தெமுர் கான்
ஒல்ஜெய்டு தெமுர் கான் யுவானின் பேரரசர் செங்சோங் | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மங்கோலியப் பேரரசின் 6வது ககான் (பேரரசு பிரிவின் காரணமாக பெயரளவில்) யுவான் வம்சத்தின் 2வது பேரரசர் சீனாவின் பேரரசர் | |||||||||||||||||||||
தெமுர் கானின் உருவப்படம். அசல் அளவு 47 செ.மீ அகலமும் 59.4 செ.மீ உயரமும் கொண்டது. பட்டு மீது பெயிண்ட் மற்றும் மையால் வரையப்பட்டது. இப்போது தேசிய அரண்மனை அருங்காட்சியகம், தாய்பெய், தாய்வானில் அமைந்துள்ளது. | |||||||||||||||||||||
யுவான் வம்சப் பேரரசர் | |||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | மே 10, 1294 – பிப்ரவரி 10, 1307 | ||||||||||||||||||||
முடிசூட்டுதல் | மே 10, 1294 | ||||||||||||||||||||
முன்னையவர் | குப்லாய் கான் | ||||||||||||||||||||
பின்னையவர் | குலுக் கான் | ||||||||||||||||||||
பிறப்பு | அக்டோபர் 15, 1265 | ||||||||||||||||||||
இறப்பு | பெப்ரவரி 10, 1307 கன்பலிக் (டடு) | (அகவை 41)||||||||||||||||||||
மனைவி | புலுகன் | ||||||||||||||||||||
| |||||||||||||||||||||
மரபு | போர்ஜிஜின் | ||||||||||||||||||||
அரசமரபு | யுவான் | ||||||||||||||||||||
தந்தை | செஞ்சின் | ||||||||||||||||||||
தாய் | கோக்கேஜின் (பைரம் எக்சி) | ||||||||||||||||||||
மதம் | பௌத்த மதம் |
தெமுர் ஒல்ஜெய்டு கான் (மொங்கோலியம்: Өлзийт Төмөр), பிறப்புப் பெயர் தெமுர் (திமுர் என்றும் உச்சரிக்கப்படுகிறது, மொங்கோலியம்: Төмөр, அக்டோபர் 15, 1265 – பிப்ரவரி 10, 1307), செங்சோங் (யுவானின் பேரரசர் செங்சோங்; சீனம்: 元成宗) என்ற கோவில் பெயராலும் அழைக்கப்படுகிற இவர் மே 10, 1294 முதல் பிப்ரவரி 10, 1307 வரை ஆட்சி செய்த யுவான் வம்சத்தின் இரண்டாம் பேரரசர் ஆவார். சீனாவின் பேரரசர் தவிர, இவர் மங்கோலிய பேரரசு அல்லது மங்கோலியர்களின் ஆறாவது மாபெரும் கான் என கருதப்படுகிறார், இருப்பினும் பேரரசின் பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே இப்பெயர் அவருக்கு இருந்தது. இவர் யுவானின் திறமையான ஆட்சியாளராக இருந்தார், இவருடைய ஆட்சி அடுத்த சில தசாப்தங்களுக்கு அதிகாரத்தின் வடிவங்களை நிறுவியது.[1] இவருடைய பெயருக்கு மங்கோலிய மொழியில் "ஆசிர்வதிக்கப்பட்ட இரும்பு கான்" என்று பொருள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ René Grousset The Empire of the Steppes, p.320