உள்ளடக்கத்துக்குச் செல்

நடுங்கும் மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நடுங்கும் மரம்
அமெரிக்காவில் நெவாதாவில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
ஆஞ்சியோசுபெர்ம்கள்
தரப்படுத்தப்படாத:
யூடிகாட்சு
தரப்படுத்தப்படாத:
ரோசிட்சு
வரிசை:
மால்பீகிஜிலேசு
குடும்பம்:
சால்சிகேசியே
பேரினம்:
பாப்புலசு
இனம்:
'பா. திரெமுலாய்ட்சு'
இருசொற் பெயரீடு
பாப்புலசு திரெமுலாய்ட்சு
மைக்காக்சு,

பாப்புலசு திரெமுலாய்ட்சு (Populus tremuloides) என்பது வட அமெரிக்காவின் குளிர்ச்சியான பகுதிகளில் மட்டுமே காணப்படும் இலையுதிர் மரமாகும். இது ஆசுபென் என்ற பொதுவான பெயரால் குறிப்பிடப்படும் பல சிற்றினங்களில் ஒன்றாகும். இது பொதுவாக அமெரிக்க காட்டரசு, தங்கமலை காட்டரசு, நடுங்கும் காட்டரசு, நடுங்கும் நெட்டிலிங்கம் என அழைக்கப்படுகிறது.[1][2][3]

மரத்தின் அமைவு

[தொகு]

இம்மரம் 80 முதல் 100 அடி உயரம் (25-30மீ) வரை வளரக்கூடியது. ஈரமான இடங்களில் மிக வேகமாக வளரக்கூடியது. இவற்றின் பூக்கள் ஒரு பாலின. ஆண் மரம் வேறு, பெண் மரம் வேறு. மகரந்தச் சேர்க்கை காற்றின் மூலம் நடைபெறும். விதைகள் சிறியவை பஞ்சு போன்ற மயிர்கள் குஞ்சமாக வளர்ந்திருக்கும்.

இலை அமைவு

[தொகு]

இம்மரத்தின் இலைகள் மெல்லிய கிளைகளில் தொங்கிக் கொண்டிருக்கும். இலைகள் முக்கோண வடிவமாகவோ (அ) முட்டை வடிவமாகவோ இருக்கும். இதனுடைய பச்சையான இலைகள் இலையுதிர்க் காலத்தில் மஞ்சள் நிறமாக மாறும். காற்று மென்மையாக வீசினாலும் இவ்விலைகள் நடுங்குவது போல விடவிட என்று அசையும். மழைத்துளி விழுவது போன்ற சிறிய மென்காற்றுக்கும் இதன் இலைகள் அசைந்தாடும். இதனால் இம்மரம் பூமி அதிர்ச்சியை முன் கூட்டியே தெரிந்துகொள்ளும்.

காணப்படும் பகுதி

[தொகு]

இம்மரம் வெண்மையாகவும் மென்மையாகவும் இருக்கும் இவை பெட்டியும், காகிதம் செய்யவும் பயன்படுகிறது. இம்மரங்கள் வட அமெரிக்கா, கலிபோர்னியாவில் வளர்கின்றன.

பெருமை

[தொகு]

இம்மரம் உட்டா மாநில மரமாகும்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Quaking Aspen by the Bryce Canyon National Park Service
  2. வார்ப்புரு:Silvics
  3. "S.B. 41 State Tree Change". Utah State Legislature.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுங்கும்_மரம்&oldid=4047569" இலிருந்து மீள்விக்கப்பட்டது