உள்ளடக்கத்துக்குச் செல்

பியுட்டான் மாவட்டம்

ஆள்கூறுகள்: 28°05′N 082°50′E / 28.083°N 82.833°E / 28.083; 82.833 (Pyuthan District, Nepal)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாளத்தில் பியுட்டான் மாவட்டத்தின் அமைவிடம்

பியுட்டான் மாவட்டம் (Pyuthan) (நேபாளி: प्युठान जिल्लाகேட்க), தெற்காசியாவின் நேபாள நாட்டின் மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியத்தின் மாநில எண் 5-இல் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் புயுட்டான் நகரம் ஒரு நகராட்சி மன்றமும் ஆகும். இந்நகரம், நேபாளத் தலைநகரான காட்மாண்டிலிருந்து மேற்கே இருநூற்றி ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

ரப்தி மண்டலத்தின் மலைப்பாங்கான மாவட்டமான பியுத்தான் மாவட்டம் 1,309 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 2,26,796 ஆகும். இம்மாவட்ட மக்கள் நேபாள மொழி, நேபாள் பாஷா, காம்குரா மொழிகள் பேசுகின்றனர்.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

[தொகு]
ரப்தி மண்டலத்தில் பியுட்டான் மாவட்டத்தின் அமைவிடம், (மஞ்சள் நிறத்தில்)

பியுட்டான் மாவட்டதின் மேற்கில் ரோல்பா மாவட்டம், தென்கிழக்கில் லும்பினி மண்டலத்தின் குல்மி மாவட்டம் மற்றும் அர்காகாஞ்சி மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளது.

இம்மாவட்டத்தின் கோடைக் காலத்தில் நெற்பயிரும், குளிர்காலத்தில் கோதுமையும் பயிரிடப்படுகிறது.

இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 3,000 மீட்டர் உயரம் வரை இமயமலையில் பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்ப காலநிலை மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் என நான்கு காலநிலைகளில் காணப்படுகிறது. [1]

பியுட்டான் மாவட்டதின் மேற்கில் ரோல்பா மாவட்டம், தென்கிழக்கில் லும்பினி மண்டலத்தின் குல்மி மாவட்டம் மற்றும் அர்காகாஞ்சி மாவட்டங்களும், தெற்கில் தாங் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. கோடைக் காலத்தில் நெற்பயிரும், குளிர்காலத்தில் கோதுமையும் பயிரிடப்படுகிறது.

வரலாறு

[தொகு]

சௌபிசி இராச்சியத்தின் இருபத்தி நான்கு குறுநில மன்னர்கள் ஆண்ட நிலப்பரப்புகளுல் பியுட்டான் அரசும் இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பகுதியில் நேபாள ஷா வம்ச மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா ஆட்சிக் காலத்தின் போது ஐக்கிய நேபாள இராச்சியத்தை நிர்மானிக்கும் போது, சௌபிசி இராச்சியத்துடன் பியுட்டான் அரசும் ஐக்கிய நேபாள இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.

கிராம வளர்ச்சி மன்றங்கள்

[தொகு]
பியுட்டான் மாவட்டத்தின் கிராம வளர்ச்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்

பியுட்டான் மாவட்டம் ஒரு நகராட்சியும், ஐம்பத்தி ஐந்து கிராம வளர்ச்சி மன்றங்களையும் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013 {{citation}}: horizontal tab character in |series= at position 89 (help)

வெளி இணைப்புகள்

[தொகு]