தொடர்பாடல்
தொடர்பாடல் (communication) என்பது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு தகவலைக் கடத்துதலாகும். இது பொதுவாக மொழியூடாகவே நடைபெறுகின்றது. தகவல் தொடர்பானது ஒரு மூலத்திலிருந்து மற்றொன்றுக்கு செய்தியை மாற்றுவதாகும். குறியீடுகள் மற்றும் செமியாடிக் விதிகளின்படி இருவர் அடையாளங்களை வைத்தும் தொடர்பு கொள்ளலாம். பேச்சு, எழுத்து அல்லது குறியீடுகளின் மூலம் செய்திகள், கருத்துகள், சிந்தனைகளின் பரிமாற்றம் அல்லது அறிவித்தல் தொடர்பு கொள்வதைக் குறிக்கின்றது. இந்த இருதரப்பட்ட நடை முறையின் மூலம், சிந்தனைகள், உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்கள் ஒரு பொதுவான உடன்பாட்டுக்குள்ளான திசை அல்லது இலக்கை நோக்கிச் செல்கின்றன. தொடர்பு கொள்ளுதலை ஒரு கல்வி முறையாகப் பார்க்கையில் அதற்கு நீண்ட வரலாறு உண்டு[1].
மேற்பார்வை
[தொகு]தகவல் தொடர்பு என்பது அனுப்புனர் ரகசிய குறியீடுகளாகச் செய்தியைத் தொகுத்து பெறுனருக்கு அனுப்புவது ஆகும். அனுப்பப்பட்ட செய்தியை சரி செய்து புரிந்து கொண்ட பின்னர் அதற்கு மறுமொழி கூறுகிறார் பெறுநர். தொடர்பு கொள்ளும் அனைவரும் பொதுவான ஒரு தொடர்பு கொள்ளும் எல்லையை வைத்திருக்க வேண்டும். நமது செவியில் விழுகின்ற பேச்சு, பாட்டு, குரலொலியைக் கொண்டும், வார்த்தைகள் இல்லாமல் உடல் அசைவுகளாலும், சைகை மொழியினாலும், குரலொலியின் மொழியினாலும், தொடுதல், கண்களை நேராக நோக்குதல், எழுதுதல் கொண்டும் தொடர்பு கொள்ளலாம்.
ஒரு கருத்தை ஒதுக்கி அதனின் பொதுவான உடன்படிக்கைக்கு வர மற்றவருக்குத் தெரிவித்தல் தொடர்பு கொள்ளுதலாகும். இதற்கு கேட்கும் திறன், கூர்ந்து கவனிக்கும் திறன், பேச்சுத் திறன், கேள்வி கேட்கும் திறன், ஆராயும் திறன், மதிப்பிடும் திறன், தான் நினைப்பதை தன்னிடமும், மற்றவரிடமும் உணர்த்தும் திறன் ஆகியவை வேண்டும். தகவல் தொடர்பு கொள்ளுதல் மூலம் ஒத்துழைப்புடன், இணைந்து செயல்பட முடிகிறது[2]. அளவுக்கு மீறிய செய்திகள் அல்லது குழப்பமான செய்திகள் அனுப்புவதால் தொடர்பு கொள்ளுவதில் தடைகள் ஏற்படுகின்றன[3].
மனிதனும் தொடர்பாடலும்
[தொகு]மனிதன் ஒரு தொடர்பாடும் விலங்கு எனக் கூறலாம். மனிதன் எப்போதும் குழுக்களாக வாழவே விரும்புகின்றான். தனியாக வாழ எவரும் விரும்புவதில்லை. குழுவாக வாழும்போது அங்கத்தவரிடையேயும் குழுக்களிடையேயும் தொடர்பாடல் செய்ய ஒரு முறைமை தேவைப்பட்டதன் காரணமாகவே தொடர்பாடல் முறைகள் உதயமாயின.
பண்டைய தொடர்பாடல் முறைகள்
[தொகு]தொடர்பாடல் முறைகளானவை மனித வர்க்கத்தின் அளவுக்குப் பழைமை வாய்ந்தவை என்று கூறலாம். ஆதி காலத்தில் மனிதன் பின்வரும் முறைகள் மூலம் தொடர்பாடலை மேற்கொண்டான்.
- அங்க அசைவுகள்
- மேளங்கள்
- நெருப்பு
தொடர்பு கொள்வதன் வகைகள்
[தொகு]உடல் அசைவுகளாலும், குரலாலும், சொற்களாலும் மனிதனால் நேருக்கு நேர் தொடர்பு கொள்ள முடிகிறது. தொடர்பு கொள்வதன் மூலம் ஏற்படும் தாக்கம், ஆராய்ச்சிகளில் தெரியவருகின்றது[4].
- 55% உடல் அசைவுகளாலும், தோரணையினாலும், சைகைகளாலும், நேர்கொண்ட காணலாலும்
- 38% குரலாலும்
- 7% கருத்துகளாலும், சொற்களாலும் ஏற்படுகின்றன. இவையனைத்தும் தொடர்பு கொள்ளும் முறையில் இருக்கின்றன.
இதன் சதவிகிதம் பேச்சாளரையும், கவனிப்பவரையும் பொருத்து வேறுபட்டாலும் தொடர்பு கொள்ளும் நோக்கம் ஒன்றாகவே எந்த இடத்திலும் இருக்கின்றது. சிந்தனைகளும், உணர்ச்சிகளும் குரலொலியாலும், தனிப்பட்ட நயத்துடனான பேச்சாலும், தொனியின் சரிவு உயர்வாலும், சைகையாலும், எழுத்துக் குறியீடுகளாலும் வெளிக் கொண்டு வரப்படுகின்றன. இவையனைத்தும் உள்ளது தான் மொழியென்றால் அப்போது விலங்குகளின் மொழி என்பது என்ன? விலங்குகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள எழுத்து வடிவத்தை உபயோகிக்கவில்லை என்றாலும் அவை ஒரு மொழியையே உபயோகிக்கின்றன. அவ்வாறு பார்க்கையில் விலங்கினத்தின் தொடர்புகளைக் கூட நாம் ஒரு தனி மொழியாகக் கருத்தில் கொள்ளலாம்.
லெக்செமே எனும் குறியீட்டு அமைப்பாகவும், இலக்கண விதியாகவும் மனித பேச்சு மற்றும் எழுத்து மொழிகள் விவரிக்கப் படுகின்றன. இதனால், குறியீடுகளும் கையாளப்படுகின்றன. மொழி என்னும் சொல் மொழிகளின் பொதுவான இயல்புகளைக் குறிக்கவும் உதவுகிறது. ஒரு மனித குழந்தையின் வாழ்க்கையில் மொழியைக் கற்றுக்கொள்வது இயல்பான விஷயமாகும். பெரும்பாலான மனித மொழிகள் ஒலி வடிவங்களைக் கொண்டும், குறியீடுகளுக்குரிய சைகைகளாலும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகின்றன. ஆயிரக் கணக்கான மொழிகள் இருந்தாலும் இவை அனைத்தும் பொதுவான பல இயல்புகளைக் கொண்டுள்ளன. இதற்கு விதி விலக்குகளும் உண்டு.
ஒரு மொழிக்கும் கிளை மொழிகளுக்கும் எல்லை வரைமுறைகள் கிடையாது. மாக்ஸ் வெயின்றிக், ஒரு போர்ப்படையையும், கப்பல் படையையும் தன்னுள் அடக்கி இருக்கும் கிளை மொழியே மொழி என்று குறிப்பிடுகிறார். எஸ்பரான்டோ போன்று மனிதனால் உருவாக்கப்பட்ட மொழிகள், கணினி மொழிகள், கணித விதி முறைகள் ஆகியவை மனித மொழிகளின் இயல்புகளை பகிர்ந்து கொலவதில்லை.
மொழிகளின் உருவாக்கம்
[தொகு]பின்னைய காலங்களில் மெல்ல மெல்ல மொழிகள் விரிவாகத் தொடங்கின. முதலில் பேச்சு வடிவம் மட்டுமே பயன்பாட்டில் இருந்தபோதும் பின்னர் மெல்ல மெல்ல எழுத்து வடிவமும் காலத்தின் தேவையுடன் உருவாக்கப்பட்டது.
உரையாடல் அல்லது சொற்களின் மூலம் தகவல் தொடர்பு கொள்ளுதல்
[தொகு]ஓர்உரையாடல் என்பது இருவருக்கு அல்லது அதற்கும் மேற்பட்டவர்களுக்கு இடையே கருத்து பரிமாற்றம் ஏற்படுகின்ற வழக்கு ஆகும். கிரேக்க மூலத்தைக் கொண்டுள்ள டயலாக் எனும் சொல் ( διά(diá,மூலம்) + λόγος(logos, சொல்,பேச்சு) கருத்துகள் பொருளின் மூலம் பொங்கி எழுகின்றன) மக்கள் நினைக்கிறவாறு பொருளைத் தராமல், அதன் பகுதியான டைய διά-(diá-,மூலம்) மூலம் என்ற பொருளை விட்டுவிட்டு δι- (di-, இரண்டு) இரண்டு என்ற பொருளைக் கொள்கிறது. அதாவது உரையாடல் என்பது இருவருக்கிடையே நடப்பது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
சொற்கள் இல்லாமல் தகவல் தொடர்பு கொள்ளுதல்
[தொகு]வார்த்தைகள் இல்லாமல் செய்திகளை அனுப்பிப் பெறுவதை சொற்கள் இல்லாத தொடர்பு என்று கூறுவர். அப்படிப்பட்ட செய்திகளை சைகைகள், உடல் அசைவுகள், தோரணைகள், முகபாவனைகள்,நேர் கொண்ட காணல் மூலம் அல்லது உடை, சிகை அலங்காரங்கள், கட்டிடக்கலையியல் போன்ற பொருட்கள் மூலம் அல்லது குறியீடுகள் (இன்போ கிராபிக்ஸ்) மூலம் அல்லது இவையனைத்தையும் சேர்த்து நடத்தையின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.சொற்கள் இல்லாமல் தகவல் தொடர்பு கொள்ளுதல் மனிதனின் தினசரி வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாகும்.
குரலின் பண்பு, உணர்ச்சி, பேசுகின்ற பாணி அடங்கிய குரலொலியின் மொழியைக் கொண்டும் அல்லது சந்தம், ஓசை நயத்துடன் கூடிய பேச்சு, அழுத்தம் ஆகியவை கொண்டும் சொற்கள் இல்லாமல் நாம் தொடர்பு கொள்ளலாம். எழுத்தில் கூட இந்த அம்சம் உண்டு. அவை கையெழுத்தின் அழகு, இரு சொற்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளி, அல்லது உணர்ச்சி குறியீடுகளின் உபயோகம் ஆகும். ஆங்கிலத்தில் கலவை வார்த்தையான இமோட்டைகான் நமது உணர்ச்சிகளைக் காட்டுகின்ற குறியீடுகளைக் குறிக்கின்றது.
குறியீடுகளை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அனுப்புகின்ற தொடர்பு சாதனமான தந்தி முறை இந்த வகையைக் சாரும். இந்த குறியீடுகள் தாமாகவே சொற்களையும், பொருள்களையும் விளக்குகின்றன. பல வேறான எடுத்துக்காட்டுகள் மனிதன் இவ்வாறும் உடல் அசைவுகள், குரல், சொற்கள் இல்லாமலும் தொடர்பு கொள்ளலாம் என்று நிச்சயப் படுத்துகின்றன[5].
காட்சி ஊடகங்கள் மூலம் தகவல் தொடர்பு கொள்ளுதல்
[தொகு]காட்சித் தொடர்பியல் (Visual Communication) என்பது காட்சி ஊடகங்கள் மூலம் தொடர்பு கொள்ளுதலாகும். இதன் வாயிலாக சிந்தனைகளும் செய்திகளும், படித்து அல்லது பார்த்துப் புரிந்துகொள்ளும் வடிவங்களாக காண்பிக்கப் படுகின்றன. இது குறிகள், அச்சுக்கலை, ஓவியம், வரைகலைப் படிவம், படங்கள் மூலம் விவரித்தல் போன்ற இரண்டு பரிமாணம் கொண்ட வடிவங்களில் தன்னை இணைத்து உள்ளது. இது முழுமையாக பார்வை சார்ந்தே வருகிறது. இங்கு, தகவல் தொடர்பு கொள்ளுதல் பார்ப்பதனால் நேரிடுகிறது. இது கண்கள் பார்த்து கிரகிக்கும் செய்தியையும் எழுத்துக்களையும் எளிதாக மனிதனைச் சென்றடைய வைப்பது மட்டுமல்லாமல் அவனை எளிதாக அந்த செய்தியை நம்பவும் வைக்கிறது. இது செய்தியை காட்சி வடிவில் கொண்டு சேர்க்கும் முறையாகும்.
ஒரு நல்ல காட்சி ஊடகத்தை அது மக்களை எந்த அளவு சென்றடைகிறது என்று மதிப்பீடு செய்வதன் மூலம் நம்மால் கண்டறிய முடிகிறது. உலகத்தில் எது அழகு, அழகு இல்லாமை என்று நம்மால் சரிவர கூற முடியாது. காட்சியாக செய்தியை பரிமாற நாம் சைகைகள், உடல் அசைவுகள், வீடியோ, தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவற்றை உபயோகிக்கலாம். இங்கு எழுத்துகள், படங்கள், விளக்க வரைபடங்கள், புகைப்படங்கள் கணினி மூலம் எவ்வாறு இணைந்திருக்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதனால் காட்சிகள் முன்னிறுத்தி வைக்கப்படுவதைப் போல் தெரிந்தாலும் இறுதியில் இங்கு செய்திகள் முன் நிறுத்தி வைக்கப்படுகின்றன. தற்கால ஆராய்ச்சிகள் இணையதள படிவங்களின் முக்கியத்துவத்தையும் கிராப்பிக்ஸின் மகத்துவத்தையும் உணர்த்துகின்றன. காட்சி ஊடகங்களைக் கொண்டு வரைகலை வடிவமைப்பாளர்கள் நிறைய வேலைகள் செய்கின்றன.
இன்றைய தொடர்பாடல்
[தொகு]இன்று நாம் என்றுமே இல்லாத அளவுக்கு தொடர்பாடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றோம். இதன் உச்சகட்டமாக இணையத்தைப் பயன்படுத்துவதைக் கூறலாம். இன்று இணையம் தொடர்பாடலில் இருத்த பல தடைக்கற்களை தகர்த்தெறிந்து விட்டது எனலாம்.
தொடர்பாடலில் உள்ள தடைகள்
[தொகு]பின் வரும் காரணிகள் மனித தொடர்பாடலில் பாதிப்பை ஏற்படுத்தவல்லன.
- உணர்வுகள்
- உள்ளடக்கத்தை தெளிவாகப் புரியாமை
- கவனத்தை திசை திருப்பும் காரணிகள்
- நம்பிக்கைகள்
- நேரம் போதாமை
- பெளதீகவியல் காரணிகள்
- மருத்துவ ரீதியான காரணிகள்
- மொழி தெரியாமை
- வேண்டும் என்று தவறான தகவலைப் பரப்பல்
தொடர்புக் கொள்ளுதலின் மற்ற வகைகள்
[தொகு]தொடர்பு கொள்ளுவதில் ஒரு சில வகைகளின் எடுத்துக் காட்டுகள்:
- அறிவியல் தொடர்பாடல்
- உத்திநோக்குத் தொடர்பாடல்
- எளிதாக்கப்பட்டத் தொடர்பாடல்
- தொழில்நுட்பத் தொடர்பாடல்
- மீப்பொலிவுத் தொடர்பாடல்
- வரைகலைத் தொடர்பாடல்
- வன்முறையற்ற தொடர்பாடல்
தொடர்பாடலின் நோக்கம்
[தொகு]பொதுவாக பின்வரும் காரணங்களே தொடர்பாடல் நடைபெறுவதை ஊக்குவிக்கின்றன:
- எண்ணங்கள், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள
- திறமைகளை (Skills) மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள, புதியவற்றை அறிந்து கொள்ள
- பொழுதுபோக்கு மற்றும் நேரம் செலவிடலுக்காக
- மற்றவர்களை அறிவுறுத்த அல்லது வழி நடத்த
தொடர்பாடல் நடைபெறும் வழிகள்
[தொகு]பிரதானமாக இரண்டு வழிகளில் தொடர்பாடல் மனிதனால் மேற்கொள்ளப்படுகின்றது.
- காட்சி - படங்கள், குறியீடுகள், நிறங்கள்
- ஒலி -–பேச்சு, ஒலிகளைப் பயன்படுத்தல்
தொடர்பாடலின் கூறுகள்
[தொகு]- அனுப்புனர்
- ஊடகம்
- பெறுனர்
ஆகிய மூன்றும் தொடர்பாடலுக்குத் தேவையான முக்கிய கூறுகளாய் உள்ளன.
உதாரணத்திற்கு ஒரு கடிதத்தை எடுத்து கொள்ளலாம். இங்கு கடிதம் எழுதுபவர் அனுப்புனர். தபால் சேவையின் மூலம் அனுப்பப் பெறும் கடிதம் ஊடகம். கடிதத்தை பெறுபவர் பெறுனர். இங்கு அனுப்புனரின் கடமை தான் அனுப்பும் செய்தி பெறுனருக்கு புரியும் வகையில் எழுதுவது. பெறுனர் அனுப்புனரின் செய்தியைப் புரிந்து கொள்ளாவிடின் முழுத் தொடர்பாடலும் பயனற்றதாகி விடுகின்றது.
தொடர்பு கொள்ளும் முறை
[தொகு]தொடர்பு கொள்ளுவதில் ஒரு சில முக்கிய அம்சங்கள் உள்ளன:
- உட்பொருள் (சொல்லப் பட வேண்டிய செய்தி)
- உருவம் (எந்த உருவில்)
- செய்திக் கருவி (எதன் மூலம்)
- செய்தியின் நோக்கம்
- சேரிடம் / பெறுபவர் / இலக்கு / குறிகளை மீண்டும் செய்தியாக மாற்றுபவர் (எவரிடம்)
- மூல கர்த்தா / வெளிக் கொண்டு வருபவர் / அனுப்புநர் / செய்தியைக் குறிகளாக மாற்றுபவர் (எவரால்)
பலருக்கும் இடையே அறிவு புகட்டுதல், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், அறிவுரைகள் தருதல், கட்டளைகள் இடுதல், கேள்விகள் கேட்டல் ஆகியவை மூலம் தொடர்பு கொள்ளலாம். மேல் கூறப்பட்ட அனைத்து செயல்களையும் நாம் பலதரப் பட்ட முறைகளில் தொடர்பு கொள்ளலாம். இந்த முறை தொடர்பு கொள்ளும் குழுவை சார்ந்தே இருக்கும். இலக்கை நோக்கி அனுப்பப்படும் செய்தி கருத்துடன் முறையாக அனுப்பப் படவேண்டும். செய்தி அனுப்பப்படும் இலக்கு தானாகவும் இருக்கலாம், மற்றொரு மனிதனாகவும் (இருவருக்கிடையே ஆன செய்திப் பரிமாற்றம்) இருக்கலாம் அல்லது ஒரு நிறுவனமாகவும் இருக்கலாம்.
மூன்று வகையான குறியீட்டு வழிமுறையின் படிப்பு விதிகளை ஆதாரமாகக் கொண்டு நாம் செய்திகளைப் பரிமாறி கொள்ளலாம்.
- குறிகள் மற்றும் அடையாளங்களின் பண்புகள் (சிண்டாக்டிக்),
- சூழ்நிலைக்கு ஏற்ற பொருளை கண்டறியும் மொழியியல் (குறிகள், சொற்றொடர்கள், இவற்றை உபயோகிப்பவருக்கும் இடையே உள்ள உறவை சார்ந்து) (பிராக்மாடிக்)
- சொல்லின் பொருளை கண்டறியும் படிப்பு - குறிகளுக்கும் குறியீடுகளுக்கும் இடையே உள்ள உறவு பற்றியும் இவை குறிப்பிடுவன பற்றியும் சொல்லும் படிப்பு (செமான்டிக்).
அதாலால் சமூகத்தில் தொடர்பு கொள்கையில், நாம் இருவருக்கும் மேற்பட்ட மனிதர்கள்கள் ஒரே விதமான குறிகளையும் ஒரே விதமான குறியீட்டு வழிமுறையின் படிப்பு விதிகளையும் கொண்டு தொடர்பு கொள்கின்றனர் என்று கூறலாம். சிலசமயங்களில், இந்த செமியாடிக் விதிகள் தானாக இயங்கி, தனக்குத் தானே தொடர்பு கொள்ளும் முறைகளைத் தூண்டக் கூடிய செயல்களான தாமாகவே பேசிக்கொள்ளுதல், நாள் குறிப்பெடுத்தல் ஆகியவற்றை புறக்கணிக்கின்றன.
எளிதாக தொடர்பு கொள்ளும் முறையில் நம்மால் ஒரு செய்தி (சுலபமாக புரிந்து கொள்ளும் மொழியில்), அனுப்புநர் மூலம் [சமயங்களில், செய்தியை குறிகளாக மாற்றுபவர் (என்கோடெர்)] இலக்கை அல்லது பெறுபவரை (சமயங்களில், குறிகளை மீண்டும் செய்தியாக மாற்றுபவர் (டீகோடெர்), சிக்கலான தொடர்பு கொள்ளுதலில் அனுப்புனரும் பெறுனரும் ஒருவருக்குள் ஒருவராக இருப்பதைப் போல் இணைந்தே உள்ளனர். சொற்களை கொண்டு பேசுதல் என்று மாதிரிகள் மூலம் தொடர்பு கொள்வதை விளக்கலாம். இருப்பிடங்களை சார்ந்த மரபுகள், பண்பாடுகள், இனங்கள் ஆகியவற்றை பொருத்து அனுப்புநர் மற்றும் பெறுநரின் செய்தி வடிகட்டிகள் செயல் படுகின்றன. இதனால் அனுப்பப்படுகின்ற செய்தி தனது நோக்கத்திலிருந்து மாறிபோய் சேரலாம். செய்திக் கால்வாய்களில் "இரைச்சல்" செய்தியை பெறுவதிலும் குறிகளாக இருக்கும் அதனை மாற்றுவதிலும் தவறுகள் ஏற்படலாம். இதனால் சொற்களால் தகவல் தொடர்பு கொள்ளுதல் தனது பலனை இழக்கலாம். இந்த செய்தி மாற்றம்-அனுப்புமாற்றம் முறையில் மூலம் அனுப்புனரும் பெறுனரும் ஒரு ரகசிய குறியீட்டுத் தொகுப்பு நூலை வைத்துள்ளனர் என்று நமக்கு தெரிய வருகிறது. ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால் இந்த இரு தொகுப்புகளும் ஒரே மாதிரிகள், இரண்டும் ஒன்றல்ல. இந்த ரகசிய குறியீட்டுத் தொகுப்பு நூல்கள் பற்றி எங்கும் வெளிப்படையாக கூறப்படவில்லை. அதனால் தொடர்பு கொள்ளும் முறையில் அதனது பங்கை புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
ஒரு தொடர்ச்சியற்ற செய்தி பரிமாற்றமாக கருதப்படும் தகவல் தொடர்பு கொள்ளுதல் எதிர்பேச்சாளருக்கு ஏற்றவாறு தன பேச்சை ஒழுங்கமைத்துக்கொள்ளுதல் கோட்பாடு மூலம் தொடர்ச்சியான ஒன்று என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கனடிய மீடியா அறிஞர், ஹரோல்ட் இன்னிஸ் மக்கள் தொடர்புகொள்ள வெவ்வேறு ஊடகங்களை உபயோகின்றனர் என்றும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் அந்த ஊடகத்தைப் பொறுத்தே சமூகத்தில் அந்த செய்தியின் நீடித்த வாழ்கையை நம்மால் மதிப்பிட முடிகிறது என்கிறார்[6]. எகிப்தியர் கற்களையும் பேபிரசையும் ஊடகமாகக் கொண்டு தங்களை வளர்த்து கொண்டதை இவர் சான்றாக குறிப்பிடுகிறார். பேபிரஸ் 'இடங்களின் இணைப்பு ' என்று அழைக்கப்படுகிறது, எனென்றால் அது தொலைவான இடங்களையும், அரசாங்கங்களையும் அருகே கொண்டுவந்து, போர் சார்ந்த நடவடிக்கைகளையும், குடியேற்ற சமுதாயத்தின் ஆட்சியையும் சரிவர நடைபெற செய்ததது. 'காலத்தின் இணைப்பாக கற்கள் கருதப்பட்டன. காலத்தால் அழியாத, தலைமுறை தலைமுறையாக வருகிற கோவில்களும், பிரமிடுகளும் சமுதாயத்தில் உள்ள தொடர்பு கொள்ளுதல்களுக்கு உருவம் கொடுத்துள்ளன[6].
கேரள வேளாண்மை பல்கலைக் கழகம், கிரியேடிவ் எக்ஸ்டென்ஷன் என்ற வேளாண்மை மூலம் தொடர்பு கொள்ளும் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
திறம்பட்ட தொடர்பாளர்
[தொகு]பல மொழிகளைத் தெரிந்தவர் சிறந்த தொடர்பாடல் செய்யக் கூடியவராக இருப்பார் எனக்கூற முடியாது. தமிழை இரண்டாம் மொழியாகப் பயின்ற ஒருவர் தமிழரை விடவும் அழகாக தமிழிலே தொடர்பாடல் செய்யலாம். உறுதிபடப் பேசும் திறமுடையோர் சிறந்த தொடர்பாடல் செய்யக் கூடியவர்களாக இருப்பர் என்று கூறலாம்.
மனிதரல்லாத உயிரினங்களில் தொடர்பு கொள்ளுதல்
[தொகு]மனிதர்கள் அல்லது மனிதருக்கு முன் தோன்றிய விலங்கினங்கள் மட்டும் தொடர்பு கொண்டன என்று நம்மால் சொல்ல முடியாது. உயிரினங்களுக்கு மத்தியில் உள்ள ஒவ்வொரு செய்தி பரிமாற்றமும் (அதாவது அடையாள அறிவிப்புக் கோட்பாடு (அ) குறிகளை) அனுப்புபவருக்கு உயிர் இருக்கலாம், செய்தி பெறுபவர் எதோ ஒரு உருவமாக இருக்கலாம்) தொடர்பு கொள்ளுதலாகும். இதனால், விலங்கினங்களின் நடத்தையை பற்றிய படிப்பில் விலங்குகள் தகவல் தொடர்பு கொள்ளுதல் என்ற ஒரு பிரிவும் இடம் பிடித்துள்ளது. பவழம் போன்று முற்பட்ட காலத்தில் தோன்றிய விலங்கினங்கள் கூட தொடர்பு கொள்வதில் வல்லாண்மை பெற்றிருக்கின்றன[7]. இன்னும் சொல்லப் போனால் நுண்ணுயிர்களும் தங்களுக்கிடையே குறிகள் காட்டிக் கொள்கின்றன. நுண்ணியிர்கள் தொடர்பு கொள்ளுதலைத் தவிர பாக்டீரியா போன்ற முற்காலத்தில் தோன்றிய உயிரினங்கள் தங்களுக்குள்ளே இருக்கின்ற ரசாயனங்கள் மூலம் தொடர்பு கொள்கின்றன[8]. இதே போன்று செடிகள் மற்றும் பூஞ்சை வகைகளுக்குள்ளேயும் தகவல் தொடர்பு கொள்ளுதல் நடைபெறுகிறது. குறிகளைக் கொண்டு நடைபெறுகின்ற இந்த தொடர்பு முறைகள் துல்லியமான வேறுபாட்டுடன் ஒரு நிலைப்படுத்தப்படுகிறது.
ஒரு விலங்கின் நடத்தை நிகழ்காலத்தில் அல்லது வருங்காலத்தில் வேறொரு விலங்கினத்தின் நடவடிக்கையை பாதித்தது என்றால் அதனை விலங்குகள் மத்தியில் தொடர்புக் கொள்ளுதல் என்று நாம் குறிப்பிடலாம். விலங்குகள் தொடர்பு கொள்ளுதலைவிட மனிதர்கள் தொடர்பு கொள்ளும் முறை மேன்மையானது. விலங்குகளின் தொடர்பு கொள்ளுதலை சூசெமியாடிக்ஸ் என்று கூறுவார். இது மனிதர்கள் தொடர்பு கொள்ளும் முறையைவிட விலங்கின நடத்தையியல் (ஈதொலாஜி), விலங்கினத்தின் சமூக நடத்தையின் மீதான படிப்பு, விலங்குகள் அறிந்து கொள்ளும் நிலையைப் பற்றிய படிப்பின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி இருக்கிறது. இது மனிதர்கள் வட்டரங்குகளில் (circus) இருக்கும் விலங்குகள் மற்றும் டால்பின் போன்ற விளங்களிடம் தொடர்பு கொள்கிறதன் மூலம், சாத்தியம் என்று நமக்கு புரிகிறது. எனினும் இந்த விலங்குகள் தொடர்பு கொள்ள ஒரு தனிப்பட்ட முறையைக் கற்றுக் கொள்ள வேண்டும். விலங்குகளின் தொடர்பு கொள்ளுதலும், விலங்குகளின் உலகம் பற்றிய படிப்பும் இருபத்தியோராம் நூற்றாண்டில் பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த பரிணாமங்கள் விலங்குகளின் தனிப்பட்ட அடையாளங்களின் (பெயர்) உபயோகிப்பின் மூலம், விலங்குகளின் உணர்ச்சிகள் மூலம், விலங்குகள் பண்பாட்டின் மூலம், அவற்றின் அறிந்து கொள்ளும் ஆற்றலின் மூலம், பாலின நடத்தைகள் மூலம் தெரிய வந்து புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
செடிகளும் பூஞ்சைகளும்
[தொகு]செடிகளில் செடிகளின் உயிரணுக்களுக்கு உள்ளேயும், நுண்ணுயிர்களுக்கு இடையேயும், ஒரே இனத்தை சார்ந்த செடிகளுக்குள்ளும், செடிகளுக்கும் செடிகள் அல்லாத உயிரினங்களுக்கும் (அதாவது வேற்பகுதி), நடுவே தகவல் தொடர்பு கொள்ளுதல் ஏற்படுகிறது. செடியின் வேர்கள், மண்ணில் உள்ள வேர்முடிச்சு நுண்ணுயிரிகளுடனும், பாக்டீரியாவுடனும், பூஞ்சைகளுடனும், பூச்சிகளுடனும் ஒரே சமயத்தில் தொடர்பு கொள்கின்றன. செடிகளில் மையம் இல்லாத நரம்பு அமைப்பினால் சிண்டாக்டிக், பிராக்மாடிக் செமாண்டிக் விதிகள் படி தகவல் தொடர்பு கொள்ளுதல் சாத்தியமாகிறது. செடிகளுக்குள் நடக்கின்ற தொடர்பு கொள்ளுதலில் 99% நரம்புகளைக் கொண்டு நடப்பதைப் போலவே அமைந்துள்ளன என்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. எளிதில் மாறுகிற தொடர்புகளைக் கொண்டும் செடிகள் அருகிலிருக்கும் தழை உட்கொல்லிகளைக் குறித்துப் பிற தாவரங்களுக்கு எச்சரிக்கை விடுக்கலாம். அதே சமயங்களில் அவை இந்த தாவரங்களைத் தாக்கக் கூடிய ஒட்டுண்ணிகளையும் தன்பால் இழுக்கின்றன. அழுத்தம் தரக்கூடிய சூழ்நிலைகளில் தங்களது பெற்றோரிடமிருந்து பெற்ற மரபணுக்களை அழித்து அதன் மேல் தங்களது பாட்டனாரின் அல்லது முப்பாட்டனாரின் மரபணுவை வைத்து திருத்திக் கொள்கிறது[9].
பூசண இழைத்தொகுதியின் உருவாக்கத்திற்கும், பழுப்பதற்காகவும் பூஞ்சை இணைந்தும், தன்னை ஒன்றுபடுத்தியும், தனது வளர்ச்சிக்காக உழைக்கிறது. பூஞ்சை தன்னைப் போன்ற உயிரினங்களோடு மட்டுமல்லாது பூஞ்சையல்லாத பாக்டீரியா, ஒரே நுண்ணியிர் கொண்ட யூகாரியோட்ஸ், செடிகள், விலங்குகளோடு இணைவாழ்வு முறையில் தொடர்பு கொள்கின்றன. உயிருள்ள இந்த பண்புணர் வேதிப்பொருட்கள் ஒருவிதமாக பூஞ்சைத் தொடர்பு கொள்ள இணக்கம் செய்கிறது. அதே சமையம் செய்திகள் அடையும் இலக்காக இல்லாதவற்றிடம் இந்த ரசாயனம் ஒரு மாறுதலையும் ஏற்படுத்தாது. இதன் மூலம் பூஞ்சைகள் உயிருள்ள செய்திகள் பெறக் கூடியவையிலிருந்த பெற கூடாதவையை பிரிக்கக் கூடிய பக்குவத்தை பெற்றுள்ளது என்று நாம் அறியலாம். இதுவரை பூஞ்சையின் நாரிழை தயாரித்தல், இணை சேருதல், வளர்ச்சி, ஒரு உயிரினத்தில் நுண்ணுயிரிகளால் நோய்விளைவிக்கக் கூடிய ஆற்றல் ஆகியவற்றை ஒருங்கினப்படுத்த ஐந்து வகையான குறியீட்டு மூலக்கூறுகள் செயல்படுகின்றன என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நடத்தைகளை ஓரினப்படுத்துதலையும் அவற்றை தூண்டும் சாரங்களையும் விரிவான விளக்கம் கொண்ட முறைகள் மூலம் தயாரிக்கலாம்[10].
கல்வி மூலமாகத் தொடர்பு கொள்வதை வைத்து கொள்ளல்
[தொகு]தொடர்பு கொள்ளுதலை கல்வி மூலமாகப் பார்க்கையில் அதனை தொடர்பியல் என்று கூறுவர்[11]. இது நாம் தொடர்பு கொள்ளும் அத்தனை வழக்கங்களையும், வழிகளையும் தன்னுள் கொண்டுள்ளதால் இந்த படிப்பு மிகவும் விரிவானதாகும். இந்த தொடர்பு கொள்ளும் முறை வார்த்தைகளுடனும், வார்த்தைகள் இல்லாத செய்திகளாகவும் வருகிறது. இந்த தொடர்பு கொள்ளுதலைப் பற்றிய அனைத்து விவரங்களும் பாடநூல்களிலும், மின்னணு பதிப்புகளிலும், கல்வி சார்ந்த செய்திதாள்களிலும் வெளிவந்துள்ளன. இந்த செய்திதாள்களில் ஆராய்ச்சியாளர்கள் தகவல் தொடர்பு கொள்ளுதல் எவ்வாறு எதுவரை விரிவடைகிறது என்பதைப் பற்றி விவரிக்கின்றனர்.
தகவல் தொடர்பு கொள்ளுதல் பல நிலைகளில், பல வழிகளில், பெரும்பாலான உயிரினங்களுக்கு மத்தியில், மற்றும் இயந்திரங்களுக்கும் இடையே ஏற்படுகின்றது. பல படிப்புகள் தனக்குள் ஒரு முக்கிய பகுதியை தொடர்பு கொள்ளுதலுக்காக ஒதுக்கி வைத்துள்ளன. ஆகையால், ஒருவர் தொடர்பு கொள்ளுதலைப் பற்றி பேசும்போது அவர் எந்த விதமான தொடர்பு கொள்ளுதலைப் பற்றி பேசுகிறார் என்பதை புரிந்து வைத்திருக்க வேண்டும். தொடர்பு கொள்ளுதலின் விளக்கங்கள் பல தரப்பட்டு இருக்கின்றன. சில விலங்குகளும் மனிதர்களும் தொடர்பு கொள்கின்றன என்று கூறுகையில் சில விளக்கங்கள் மனிதர்கள் மட்டுமே தொடர்பு கொள்கிறார்கள் என்று குறுகிய கண்ணோட்டத்துடன் கூறப்படுகின்றன. விளைபயன்மிக்க தொடர்பாடல் செவிமடுக்கும் கூறுகள், உடல் கூறுகள் மற்றும் பல கூறுகளால் அடங்கியுள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-07-26.
- ↑ "communication". office of superintendent of Public instruction. Washington. Archived from the original on நவம்பர் 19, 2009. பார்க்கப்பட்ட நாள் March 14, 2008.
{{cite web}}
: Unknown parameter|dateformat=
ignored (help) - ↑ Montana, Patrick J. & Charnov, Bruce H. 2008. Management. 4th ed. New York. Barron's Educational Series, Inc. Pg 333.
- ↑ Mehrabian and Ferris (1967). "Inference of Attitude from Nonverbal Communication in Two Channels". In: The Journal of Counselling Psychology Vol.31, 1967, pp.248-52.
- ↑ Warwick, K, Gasson, M, Hutt, B, Goodhew, I, Kyberd, P, Schulzrinne, H and Wu, X: “Thought Communication and Control: A First Step using Radiotelegraphy”, IEE Proceedings on Communications , 151(3), pp.185-189, 2004
- ↑ 6.0 6.1 வாரக், மெக்கேன்சீ 1997
- ↑ Witzany G, Madl P. (2009Biocommunication of corals. International Journal of Integrative Biology 5(3): 152-163.
- ↑ Witzany G (2008). Bio-Communication of Bacteria and their Evolutionary Roots in Natural Genome Editing Competences of Viruses. Open Evolution Journal 2: 44-54.
- ↑ Witzany, G. (2006Plant Communication from Biosemiotic Perspective. Plant Signaling and Behavior 1(4): 169-178.
- ↑ Witzany, G. (2007Applied Biosemiotics: Fungal Communication. In: Witzany, G. (Ed). Biosemiotics in Transdisciplinary Contexts. Helsinki, Umweb, pp. 295-301.
- ↑ http://www.communicology.org/content/communicology-lexicon-definition[தொடர்பிழந்த இணைப்பு]