உள்ளடக்கத்துக்குச் செல்

தூரமேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம்

ஆள்கூறுகள்: 29°16′N 80°56′E / 29.267°N 80.933°E / 29.267; 80.933
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூர மேற்கு வளர்ச்சி பிராந்தியம்
Sudur Pashchimānchal
Bikās Kshetra
நேபாளத்தின் வளர்ச்சி பிராந்தியங்கள்
Location of தூர மேற்கு வளர்ச்சி பிராந்தியம்
நாடு நேபாளம்
பிராந்தியம்தூர மேற்கு வளர்ச்சி பிராந்தியம்
தலைமையிடம்திப்பயால் சில்காதி, டோட்டி மாவட்டம் சேத்தி மண்டலம்
பரப்பளவு
 • மொத்தம்19,539 km2 (7,544 sq mi)
மக்கள்தொகை
 (2011 Census)
 • மொத்தம்25,52,517
 pop. note
நேர வலயம்ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்)

தூரமேற்கு வளர்ச்சி பிராந்தியம் (Far-Western Development Region) (நேபாளி: सुदुर पश्चिमाञ्चल विकास क्षेत्र, சுதுர் பஸ்ச்சிமாஞ்சல் விகாஸ் சேத்திரம்) தெற்காசியாவின் நேபாளத்தின் ஐந்து வளர்ச்சி பிராந்தியங்களில் ஒன்றாகும். இப்பிராந்தியம் நேபாளத்தின் மேற்குப் பகுதியின் கடைகோடியில் அமைந்துள்ளது. தூர மேற்கு பிராந்தியத்தின் நிர்வாகத் தலைமையிடம் சேத்தி மண்டலத்தில் உள்ள டோட்டி மாவட்டத்தின் திப்பயால் சில்காதி நகரம் ஆகும்.

பிராந்திய எல்லைகள்

[தொகு]

தூர மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தின் வடக்கில் சீனாவின் திபெத் தன்னாட்சி பகுதியும், கிழக்கில் மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியமும், தெற்கில் இந்தியாவின் உத்தரப் பிரதேசம், மேற்கில் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம் எல்லைகளாக அமைந்துள்ளது.

நிர்வாகப் பிரிவுகள்

[தொகு]

தூர மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தின் நிர்வாக வசதிக்காக ஒன்பது மாவட்டங்களை மகாகாளி மண்டலம் மற்றும் சேத்தி மண்டலம் என இரண்டு மண்டலங்களில் இணைத்துள்ளனர்.

மகாகாளி மண்டலத்தில் கஞ்சன்பூர் மாவட்டம், டடேல்துரா மாவட்டம், பைத்தடி மாவட்டம், தார்ச்சுலா மாவட்டம் என நான்கு மாவட்டங்களும், சேத்தி மண்டலத்தில் கைலாலீ மாவட்டம், அச்சாம் மாவட்டம், டோட்டி மாவட்டம், பஜாங் மாவட்டம் மற்றும் பாசூரா மாவட்டம் என ஐந்து மாவட்டங்களும் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்

[தொகு]

19,539 சதுர கிலோ மீட்டர் கொண்ட தூர மேற்கு பிராந்தியத்தின் மக்கள் தொகை, 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வளர்ச்சி பிராந்தியத்தின் மக்கள் தொகை 25,52,517 ஆக உள்ளது. தூர மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில் தோத்தியாளி மொழி, தாரு மொழி, குமாவானி மொழிகள் அதிகம் பேசப்படுகிறது. நேபாளத் தலைநகரான காட்மாண்டு நகரத்திலிருந்து தொலைதூரத்தில் அமைந்த தூர மேற்கு வளர்ச்சி பிராந்தியம் சமூக, பொருளாதார, கல்வி, வேலை வாய்ப்புகளில் மிகவும் பின் தங்கியதாக உள்ளது. இப்பிராந்திய மக்களில் 44% மலைப்பாங்கான பகுதிகளிலும், 49% மக்கள் இமயமலையிலும் வாழ்கின்றனர். சமவெளிகள் அற்ற இப்பிராந்தியத்தில் வேளாண்மைத் தொழில் செய்ய வாய்ப்பு இல்லை.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "An Overview of the Far Western Region of Nepal | Nepal Information Platform". Un.org.np. 2011-05-20. Archived from the original on 2014-07-16. பார்க்கப்பட்ட நாள் 2015-06-04.

வெளி இணைப்புகள்

[தொகு]