தெஹ்ரான் எட்டு
Appearance
தெஹ்ரான் எட்டு (Tehran Eight)[1] என்பது ஆப்கானிஸ்தானின் கசாரா இனக்குழுக்களின் கூட்டமைப்பாகும். இவர்கள் ஆப்கான் சோவியத் போரின் போது ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு எதிரான நோக்குடன் சோவியத் படைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். இவர்கள் ஷியா போரளிகள் ஆவர். இவர்களுக்கு ஈரான் நாடு உதவி செய்தது. இக்கூட்டமைப்பே பாக்கிஸ்தான் ஆதரவுடன் இயங்கிய பெஷாவர் ஏழு கூட்டமைப்பிற்கு அடுத்த பெரிய கூட்டமைப்பு ஆகும்.
கூட்டமைப்பின் அங்கத்தினர்
[தொகு]கீழ்க்கண்ட எட்டு குழுக்களும் இணைந்து தெஹ்ரான் எட்டு கூட்டமைப்பு உருவானது. இதன் தலைமையகம் தெஹ்ரான் ஆகும்.
- ஆஃப்கான் ஹெஸ்புல்லா (Afghan Hezbollah)
- நாஸர் குழு (Nasr Party)
- ஆப்கானிஸ்தானின் இஸ்லாமியப் புரட்சிக் காவல் படை (Corps of Islamic Revolution Guardians of Afghanistan)
- ஆப்கானிய இஸ்லாமிய இயக்கம் (Islamic Movement of Afghanistan)[1]
- இஸ்லாமிய ஒப்பந்தக் குழு (Committee of Islamic Agreement)
- இஸ்லாமியப் புரட்சி இயக்கம் (Islamic Revolution Movement)
- இஸ்லாமியப் போராளி அமைப்பு (Union of Islamic Fighters)
- ராத்(இடி) குழு (Raad party)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Ruttig, T. Islamists, Leftists – and a Void in the Center. Afghanistan's Political Parties and where they come from (1902-2006). "The first current was mainly represented in the 1980s by the Sunni Mujahedin tanzim based in Pakistan, the ‘Peshawar Seven’, and the Shia Mujahedin groups based in Iran, the ‘Tehran Eight’. The second current mainly consisted of the People’s Democratic Party of Afghanistan (PDPA), with its two major factions Khalq and Parcham, and the ‘Maoist’ groups that emerged from the demokratik-e newin, or ‘new democracy’, commonly referred to as shola’i. For the third current, there are mainly Afghan Millat with at least three different factions on the Pashtun(ist) side and Settam-e Melli on the Tajik side, with some Uzbek and Turkmen elements, and currently Sazman-e Inqilabi-ye Zahmatkashan-e Afghanistan (SAZA), or ‘Revolutionary Organisation of Afghanistan’s Toilers’ and the new Hezb-e Kangara-ye Melli, or ‘National Congress Party’. There is no current Hazara equivalent to them since Hezb-e Wahdat has absorbed the Hazara demand for religious, political and judicial equality." [1]