உள்ளடக்கத்துக்குச் செல்

நக்‌ஷபந்திய்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நக்‌ஷபந்திய்யா என்பது ஒரு உலகளாவிய ஸுபி தரீக்கா ஆகும். இதனது ஸ்தாபகத் தலைவர் ஸெய்யித் பகாவுத்தீன் நக்‌ஷபந்தி அவர்களாவர். இதனது சில்சிலா எனப்படும் சங்கிலித் தொடர் அபூ பக்கர் அவர்கள் மூலம் முஹம்மத் நபி அவர்களிடத்தில் சென்றடையும்.[1]

ஸுபித்துவத்தில் இஸ்லாமிய சட்டக் கலையான பிக்ஹ், குர்ஆனிய ஓதல் முறையான தஜ்வீத் மற்றும் ஹதீஸ் உடன் ஒரு முரீத் (சீடர்) இற்கு ஒரு வழிகாட்டி (ஷெய்க்) இருப்பார். அந்த ஷெய்க் முரீதிற்கு கற்பிப்பதுடன், அந்த ஷெய்க் தனது அறிவை இன்னுமொரு ஷெய்க் இடம் இருந்து பெற்றிருப்பார். இவ்வாறு அந்த சங்கிலித் தொடர் இறுதியில் முஹம்மத் நபியிடம் சென்றடையும். அதுவே சில்சிலா எனப்படுகிறது.

அமெரிக்காவின் நோர்த் கரொலினா பல்கலைக்கழக பேராசிரியர் கார்ல் டப்ளியூ எர்ன்ஸ்ட் அவர்கள் கூறும் போது, "ஸுபி பாரம்பரியத்தில் கட்டளைகள் உடனடியாக ஷெய்க் வரிசை மற்றும் முரீத் இனை உடனடியாக ஆரம்பிக்கவில்லை. எடுத்துக்காட்டாக 11 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட முழுமையான வரிசை முஹம்மத் நபி அவர்களிடம் சென்றடைகிறது. இந்த வரிசைகளின் அடையாள முக்கியத்துவம் மகத்தானது. இதன் மூலம் முரீதுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. சங்கிலித் தொடர் மூலம் வந்த ஷெய்குமார்கள் மூலம் ஆன்மீக ஆற்றலும் வாழ்த்துக்களும் பொதுவான மற்றும் விஷேட முரீதீன்களுக்கு வந்தடைந்தன."[2]

சில்சிலா எனப்படும் சங்கிலித் தொடரான ஷெய்க் நியமனம் ஒரு நாடு, குடும்பம் அல்லது அரசியல் நியமனம் சார்ந்து வழங்கப்படுவதில்லை. அது உள்ளத்தில் இருந்து உள்ளத்திற்கு வழங்கப்படுவதாகும்.

கிளைகள்

[தொகு]
  • நக்‌ஷபந்திய்யா - அஹ்ராரிய்யா
  • நக்‌ஷபந்திய்யா - முஜத்ததிய்யா
  • நக்‌ஷபந்திய்யா - மதாரிய்யா
  • நக்‌ஷபந்திய்யா - காலிதிய்யா
  • நக்‌ஷபந்திய்யா - ஹக்கானிய்யா

தெற்காசியாவில் நக்‌ஷபந்திய்யா

[தொகு]

பிரபல ஷெய்க்மார்கள்

[தொகு]
  • யூசுப் ஹம்தானி
  • அப்துல் காலிக் கஜத்வானி
  • இமாம் ரப்பானி
  • சம்சுதீன் மதார்
  • மவ்லானா காலித் அல் பக்தாதி
  • சுல்தானுல் அவ்லியா ஷெய்க் நாஸிம் அல் ஹக்கானி[3]
  • ஷெய்கு அத்நான் முஹம்மத் கப்பானி
  • ஷெய்கு இஷாம் முஹம்மது கப்பானி
  • ஷெய்கு முஹம்மத் ஆதில் ரப்பானி
  • முபஷ்சிர் நக்ஷிபந்தி

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.mailofislam.com/tariqa_tamil.html
  2. https://en.wikipedia.org/wiki/Naqshbandi#cite_note-4
  3. https://books.google.com/books?id=nPL7p8id6Y8C&printsec=frontcover&source=gbs_atb