பால் கறத்தல்
கால்நடைகள், எருமை, மனிதர், ஆடு, செம்மறியாடு மற்றும் அரிதாக ஒட்டகம், குதிரை மற்றும் கழுதை ஆகியவற்றின் பாற்சுரப்பியிலிருந்து பாலை அகற்றும் செயல் பால் கறத்தல் (Milking) ஆகும். பால் கறத்தல் கையால் அல்லது இயந்திரம் மூலம் செய்யப்படலாம். பால்கறத்தலானது தற்போது அல்லது சமீபத்தில் கர்ப்பமாக விலங்குகளிலிருந்து பெறப்படுகிறது. பாலானது எந்த விலங்கிலிருந்து கறக்கப்படுகிறதே அந்த விலங்கில் பெயரில் குறிப்பிடப்படுகிறது. எ.கா. பசும்பால் (பசுவிலிருந்து கறக்கப்பட்ட பால்).[1]
கைமூலம் பால் கறத்தல்
[தொகு]கையினால் பால் கறப்பது என்பது பசு மாடுகளின் மடிகளில் தடவியும், முலக்காம்புகளைக் கீழே இழுப்பதன் மூலமும், பாலை ஒரு வாளியில் பீச்சியடிக்கச் செய்யப்படுகிறது. இதில் இரண்டு முக்கிய முறைகள் பயன்படுத்தப்படுகின்றன:
- முலைக்காம்பின் மேற்பகுதி விரலுக்கும் கட்டைவிரலுக்கும் இடையில் மூடப்பட்டு, கீழ்ப் பகுதியில் பாலைப் பெறுதல். பின்னர் மற்ற விரல்களால் கசக்கி, முலைக்காம்பின் நுனியில் உள்ள துளை வழியாகப் பாலை வெளியேற்றுதல்.
- முலைக்காம்பின் மேற்பகுதியினை விரல்கள் மற்றும் கட்டைவிரலால் மூடி, பின்னர் முலைக்காம்பின் கீழ் நழுவி, பாலை கீழ் நோக்கித் தள்ளுதல்.
இயந்திரம் மூலம் பால் கறத்தல்
[தொகு]பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் பால் பண்ணைகளில் பால் கறக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தி பால் கறக்கப்படுகிறது. முலைக் காம்புகளில் கோப்பைகள் பசுவின் காம்புகளுடன் இணைக்கப்படுகின்றன. பின்னர் கோப்பையில் வெற்றிடத்திற்கும் சாதாரண காற்று அழுத்தத்திற்கும் இடையில் மாறி மாறி பால் பிரித்தெடுக்கப்படுகின்றன. பால் சேமிப்பதற்காகப் பெரிய கலனுடன் இந்த குழாய்கள் இணைக்கப்பட்டிருக்கும். மொத்தமாகப் பாலானது தொட்டியில் சேர்க்கப்படுவதற்கு முன்பு வடிகட்டப்பட்டுக் குளிர்விக்கப்படுகிறது.
தற்போதுள்ள ரோபோ முறியில் பால் கறப்பதில் மாடுகள் எப்போது பால் கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரத்தை அனுமதித்துள்ளது.[2]
நச்சு கறத்தல்
[தொகு]நச்சுஎதிர்பொருள் உற்பத்திக்காக, பாம்புகள் மற்றும் சிலந்திகளிலிருந்து விசத்தை அகற்றுவதை விவரிக்கப் பால் கறத்தல் என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்படுகிறது.
மேலும் காண்க
[தொகு]- மார்பக பம்ப்
- அமைப்புக்கு பால் கறத்தல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Definition of MILKER". www.merriam-webster.com. பார்க்கப்பட்ட நாள் 11 November 2016.
- ↑ Billingsley, John; Visala, Arto; Dunn, Mark (2008), "Robotics in Agriculture and Forestry", Springer Handbook of Robotics (in ஆங்கிலம்), Springer Berlin Heidelberg, pp. 1065–1077, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-540-30301-5_47, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783540239574
{{citation}}
: Missing or empty|url=
(help)