உள்ளடக்கத்துக்குச் செல்

நடைமுறை எண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எண்கோட்பாட்டில் நடைமுறை எண் ('practical number அல்லது panarithmic number)[1] என்பது அதனைவிட அனைத்துச் சிறிய எண்களையும் அதன் வெவ்வேறான வகுஎண்களின் கூடுதலாக எழுதக்கூடியவாறு அமையும் நேர் முழுஎண் ஆகும். n ஒரு நடைமுறை எண் எனில், n ஐ விடச் சிறியதாக இருக்கும் அனைத்து நேர் முழுஎண்களையும் n இன் வெவ்வேறான வகுஎண்களின் கூடுதலாக எழுதமுடியும்.

எடுத்துக்காட்டாக, 12 ஒரு நடைமுறை எண், அதன் வகு எண்கள் 1, 2, 3, 4, 6.

1முதல் 11 வரையுள்ள எண்கள் 12 ஐவிடச் சிறிய எண்கள் ஆகும். இவற்றை 12 இன் வகுஎண்களின் கூடுதலாக எழுதலாம்:

5 = 3 + 2, 
7 = 6 + 1, 
8 = 6 + 2, 
9 = 6 + 3, 
10 = 6 + 3 + 1, 
11 = 6 + 3 + 2.

நடைமுறை எண்களின் வரிசை (OEIS-இல் வரிசை A005153)

1, 2, 4, 6, 8, 12, 16, 18, 20, 24, 28, 30, 32, 36, 40, 42, 48, 54, ....

விகிதமுறு எண்களை எகிப்திய பின்னங்களாக எழுதுவதற்கு நடைமுறை எண்கள் ஃபிபொனாச்சியால் (Liber Abaci,1202) பயன்படுத்தப்பட்டுள்ளன. நடைமுறை எண்களை அவர் முறையாக வரையறுக்காவிட்டாலும், நடைமுறை எண்களைப் பகுதிகளாகக் கொண்ட பின்னங்களுக்கான எகிப்திய பின்ன விரிவுகளின் அட்டவணையைத் தந்துள்ளார்.[2]

ஒரு எண்ணின் பகாக்காரணியாக்கத்தைக் கொண்டு அது ஒரு நடைமுறை எண்ணா இல்லையா என்பதை அறியலாம். ஒவ்வொரு இரட்டை நிறைவெண்ணும், இரண்டின் அடுக்குகளாக அமையும் எண்களும் நடைமுறை எண்களாக இருக்கும். நடைமுறை எண்கள், பல பண்புகளில் பகா எண்களை ஒத்திருக்கின்றன.[3]

குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடைமுறை_எண்&oldid=3539830" இலிருந்து மீள்விக்கப்பட்டது