உள்ளடக்கத்துக்குச் செல்

தொலை நுண்ணுணர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொலை நுண்ணுணர்வு (Telepathy; பண்டைய கிரேக்கச் சொல் (τῆλε) டெலி என்பது தொலை எனும் அர்த்தத்தையும், (πάθος) பதோஸ் அல்லது பதியா என்பது உணர்வு, உள்ளுணர்தல், பேரார்வம், வேதனை, அனுபவம் எனும் அர்த்தத்தையும் கொண்டது)[1][2] (அல்லது) தொலைமனமுணர்தல் என்பது பெளதீகத் தொடர்பு அல்லது நாம் அறிந்த புலன் செயதி அனுப்பும் வழி எதுவும் பயன்படுத்தாது ஒருவரிடமிருந்து இன்னுமொருவருக்கு தகவல் பொருள்பட பரிமாறும் ஒன்றாகும். அதாவது, பேசுதல், கேட்டல், சைகை காட்டுதல், எழுதிக் காட்டுதல் போன்ற பல்வேறு வழமையான தொடர்பு முறைகளின் பயன்பாடு இல்லாமல் ஒருவர் எண்ணுவதை மற்றொருவர் அறிந்து கொள்வதே "தொலைமனமுணர்தல்" எனப்படுகிறது."டெலிபதி" (Telepathy) எனும் ஆங்கிலப்பதம் 1882 இல் பிரட்ரிக் வில்லியம் கென்றி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.[3]

அறிவியலாளர்கள் இதனை ஒரு உண்மையான தோற்றப்பாடாகக் கருதுவது இல்லை. தொலைமனமுணர்தல் என்னும் ஒன்று இருக்கிறதா என அறிந்துகொள்ளவும், அதைப் புரிந்துகொள்வதற்கும், பயன்படுத்துவதற்குமான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவாயினும், கட்டுப்பாடான சோதனைகளின் கீழ் இதை உண்மை என்று நிறுவுவதற்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை..[4][5]

தற்காலப் புனைகதைகளிலும், அறிவியற் புனைவுகளிலும் தொலைமனமுணர்தல் இடம்பெறுவதைக் காணலாம். இவற்றில், வேற்றுக்கோளினரும், மீவியல்பு நாயகர்களும் இத்தகைய ஆற்றல்களைக் கொண்டவர்களாகக் காட்டப்படுவது உண்டு.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Telepathy. CollinsDictionary.com. Collins English Dictionary - Complete & Unabridged 11th Edition. Retrieved December 06, 2012.
  2. Following the model of sympathy and empathy.
  3. Hamilton, Trevor (2009). Immortal Longings: F.W.H. Myers and the Victorian search for life after death. Imprint Academic. p. 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84540-248-8.
  4. Jan Dalkvist (1994). Telepathic group communication of emotions as a function of belief in telepathy. Dept. of Psychology, Stockholm University. பார்க்கப்பட்ட நாள் 5 October 2011.
  5. Willem B. Drees (28 November 1998). Religion, Science and Naturalism. Cambridge University Press. p. 242. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-64562-1. பார்க்கப்பட்ட நாள் 5 October 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]