உள்ளடக்கத்துக்குச் செல்

தித்திவங்சா நிலையம்

ஆள்கூறுகள்: 3°10′23″N 101°41′43″E / 3.17306°N 101.69528°E / 3.17306; 101.69528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 AG3   SP3   MR11   PY17   CC13 
தித்திவங்சா
| எல்ஆர்டி | எம்ஆர்டி | மோனோ
Titiwangsa Station
தித்திவங்சா மோனோரெயில் நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்துன் ரசாக் சாலை, கோலாலம்பூர்
ஆள்கூறுகள்3°10′23″N 101°41′43″E / 3.17306°N 101.69528°E / 3.17306; 101.69528
உரிமம் பிரசரானா
எம்ஆர்டி நிறுவனம்
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்[1]
தடங்கள்  அம்பாங் 
 செரி பெட்டாலிங் 
 மோனோரெயில் 
 புத்ராஜெயா 
 எம்ஆர்டி சுற்று  (திட்டத்தில்)
நடைமேடை2 பக்க மேடைகள் (எல்ஆர்டி); 2 பக்க மேடைகள் (மோனோரெயில்); 1 தீவு மேடை (எம்ஆர்டி)
இருப்புப் பாதைகள்2 (எல்ஆர்டி); 1 (மோனோரெயில்); 2 (எம்ஆர்டி)
கட்டமைப்பு
கட்டமைப்பு வகை AG3   SP3   MR11   CC08  (உயர்த்தப்பட்ட நிலை)
 PY17  (நிலத்தடி)
நடைமேடை அளவுகள்4
தரிப்பிடம் இல்லை
துவிச்சக்கர வண்டி வசதிகள்விசையுந்து உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு AG3   SP3   MR11   PY17   CC08 
வரலாறு
திறக்கப்பட்டது6 திசம்பர் 1998 (எல்ஆர்டி); 31 ஆகத்து 2003 (மோனோரெயில்); 16 மார்ச் 2023 (எம்ஆர்டி); 2028-2030 (எம்ஆர்டி சுற்று)
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
செந்தூல் தீமோர்
 
அம்பாங் வழித்தடம்
 
தித்திவங்சா
அம்பாங்
செந்தூல் தீமோர்
 
செரி பெட்டாலிங்
 
தித்திவங்சா
புத்ரா
சௌக்கிட்
கேஎல் சென்ட்ரல்
 
மோனோரெயில்
 
தித்திவங்சா
முடிவிடம்
செந்தூல் பாராட்
குவாசா
 
புத்ராஜெயா
 
கோலாலம்பூர்
புத்ராஜெயா
  திட்டத்தில்  
டூத்தா வளாகம்
வலது சுற்று
 
எம்ஆர்டி சுற்றுவழி
 
புவா
இடது சுற்று
அமைவிடம்
Map
தித்திவங்சா நிலையம்

தித்திவங்சா நிலையம் அல்லது தித்திவங்சா விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Titiwangsa Station; மலாய்: Stesen Titiwangsa; சீனம்: 蒂蒂旺沙站) என்பது மலேசியா, கோலாலம்பூர், செந்தூல் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாற்றுவழிப் போக்குவரத்து (Interchange station) நிலையமாகும்.

இந்த நிலையத்திற்கு அம்பாங் வழித்தடம், செரி பெட்டாலிங் வழித்தடம், கோலாலம்பூர் மோனோரெயில், புத்ராஜெயா வழித்தடம் ஆகிய 4 வழித்தடங்கள் சேவை செய்கின்றன.

அந்த நான்கு தொடருந்து வழித்தடங்களுக்கும் இடையே ஒரு தடையற்ற கட்டண ஒருங்கிணைப்பை இந்த நிலையம் அனுமதிக்கிறது.

பொது

[தொகு]

தித்திவங்சா துணை மாவட்டத்தின் துன் ரசாக் சாலையில் (Jalan Tun Razak); கோம்பாக் ஆற்றின் மருங்கில் இந்த நிலையம் அமைந்துள்ளது. மற்றும் இந்த நிலையத்திற்கு அருகில் தித்திவாங்சா சென்ட்ரல் என்று அழைக்கப்படும் தித்திவாங்சா பேருந்து நிலையமும் உள்ளது.

இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று முன்பு அழைக்கப்பட்ட வழித்தட அமைப்பின், இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக 1998-இல், இந்த நிலையம் முதன்முதலில் திறக்கப்பட்டது. அந்தக் கட்டத்தில், தித்திவங்சா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இந்த நிலையத்தை இணைப்பதே முதன்மை நோக்கமாக இருந்தது.

துன் ரசாக் நிலையம்

[தொகு]

இஸ்டார் வழித்தட அமைப்பின் 2-ஆம் கட்டத்தின் கீழ், கோலாலம்பூரின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்குச் சேவை செய்ய 11 நிலையங்களைக் கொண்ட 15 கி.மீ. தொடருந்து பாதை அமைக்கப்பட்டது. அந்தக் கட்டத்தில் தித்திவங்சா நிலையத்திற்கு துன் ரசாக் நிலையம் என்று பெயரிடப்பட்டது.[2]

இலகு விரைவுப் போக்குவரத்து

[தொகு]

தித்திவாங்சா எல்ஆர்டி நிலையம் என்பது அம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடம் எனும் இரு வழித்தடங்களின் வழியாக தெற்கே அம்பாங் எல்ஆர்டி நிலையம், புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் ஆகிய நிலையங்களுக்கும்; வடக்கே செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம் நோக்கிச் செல்லும் தொடருந்துகளுக்கான ஓர் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையமாகச் சேவை செய்கிறது.

முன்னாள் இஸ்டார் வழித்தடத்தின் இரண்டாம் கட்ட வளர்ச்சியின் ஒரு பகுதியாக, 1998-இல் திறக்கப்பட்ட இந்த நிலையம், தித்திவாங்சா நகர்ப் பகுதிகள்; மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகள்; ஆகியவற்றை ஒன்றோடு ஒன்றாக இணைப்பதை முதனமை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வசதிகள்

[தொகு]

இலகு விரைவுப் போக்குவரத்து வழித்தடங்களின் வடக்குப் பகுதியில் உள்ள அனைத்து நிலையங்களையும் போலவே இந்த நிலையமும் உயரத்தப்பட்ட நிலையில் உள்ளது. மேல் தளத்தில் இயங்குதளங்கள் உள்ளன. நடு தளத்தில் பயணச்சீட்டு தானியங்கிகள், பொருட்கள் வைக்குமிடம்; பயணத்திற்காகக் காத்திருக்கும் வசதிகள் உள்ளன.

பேருந்து சேவை

[தொகு]

தித்திவங்சா நிலையத்திற்கு வடக்கே கோம்பாக் ஆற்றுப் பகுதியில், பெக்கெலிலிங் பேருந்து நிலையம் (Pekeliling Bus Station) என்று அழைக்கப்படும் ஒரு பேருந்து மையம் உள்ளது; பேருந்து மையத்தைச் சுற்றிலும் பயணிகளுக்கு நிழல் தரும் கூடங்களும் உள்ளன. இந்த நிலையம் பல உள்ளூர்ப் பேருந்து சேவைகளை வழங்குகிறது. முதன்மையாக, ரேபிட் பேருந்து மற்றும் கோ கேஎல் நகர பேருந்துகள் சேவையில் உள்ளன.

மேற்கு பகாங்கில் உள்ள முக்கிய நகரங்களுக்கு இங்கிருந்து நகரங்களுக்கு இடையிலான பேருந்துச் சேவைகள் உள்ளன. பகாங் மாநிலத்தின் கெந்திங் மலை (ஏரோபஸ்), பெந்தோங் (மாரா லைனர், சென்ட்ரல் பகாங், பகாங் லின் சியோங் பேருந்துகள்), ரவுப், கோலா லிப்பிஸ், கேமரன் மலை, ஜெராண்டுட், தெமர்லோ, திரியாங் நகரங்களுக்கும் சேவைகள் வழங்கப்படுகின்றன.

எண் முனையம் நடத்துநர் குறிப்பு
254  ஆயர் பனாஸ் தித்திவங்சா பேருந்து நிலையம் ரேபிட் பேருந்து [3]
270  தித்திவங்சா பேருந்து நிலையம் அவானா இஸ்கைவே வாவாசான் சுத்திரா (எர்ரோபஸ்)
302  தித்திவங்சா கேஎல்சிசி எல்ஆர்டி நிலையம் ரேபிட் பேருந்து [4]
402  மலூரி தித்திவங்சா பேருந்து நிலையம் ரேபிட் பேருந்து [5]
GOKL 03  தித்திவங்சா பேருந்து நிலையம் கோலாலம்பூர் சென்ட்ரல் கோலாலம்பூர் மாநகராட்சி (கோ கேஎல் நகர பேருந்து) [6]
GOKL 04  தித்திவங்சா பேருந்து நிலையம் புக்கிட் பிந்தாங் கோலாலம்பூர் மாநகராட்சி (கோ கேஎல் நகர பேருந்து) [7]
GOKL 05  தித்திவங்சா பேருந்து நிலையம் மின்டெப் கோலாலம்பூர் மாநகராட்சி (கோ கேஎல் நகர பேருந்து) [8]
508  தித்திவங்சா பேருந்து நிலையம் ரவுப் பேருந்து நிலையம் பகாங்

காட்சியகம்

[தொகு]

தித்திவங்சா நிலையக் காட்சிப் படங்கள்:

நிலையச் சுற்றுப்புறம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd, which is responsible for overseeing the urban rail lines of Ampang Line and Sri Petaling Line, Kelana Jaya Line, other than the Monorail Line services". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
  2. Chia Mui Wee (1998). Persepsi pengguna terhadap penggunaan perkhidmatan pengangkutan Sistem Transit Aliran Ringan Sdn. Bhd. Universiti Malaya: Bahagian Pentadbiran Perniagaan,Fakulti Ekonomi dan Pentadbiran, Universiti Malaya. p. 87.
  3. "Peta laluan, jadual, hentian untuk laluan 254 - Ayer Panas Chow Kit". Moovit. 31 July 2018. Archived from the original on 19 April 2019. பார்க்கப்பட்ட நாள் 23 March 2020.
  4. "Peta laluan, jadual, hentian untuk laluan 302 - Hab Titiwangsa Suria KLCC". Moovit. 22 November 2017. Archived from the original on 19 April 2019. பார்க்கப்பட்ட நாள் 23 March 2020.
  5. "Peta laluan, jadual, hentian untuk laluan 402 - Hab Titiwangsa". Moovit. 21 November 2017. Archived from the original on 26 April 2019. பார்க்கப்பட்ட நாள் 24 March 2020.
  6. "Peta laluan, jadual, hentian untuk laluan GoKL Hab Titiwangsa KL Sentral". Moovit. Archived from the original on 9 May 2019. பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.
  7. "Peta laluan, jadual, hentian untuk laluan GoKL Hab Titiwangsa Bukit Bintang". Moovit. Archived from the original on 9 May 2019. பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.
  8. "Peta laluan, jadual, hentian untuk laluan GoKL Hab Titiwangsa Mindef". Moovit. 2 March 2019. Archived from the original on 9 May 2019. பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]