உள்ளடக்கத்துக்குச் செல்

த காந்தி மர்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த காந்தி மர்டர்
The Gandhi Murder
இயக்கம்கரீம் ட்ராடியா மற்றும் பங்கஜ் செகால்
தயாரிப்புராலித் இவானோவா (நிர்வாகி)
திரைக்கதைராலித் இவானோவா
இசைராபர்ட் டிகி மோரிசன்
நடிப்பு
  • ஸ்டீபன் லாங்
  • லூக்கா பாஸ்குவலின்
  • ஓம் பூரி
  • வின்னி ஜோன்ஸ்
  • ஜீசஸ் சான்ஸ்
ஒளிப்பதிவுடிம் அங்குலு
அஜயன் வின்சென்ட்
கலையகம்நியூஜென் மீடியா புரொடக்சன்ஸ்
வெளியீடுசூன் 28, 2018 (2018-06-28) (USA, limited)
30 சனவரி 2019 (இந்தியா)[1]
ஓட்டம்118 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு£15 மில்லியன்

த காந்தி மர்டர் (The Gandhi Murder, முன்னர் Solar Eclipse: Depth of Darkness) என்பது 2018 ஆண்டைய பிரித்தானிய- இந்திய வரலாற்று அரசியில் திரில்லர் திரைப்படமாகும். இப்படத்தை கரீம் ட்ராடியா மற்றும் பங்கஜ் செகால் ஆகியோர் இயக்கியுள்ளனர்.   இப்படமானது மகாத்மா காந்தியை படுகொலைக்கு இட்டுச் சென்ற நிகழ்வுகளை ஆராய்கிறது.[2] இப்படத்தில் ஸ்டீபன் லாங், லூக்கா பாஸ்குவலின், ஓம் பூரி மற்றும் வின்னி ஜோன்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை

[தொகு]

காந்தியின் படுகொலைக்கு பிரித்தானிய ஆட்சியானது உதவியாகவும், உடந்தையகவும் இருந்தது என்றும், இந்தியாவின் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு சேவைகளின் பலவீனங்களால் ஏற்படும் இந்நிகழ்வை   மூன்று இந்திய போலீஸ் அதிகாரிகள் (லாங், பாஸ்குவலினோ மற்றும் பூரி) நிறுத்த முயற்சி செய்கிறார்கள்.

நடிகர்கள்

[தொகு]
  • டி. ஐ. ஜி. சுனில் ரெய்னாவாக ஸ்டீபன் லாங்
  • டி. சி. பி. ஜிம்மியாக லூக்கா பாஸ்குவலின்
  • டி.ஜியாக ஓம் பூரி
  • சர் நார்மன் ஸ்மிதாக வின்னி ஜோன்ஸ்
  • காந்தியாக ஜீசஸ் சான்ஸ்
  • சர் பெர்சி சில்லிடோவாக மார்க் மோசே
  • ஆபிரகாம் லிங்கனாக அலெக்ஸா ஜார்டல்
  • ஜான் வில்க்ஸ் பூத்தாக போல் கோல்டன் டாப்

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_காந்தி_மர்டர்&oldid=3953167" இலிருந்து மீள்விக்கப்பட்டது