உள்ளடக்கத்துக்குச் செல்

தீசுசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீசஸ் மற்றும் மராத்தான் காளையின் உருவம் கொண்ட வெள்ளி பாண்டம், கி.மு. 445-440 BCE, வாசில் போஜ்கோவ் சேகரிப்பின் ஒரு பகுதி, சோஃபியா, பல்காரியா

தீசுசு (Theseus, (UK: /ˈθsjs/, US: /ˈθsiəs/; கிரேக்கம்: Θησεύς) என்பவர் பண்டையக் கிரைக்கத்தின், ஏதென்சின் தொன்மவியல் மன்னரும், நிறுவனரும், வீரரும் ஆவார். வரலாற்றில் இவரது பங்கானது "எர்குலசு புதிய ஒலிம்பியாவை உருவாக்குவது போன்ற ஒரு பெரிய கலாச்சார மாற்றம்" என்று அழைக்கப்படுகிறது. [1] :204தீசுசைச் சுற்றி நிலவும் கற்பனைக்கதைகள்-இவரது பயணங்கள், வீரசாகசங்கள், நண்பர்கள்-காலம் போன்றவை முழுவதும் புனைகதைக்கு வேண்டிய மூலப் பொருட்களை வழங்கியுள்ளன.

தீசுசு சில சமயங்களில் ஏதென்சின் மன்னரான ஏஜியசின் மகனாகவும், சில சமயங்களில் பொசைடன் கடவுளின் மகனாகவும் விவரிக்கப்படுகிறார். இவர் தன் தாயார் ஏத்ராவால் வளர்க்கப்படுகிறார். மேலும் ஏஜியசுடனான தனது தொடர்பைக் கண்டறிந்ததும், ஏதென்சுக்கு நிலத்தின் வழியாக பயணம் செய்கிறார். வழியில் பல சாகசங்களைச் செய்கிறார். இவர் ஏதென்சை அடைந்ததும், ஏஜியஸ் தனக்கு எதிராக சதி செய்யும் மீடியாவை (ஜேசனின் முன்னாள் மனைவி) மணந்திருப்பதைக் காண்கிறார்.

தீசுசைப் பற்றிய மிகவும் பிரபலமான தொன்மக்கதை இவர் மினோட்டூர் என்னும் பாதி மனிதன் மற்றும் பாதி காளையான கொடூரனைக் கொன்றது. பின்னர் இவர் ஏதெனிய ஆட்சியின் கீழ் அட்டிகாவை ஒன்றிணைக்கிறார். ஒன்றிணைத்த மன்னராக, அக்ரோபோலிசு கோட்டையில் ஒரு அரண்மனையை கட்டிய பெருமைக்குரியவர். சினோய்கிஸ்மோசுக்குப் பிறகு, தீசுசு அக்ரோபோலிசின் தெற்குச் சரிவில் அப்ரோடைட் பாண்டெமோசு ('அனைத்து மக்களின் அப்ரோடைட்') வழிபாட்டை நிறுவினார் என்று பௌசானியாஸ் தெரிவிக்கிறார்.

புளூட்டாக்கின் லைஃப் ஆஃப் தீசஸ் கதையில் மினோட்டாரின் மரணம், தீச்சு தப்பித்தல், மினோஸ் மன்னரின் மகள் அரியாட்னி தீசுசு எப்படி காதலித்தார், அவளுக்கு இவர் செய்த துரோகம் பற்றிய பல்வேறு தகவல்களைக் கொண்டுள்ளது. [i]

உரோமின் உருவாக்க தொன்மமான ரோமுலசின் வாழ்க்கைக்கு இணையான ஒரு வாழ்க்கை கதையை உருவாக்குவதே புளூட்டாக்கின் உறுதியான நோக்கமாக உள்ளது. புளூடாக்கின் தகவல்களுக்கும் பெரிசைட்ஸ் (கிமு ஐந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதி), டெமன் (கி.மு. 400), பிலோகோரஸ் மற்றும் கிளீடெமஸ் (கிமு நான்காம் நூற்றாண்டு) ஆகிய வேறு சிலரின் தகவல்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன. [2] தொன்மங்களில் குறிப்பிடப்படும், தீசுசு ஒரு உண்மையான நபரா என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆனால் இவர் வெண்கலக் காலத்தின் பிற்பகுதியில் [3] ஒருவேளை கிமு 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டில் ஒரு மன்னராக இருந்திருக்கலாம் என்று அறிஞர்கள் நம்புகின்றனர். [4]

குறிப்புகள்

[தொகு]
  1. "May I therefore succeed in purifying Fable, making her submit to reason and take on the semblance of History. But where she obstinately disdains to make herself credible, and refuses to admit any element of probability, I shall pray for kindly readers, and such as receive with indulgence the tales of antiquity." (Plutarch, Life of Theseus, translated by Bernadotte Perrin).

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ruck, Carl A.P., and Danny Staples (1994). "Theseus: Making the New Athens." Pp. 203–222 in The World of Classical Myth. Durham, NC: Carolina Academic Press.
  2. Cueva, Edmund P. (1996). "Plutarch's Ariadne in Chariton's Chaereas and Callirhoe." American Journal of Philology, 117(3):473–84.
  3. Greene, Andrew. "Theseus, Hero of Athens". பார்க்கப்பட்ட நாள் 2018-11-25.
  4. Morford, Mark; Lenardon, Robert J.; Sham, Michael. "Classical Mythology Tenth Edition". Oxford University Press. Oxford University Press. Archived from the original on 2014-11-10. பார்க்கப்பட்ட நாள் 31 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீசுசு&oldid=3779476" இலிருந்து மீள்விக்கப்பட்டது