உள்ளடக்கத்துக்குச் செல்

பாற்சுரப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனிதப் பெண்ணின் பாற்சுரப்பி
பாற்சுரப்பியின் குறுக்கு வெட்டுத் தோற்றம்.
1. மார்புச் சுவர்
2. கொங்கைத் தசைகள்
3. முனைகள்
4. முலைக்காம்பு
5. முலைக்காம்புத் தோல்
6. பாலேந்து நாளம்
7. கொழுப்பிழையம்
8. தோல்
விளக்கங்கள்
முன்னோடிஇடையுறுப் பட்டை
 (குருதி கலன்களும் இணைப்பு திசுக்களும்)
புறச்சருமியம்[3]
 (கலக் கூறுகள்)
தமனிஉள்ளக மார்புக் கூட்டுத் தமனி
பக்கவாட்டு மார்புக்கூட்டு தமனி[1]
சிரைஉள்ளக மார்புக் கூட்டு சிரை
அக்குள் சிரை[1]
நரம்புகாரை மேலைய நரம்புகள்
விலா இடைவெளி நரம்புகள்[2]
 (பக்கவாட்டு, மருத்துவப் பிரிவுகள்)
நிணநீர்மார்புடை அக்குள் நிணநீர்க் கணுக்கள்[1]
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்glandula mammaria
TA98A16.0.02.006
TA27099
FMA60088
உடற்கூற்றியல்

பாற்சுரப்பி அல்லது பாலூட்டிச் சுரப்பி (mammary gland) பெண்னினப் பாலூட்டிகளில் தனது இளம் சேய்களுக்கு கொடுப்பதற்கான பாலைச் சுரக்கும் உறுப்பாகும். மனிதர்களில் இந்தச் சுரப்பிகள் மங்கையரின் கொங்கைகளில் அமைந்துள்ளன. பசு, ஆடு, மான் போன்ற அசையிடும் விலங்கினங்களில் பாலூட்டிச் சுரப்பிகள் பால்மடிகளில் உள்ளன. உயர்திணை இனங்களல்லாத நாய், பூனை போன்ற பாலூட்டிகளில் பாற்சுரப்பிகள் சில நேரங்களில் டக்சு எனப்படுகின்றன.

கட்டமைப்பு

[தொகு]

முழுமையாக வளர்ந்த பாற்சுரப்பியின் அடிப்படை கூறுகளாக சிற்றறைகளைச் (சில மில்லிமீட்டரே அளவுள்ள காலியிட துளைகள்) அடுத்த பால் சுரக்கும் கனசதுர கலங்களும் இவற்றைச் சூழ்ந்துள்ள தசைமேல் தோலிழைம அணுக்களும் ஆகும். இந்தச் சிற்றறைகள் இணைந்து லோபூல்கள் எனப்படும் முனைகள் ஆகின்றன. ஒவ்வொரு லோபூலிலிருந்தும் பாலேந்து நாளங்கள் கிளம்பி முலைக்காம்பில் முடிகின்றன. தசைமேல் தோலிழைம அணுக்கள் ஆக்சிடாசினின் தூண்டுதலில் சுருங்க, சிற்றறையில் சுரக்கப்படும் பால் முலைக்கொம்பிற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சேய் சப்பும்போது ஆக்சிடாசின் தாக்கத்தில் "கைவிடு மறிவினை" நிகழ்கின்றது; சேயின் வாயில் தாயின் பால் சுரக்கப்படுகின்றது — நாளத்திலிருந்து உறிஞ்சப்படுவதில்லை .

ஒரு பாலேந்து நாளத்திற்கு வருகின்ற அனைத்து பால் சுரக்கும் திசுக்களும் "எளிய பாற்சுரப்பி" எனப்படுகின்றன; அனைத்து எளிய பாற்சுரப்பிகளும் ஒரு முலைக்காம்பிற்கு வழங்குவதை "சிக்கலான பாற்சுரப்பி" என்கிறோம். மனிதர்களுக்கு பொதுவாக ஒவ்வொரு கொங்கையிலும் ஒன்றாக இரண்டு சிக்கலான பாற்சுரப்பிகள் உள்ளன. மனிதர்களின் சிக்கலான பாற்சுரப்பிகளில் 10 முதல் 20 வரையிலான எளிய பாற்சுரப்பிகள் உள்ளன. இரண்டு முலைக்காம்புகளுக்கு மேலாக இருப்பவை பாலிதெலியா என்றும் இரண்டு சிக்கலான பாற்சுரப்பிகளுக்கு மேலுள்ளவை பாலிமாசுத்தியா என்றும் குறிக்கப்படுகின்றன.

பாலேந்து நாளங்களின் மரவடிவ (வேர்.தண்டு,கிளைகள்) உள்ளமைப்பை சரியாக வைத்திருக்க மற்றொரு இன்றியமையா கூறு தேவைப்படுகின்றது – பாற்சுரப்பி தோல் மேற்புறக் கலங்களின் வெளிப்பொருள் அணி (ECM). இதுவும் கொழுப்பினித்திசுக்கள், நார்முன் கலங்கள், அழற்சிக் கலங்கள், மற்றும் பிறவும் பாற்சுரப்பி இழையவலையை உருவாக்குகின்றன.[4] பாற்சுரப்பி தோல் மேற்புறக் கலங்களின் வெளிப்பொருள் அணி முதன்மையாக மேற்புறக் கலங்களாலான அடித்தள சவ்வையும் இணையிழையத்தையும் கொண்டுள்ளது. இவை பாற்சுரப்பிக்கான அடிப்படை வடிவத்தை தாங்குவதோடு உறுப்பின் பல்வேறு கட்ட வளர்ச்சியின்போது பாற்சுரப்பி தோல் மேற்புறத்திற்கும் உள், வெளி சூழலுக்கும் பாலமாக அமைகின்றது.[5][6]

இழையவியல்

[தொகு]
Light micrograph of a human proliferating mammary gland during estrous cycle. Sprouting gland tissue can be seen in the upper left field (haematoxylin eosin staining)

பாற்சுரப்பிகள் ஓர் குறிப்பிட்ட வகை அப்போக்கிரைன் சுரப்பியாகும்; இவை சேய் பிறப்பின்போது சீம்பால் உற்பத்தி செய்வதற்கான திறனுடையவை. பாற்சுரப்பிகள் "தலைவெட்டு" சுரத்தல் பண்பைக் கொண்டிருத்தலால் அப்போக்கிரைன் சுரப்பிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன. பல நூல்கள் பாற்சுரப்பிகளை மாற்றப்பட்ட வியர்வை நாளங்களாக குறிப்பிடுகின்றன.[7][8][9] இருப்பினும் சில அறிஞர்கள் இதனை ஏற்பதில்லை; மாற்றாக இவை கொழுப்புச் சுரப்பிகள் என வாதிடுகின்றனர்.[7]

படத் தொகுப்பு

[தொகு]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Macéa, José Rafael; Fregnani, José Humberto Tavares Guerreiro (1 December 2006). "Anatomy of the Thoracic Wall, Axilla and Breast". International Journal of Morphology 24 (4). doi:10.4067/S0717-95022006000500030. 
  2. Lawrence, Ruth A.; Lawrence, Robert M. Breastfeeding: A Guide for the Medical Profession (7th ed.). Maryland Heights, Maryland: Mosby/Elsevier. p. 54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781437735901.
  3. Gray, Henry (1918). Anatomy of the Human Body.
  4. Watson, C. J.; Khaled, W. T. (2008). "Mammary development in the embryo and adult: A journey of morphogenesis and commitment". Development 135 (6): 995–1003. doi:10.1242/dev.005439. பப்மெட்:18296651. 
  5. Wiseman, B. S.; Werb, Z. (2002). "Stromal Effects on Mammary Gland Development and Breast Cancer". Science 296 (5570): 1046–1049. doi:10.1126/science.1067431. பப்மெட்:12004111. 
  6. Pavlovich, A. L.; Manivannan, S.; Nelson, C. M. (2010). "Adipose Stroma Induces Branching Morphogenesis of Engineered Epithelial Tubules". Tissue Engineering Part A 16 (12): 3719–3726. doi:10.1089/ten.TEA.2009.0836. பப்மெட்:20649458. 
  7. 7.0 7.1 Ackerman (2005) ch.1 Apocrine Units பரணிடப்பட்டது 2011-04-21 at the வந்தவழி இயந்திரம்
  8. Moore (2010) ch.1 Thorax, p. 99
  9. Krstic, Radivoj V. (18 March 2004). Human Microscopic Anatomy: An Atlas for Students of Medicine and Biology. Springer. p. 466. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783540536666.

நூற்றொகை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாற்சுரப்பி&oldid=3428750" இலிருந்து மீள்விக்கப்பட்டது