உள்ளடக்கத்துக்குச் செல்

நிக்கோலோ பாகானீனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1836 இல் பாகானீனி - ஜான் விட்டில்

நிக்கோலோ பாகானீனி (இத்தாலியம்: Niccolò Paganini; கிரேக்கம்: Νικολό Παγκανίνι; தோர்கம்: Nikkolo Paqanini) என்பவர் இத்தாலி நாட்டை சேர்ந்த ஒரு வயலின் கலைஞர், வியோலக் கலைஞர், கிதார் கலைஞர் மற்றும் இசை அமைப்பாளர். இவர் 1782ஆம் ஆண்டு அக்தோபர் திங்கள் 27ஆம் தேதி பிறந்து 1840ஆம் ஆண்டு மே திங்கள் 27ஆம் தேதி மறைந்தார். இவரது காலத்தில் இவர் ஒரு புகழ்பெற்ற வயலின் கலைஞராக திகழ்ந்தார். இவரது புகழ் இன்றும் நிலைத்துள்ளது. இவரது வயலின் வாசிக்கும் வழிமுறைகள் இன்றும் பின்பற்றப்படுகிறது. இவர் பல முக்கிய இசையமைப்பாளர்களுக்கு இன்றும் ஒரு தூண்டுதலாக, வழிகாட்டியாக உள்ளார். இவரது இசையமைப்புகள் பலவும் இன்றும் பலரால் வாசிக்கப்படுகிறது.

குழந்தைப் பருவம்

[தொகு]

நிக்கோலோ பகானீனி செனோவாவில் அக்தோபர் திங்கள் 27ஆம் நாள் அந்தோணி - தெரசா தம்பதியினரின் ஆரு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sugden, John (1986). Paganini. London: Omnibus Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 071190264X. திற நூலக எண் 911994M.