ்ச்சியின் போது
பிறப்புபிரீதிகா ராவ்
தேசியம்இந்தியன்
கல்விசோப்ஃபியா கல்லூரி
பணிநடிகர், எழுத்தாளர், பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2012–தற்போது வரை
அறியப்படுவதுஆலியா (பேந்தியா)
உறவினர்கள்அம்ரிதா ராவ் (சகோதரி)

பிரீதிகா ராவ் (Preetika Rao) என்பவர் இந்திய நடிகை, எழுத்தாளர், பாடகர் மற்றும் விளம்பரத்தோற்றத்தில் நடிப்பவர் ஆவார். இந்தித் தொலைக்காட்சி நிகழ்ச்ச்சியான பீன்தேயா மூலம் பிரபலமானார்.[1][2] இந்தத் தொடரானது தமிழ் மொழியில் அலைபாயுதே எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.[3]

சொந்த வாழ்க்கை

[தொகு]

பிரீதிகா ராவின் தந்தை மும்பையில் ஒரு விளம்பர நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார். இவருக்கு அம்ரிதா ராவ் எனும் சகோதரி உள்ளார். அவர் பாலிவுட்டில் நடிகையாக உள்ளார்.இவர், சோஃபியா கல்லூரியில் வரலாற்றுப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும் இதழ் மற்றும் விளம்பரப் பிரிவில் பட்டயப் படிப்பினை முடித்துள்ளார்.[4][5]

தொழில்

[தொகு]

தன்னுடைய விளம்பரத் தோற்ற வாழ்க்கையினை கேட்பரி டைரி மில்க் விளம்பரத்திலிருந்து தொடங்கினார். அந்த விளம்பரத்தில் அமிதாப் பச்சனுடன் நடித்தார். அதனை சூஜித் சர்க்கார் என்பவர் இயக்கியிருந்தார். பின் திரைப்பட இதழியழுக்காக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி டெக்கன் குரோனிக்கள், சவுத் சைட், பெங்களூரு மிர்ரர், இந்தியன் ஃபோரம்சு, ஏசியன் ஏஜ் போன்ற இதழ்களுக்குச் சென்றார்.

தனது கல்வியைத் தொடருவதற்காக தனக்கு வந்த பாலிவுட் திரைப்படங்களான ஜானே து...யா ஜனே னா (2008) மற்றும் 2013 ஆம் ஆண்டில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற ஆஷிக்கி 2 போன்ற திரைப்பட வாய்ப்புகளை மறுத்தார்.[6]

பிரீதிகா ராவ் , சிக்கு புக்கு எனும் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தை மீடியா ஒன் குளோபல் நிறுவனம் தயாரித்திருந்தது. இவர்கள் ரசினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தைத் தயாரித்தவர்கள் .[7] இந்தத் திரைப்படத்தில் ஆர்யா உடன் நடித்திருப்பார். நியூயார்க் திரைப்பட அகாதமியில், இதழ் ஒளிபரப்பு தொடர்பான பட்டயப்படிப்பு படிக்கச் சென்றதால் திரைப்பட வாய்ப்புகளை ஏற்கவில்லை.[8]

2014 ஆம் ஆண்டில், பிராந்திய சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு தேசியத் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கச் சென்றார். கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளிவந்த பீந்தேயா எனும் தொடரில் ஆலியா ஜெயின் அப்துல்லா கதாப்பாத்திரத்தில் நடித்தார். சனவரி, 2015 இல் கொல்கத்தாவில் நடைபெற்ற கலாகர் விருது (அச்சு ஊடங்களுக்கான விருது) நிகழ்ச்சியில் சிறந்த பெண் நடிக்கைக்கான விருதினைப் பெற்றார்.[9] மேலும் அதே ஆண்டில் சிறந்த அறிமுக நடிகைக்கான ஜீ கோல்டு பெஸ்ட் விருதினைப் பெற்றார்.[10]

திரைப்படங்கள்

[தொகு]

தமிழ்

[தொகு]

2010 ஆம் ஆண்டில் தமிழில் சிக்கு புக்கு எனும் திரைப்படத்தில் முதன்முறையாக நடித்தார். கோச்சடையான் திரைப்படத்தைத் தயாரித்த குளோபல் ஒன் நிறுவனம் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்தது. இந்தத் திரைப்படத்தில் அம்மு மீனாள் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஆர்யா முதன்மைக் கதாப்பத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் கதாப்பத்திரத்தில் நடிக்க முதலில் வித்யா பாலனிடம் தான் கேட்கப்பட்டது.[11] பின் பிரீதிகா ராவை ஒப்பந்தம் செய்தனர். மணிகண்டன் என்பவர் இந்தத் திரைப்படத்தை இயக்கினார். டிசம்பர் 3, 2010 இல் வெளியான இத்திரைப்படத்திற்கு இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியது. இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி பெற்றது. இந்தத் திரைப்படத்திற்கு சுமாரான வரவேற்பு கிடைத்தது.[12]

தெலுங்கு

[தொகு]

2012 ஆம் ஆண்டில் தெலுங்கில் பிரியுடு எனும் திரைப்படத்தில் மது லதா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

சான்றுகள்

[தொகு]
  1. Moviebuzz (2010). "Preetika on her debut and her dreams". Sify. Archived from the original on 16 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 14 December 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. ராகவன் .,நிகில் (1 டிசம்பர் 2010). "பயணம் தொடங்குகிறது". சென்னை, இந்தியா: தி இந்து இம் மூலத்தில் இருந்து 2012-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121021221926/http://www.thehindu.com/arts/cinema/article925489.ece. பார்த்த நாள்: 1 டிசம்பர் 2010. 
  3. http://tvnews4u.com/raj-tv-launches-alaipayuthey-at-8-30-pm-from-15th-september-onwards/
  4. ராகவன் நிகில் (1 டிசம் பர்2010). "பயணம் தொடங்குகிறது". சென்னை, இந்தியா: தி இந்து இம் மூலத்தில் இருந்து 2012-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121021221926/http://www.thehindu.com/arts/cinema/article925489.ece. பார்த்த நாள்: 1 டிசம்பர் 2010. 
  5. ராஜா மனி , ராதிகா (29 நவம்பர் 2010). "கர்மா என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது". ரெடிஃப். பார்க்கப்பட்ட நாள் 29 நவம்பர் 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. Preetika Rao: I don’t repent refusing Aashiqui 2 – Times of India. Timesofindia.indiatimes.com (11 July 2014). Retrieved on 14 May 2016.
  7. ராஜாமனி, ராதிகா (29 நவம்பர்2010). "'I'm a strong believer in karma'". ரெடிஃப். பார்க்கப்பட்ட நாள் 29 நவம்பர் 2010. {{cite web}}: Check date values in: |date= (help)
  8. Kavirayani, Suresh (6 May 2012). "Preetika goes back to School!". The Times Of India இம் மூலத்தில் இருந்து 19 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131219132922/http://articles.timesofindia.indiatimes.com/2012-05-06/news-interviews/31588061_1_preetika-rao-kannada-debut-film-school. பார்த்த நாள்: 9 September 2016. 
  9. ‘Kolkata was a well planned spiritual trip’ – Preetika Rao. TheTellyTimes.com (19 January 2015). Retrieved on 14 May 2016. பரணிடப்பட்டது 2015-03-17 at the வந்தவழி இயந்திரம்
  10. Narayan, Girija. (21 May 2014) Zee Gold Awards 2014 Complete List Of Winners – Filmibeat பரணிடப்பட்டது 2014-06-13 at the வந்தவழி இயந்திரம். Entertainment.oneindia.in. Retrieved on 14 May 2016.
  11. V Lakshmi (15 November 2010). "Preetika's ride to stardom". the times of india இம் மூலத்தில் இருந்து 11 ஆகஸ்ட் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811175929/http://articles.timesofindia.indiatimes.com/2010-11-15/news-interviews/28219677_1_preetika-chikku-bhukku-arya-and-shriya. பார்த்த நாள்: 15 November 2010. 
  12. "Arya gets Genelia and Preetika!". sifi. 10 பெப்பிரவரி 2009. Archived from the original on 13 பெப்பிரவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2009.

வெளியிணைப்புகள்

[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பிரீதிகா ராவ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீதிகா_ராவ்&oldid=3587595" இலிருந்து மீள்விக்கப்பட்டது