நிருபமா ராவ்
நிருபமா ராவ் | |
---|---|
ஐக்கிய அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் | |
பதவியில் 1 ஆகத்து 2011 – 5 நவம்பர் 2013 | |
முன்னையவர் | மீரா சங்கர் |
பின்னவர் | எஸ். ஜெய்சங்கர் |
இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் | |
பதவியில் 31 யூலை 2009 – 31 யூலை 2011 | |
முன்னையவர் | சிவ்சங்கர் மேனன் |
பின்னவர் | ரஞ்சன் மத்தாய் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 திசம்பர் 1950 மலப்புறம், கேரளா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
வேலை | இராஜதந்திரி |
நிருபமா ராவ் எனப் பரவலாக அறியப்படும் நிருபமா மேனன் ராவ், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி ஆவார். இவர் பெரு, சீனா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இந்தியத் தூதராகவும், இலங்கைக்கான உயர் ஆணையராகவும் பணியாற்றியவர்.[1] 2009 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் இந்தியாவின் வெளியுறவுத்துறைச் செயலராகப் பணியாற்றிய இவருக்கு, இந்தியாவில் இப்பதவியை வகித்த இரண்டாவது பெண் என்ற பெருமையும் உண்டு.
இளம்பருவம்
[தொகு]இவர் கேரளாவின் மலப்புறத்தில் பிறந்தவர். இவருடைய தந்தையார் இராணுவத்தில் பணிபுரிந்தார். இதனால், பெங்களூர், புனே, லக்னோ, குன்னூர் போன்ற பல்வேறு இடங்களில் கல்வி பயின்றார். 1970ல், பெங்களூருவில் இருந்த மவுன்ட் கார்மல் கல்லூரியில், ஆங்கிலத்தில் இளங்கலைச் சிறப்புப் பட்டம் பெற்றார்.[2] பின்னர், அக்காலத்தில் மரத்வாடா பல்கலைக்கழகம் என அறியப்பட்ட மகாராட்டிரத்தில் இருந்த பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். 1973ல் அனைத்திந்தியக் குடிசார் சேவைகள் தேர்வில் முதல் இடம் பெற்றுச் சித்தியடைந்த இவர் இந்திய வெளியுறவுச் சேவையில் இணைந்தார்.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Nirupama Rao is India's new foreign secretary தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 1 August 2009."Chokila Iyer was first woman, Indian Foreign Secretary in 2001."
- ↑ Updated Monday, 10 October, 2011 05:20 PM IST. "Manorama Online | Home | TheWeek COVER STORY". The Week, மலையாள மனோரமா. பார்க்கப்பட்ட நாள் 10 October 2011.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)