பள்ளிப் பேருந்து
பள்ளிப் பேருந்து (School bus) என்பது பள்ளிக்குச் சொந்தமான, குத்தகைக்கு அல்லது ஒப்பந்தம் செய்யப்பட்டோ இயக்கப்படும் பேருந்து ஆகும். பள்ளிக்கு அல்லது பள்ளி தொடர்பான நடவடிக்கைகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு இது வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. [1] உலகம் முழுவதிலும் பல்வேறு வடிவமைப்புகள் பள்ளிப் பேருந்துகளில் காணப்படுகிறது. பரவலாக பள்ளிப் பேருந்துகளில் மஞ்சள் வண்ணம் பயன்படுத்தப்படுகிறது.
வட அமெரிக்காவில், பள்ளிப் பேருந்துகள், கூட்டாட்சி மற்றும் மாநில/மாகாண விதிமுறைகளுக்கு தகுந்தாற்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் மஞ்சள் வண்ணத்திற்கும் கூடுதலாக எச்சரிக்கை விளக்குகள் மற்றும் பல பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. [2]
வடிவமைப்பின் வரலாறு
[தொகு]19 ஆம் நூற்றாண்டு
[தொகு]19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், அமெரிக்கா மற்றும் கனடாவின் பல கிராமப்புறங்களில் ஒரு வகுப்பறை கொண்ட பள்ளிகள் நடைபெற்றன. நடந்து செல்ல இயலாத அளவில் உள்ள தூரத்தில் இருந்து படிக்க வரும் மாணவர்களுக்காக குதிரை வண்டி ஏற்பாடு செய்யப்பட்டது. [3]
வடிவமைப்பு மீள்பார்வை
[தொகு]தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) ஆகியவற்றின் படி, பள்ளி பேருந்துகள் சாலை வாகனங்களிலே பாதுகாப்பான வகையாகும். [4] சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ஐந்து இறப்புகள் பள்ளிப் பேருந்தினால் பள்ளி வயதுக் குழந்தைகள் இறக்கின்றனர்.இது தானுந்தில் செல்வதை விட 70 மடங்கு பாதுகாப்பானது. [5]
சான்றுகள்
[தொகு]- ↑ "National School Transportation Specifications and Procedures 2015 Edition" (PDF). pp. 342–343. Archived from the original (PDF) on 2017-06-30. பார்க்கப்பட்ட நாள் 2017-10-02.
- ↑ Highway Safety Program Guidelines: Pupil Transportation Safety பரணிடப்பட்டது 2011-12-31 at the வந்தவழி இயந்திரம். National Highway Traffic Safety Administration website. Retrieved 2010-06-23.
- ↑ Mark Theobald (2004). Wayne Works. Coachbuilt.com. Retrieved 2010-04-26
- ↑ Dr Kristin Poland of NTSB, quoted at a hearing into a fatal 2012 bus crash at Chesterfield, Missouri, in "Buses safer than cars", Circular, Bus and Coach Association of New Zealand, August 2013.
- ↑ amy.lee.ctr@dot.gov (2016-09-09). "School Bus Safety". NHTSA (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-08.