தாமிகா மல்லோரி
தாமிகா மல்லோரி | |
---|---|
2020இல் மல்லோரி | |
பிறப்பு | தாமிகா டேனியல் மல்லோரி சூன் 8, 1980 பிரான்க்சு, நியூயார்க்கு நகரம், நியூயார்க், அமெரிக்க ஐக்கிய நாடுகள்[1] |
படித்த கல்வி நிறுவனங்கள் | நியூ ரோசெல் கல்லூரி[2] |
பணி | ஆர்வலர் |
செயற்பாட்டுக் காலம் | 2002–தற்போது வரை |
அறியப்படுவது | 2017 மகளிர் அணிவகுப்பின் தலைவர் |
தாமிகா டேனியல் மல்லோரி (Tamika Danielle Mallory) (பிறப்பு:1980 சூன் 8) [1] ஒரு அமெரிக்க ஆர்வலர். இவர் 2017 மகளிர் அணிவகுப்பின் முன்னணி அமைப்பாளர்களில் ஒருவராக இருந்தார். அதற்காக இவரும் இவரது மூன்று இணைத் தலைவர்களும் அந்த ஆண்டு டைம் 100 இல் அங்கீகரிக்கப்பட்டனர். மல்லோரி துப்பாக்கி கட்டுப்பாடு, பெண்ணியம், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தொடங்கிய பன்னாட்டுச் செயற்பாட்டு இயக்கமான கருப்பர் உயிரும் உயிரே இயக்கம் ஆகியவற்றின் ஆதரவாளர்.
சொந்த வாழ்க்கை
[தொகு]மல்லோரி நியூயார்க் நகரத்தின் ஹார்லெமில் ஸ்டான்லி மற்றும் வான்சில் மல்லோரி ஆகியோருக்குப் பிறந்தார். இவர் மன்ஹாட்டனிலுள்ள மன்ஹாட்டன்வில் மாளிகையில் வளர்ந்தார். மேலும் இவருக்கு 14 வயதாக இருந்தபோது பிராங்க்ஸில் உள்ள கூட்டுறவு நகரத்திற்கு சென்றார். [3] இவரது பெற்றோர் சமூக ஆர்வலர்களாகவும், அமெரிக்கா முழுவதும் ஒரு முன்னணி குடிசார் உரிமைகள் அமைப்பான ரெவரெண்ட் அல் ஷார்ப்டனின் தேசிய செயல் வலையமைப்பின் நிறுவன உறுப்பினர்களாக்வும் இருந்தனர். [4] இதில் இவர்கள் செய்த பணிகள் இவரை சமூக நீதி மற்றும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் மீது ஈர்த்தன.
மல்லோரி, தாரிக் என்ற தனது மகனுக்கு ஒற்றைத் தாயாக இருக்கிறார் [3] இவரது மகனின் தந்தை ஜேசன் ரியான்ஸ் 2001இல் கொலை செய்யப்பட்டார்.[5] ரெவரெண்ட் அல் ஷார்ப்டனின் தேசிய செயல் வலையமைப்புடனான தனது அனுபவம் இந்த துயரத்தை செயல்பாட்டுடன் எதிர்வினையாற்ற கற்றுக்கொடுத்ததாக இவர் விளக்குகிறார். இவரது மகனும் வலையமைப்பின் உறுப்பினராக இருக்கிறார். [6]
2018 ஆம் ஆண்டில், மல்லோரி, சர்ச்சைக்குரிய இஸ்லாம் தேசத்தின் தலைவர் லூயிஸ் பராகானுடன் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டதற்காக விமர்சனங்களை எதிர்கொண்டார். மேலும், 2019 மகளிர் அணிவகுப்பு மாதத்திலிருந்து பதவி விலக அழைப்பு விடுக்கப்பட்டார். [7] யூதர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மல்லோரி 2019 செப்டம்பரில் இந்த அமைப்பை விட்டு வெளியேறினார். ஆனால் மகளிர் அணிவகுப்பு மாதத்தின் சட்டங்களின்படி, மல்லோரி தனது பதவிக் காலம் முடிவடைந்த பின்னரே வெறுமனே வெளியேறினார். குற்றச்சாட்டுகள் காரணமாக அல்ல
அரசியல் செயல்பாடு
[தொகு]11 வயதில் குடிசார் உரிமைகள் இயக்கம் பற்றி மேலும் அறிய மல்லோரி ரெவரெண்ட் அல் ஷார்ப்டனின் தேசிய செயல் வலையமைப்பில் உறுப்பினரானார். தான் 15 வயதை எட்டிய நேரத்தில், இவர் அதில் ஒரு தன்னார்வ ஊழியராக இருந்தார். இவர் 2011 இல் அமைப்பின் இளைய நிர்வாக இயக்குநரானார். 14 ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர், [4]நிர்வாக இயக்குநராக இருந்த இவர் தனது சொந்த செயல்பாட்டு இலக்குகளைப் பின்பற்றுவதற்காக 2013ஆம் ஆண்டில் விலகினார். ஆனால் தற்போதும் அதன் பணியில் பங்கேற்கிறார். பேரணிகளில் கலந்துகொண்டு உறுப்பினர்களை நியமிக்கிறார்.
2017 மகளிர் அணிவகுப்பு
[தொகு]மல்லோரி, பாப் பிளாண்ட், கார்மென் பெரெஸ், மற்றும் லிண்டா சர்சோர் ஆகியோர் 2017 ஆம் ஆண்டு மகளிர் அணிவகுப்பு என்ற உலகளாவிய போராட்டத்தை 2017 சனவரி 21 அன்று ஏற்பாடு செய்தனர். இந்த அணிவகுப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவியேற்புக்கு எதிரான ஒரு போராட்டமாகும். மேலும் பெண்களின் உரிமைகள், குடிவரவு சீர்திருத்தம், அகனள், அகனன், ஈரர், திருனர் உரிமைகள், சுகாதார பாதுகாப்பு சீர்திருத்தம், சுற்றுச்சூழல் சீர்திருத்தம், இன நீதி மற்றும் இன சமத்துவம் ஆகியவற்றை ஆதரித்தது.
மல்லோரி 2019 மகளிர் அணிவகுப்பின் இணைத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். இவர் மார்ச் 2017 முதல் தனது இணைத் தலைவர்களுடன் அணிவகுப்பின் தலைமையை ஏற்றுக்கொண்டார்: லிண்டா சர்சோர், கார்மென் பெரெஸ் மற்றும் பாப் பிளாண்ட் ஆகியோர். [8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Tamika Mallory". Archives of Women's Political Communication (in ஆங்கிலம்). Carrie Chapman Catt Center for Women and Politics of Iowa State University. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
- ↑ Abdul-Aleem, Maryam (12 April 2011). "Tamika Mallory: Young and powerful new executive director of NAN". New York Amsterdam News. http://amsterdamnews.com/news/2011/apr/12/tamika-mallory-young-and-powerful-new-executive/.
- ↑ 3.0 3.1 Barker, Cryil Josh (24 October 2013). "Tamika Mallory: The Beauty of Activism". New York Amsterdam News. http://amsterdamnews.com/news/2013/oct/24/tamika-mallory-beauty-activism/.
- ↑ 4.0 4.1 Keck, Catie (20 January 2017). "Meet Tamika Mallory, the Lifelong Activist Who Organized the Women's March on Washington". Complex. https://www.complex.com/life/2017/01/tamika-mallory-interview-womens-march-on-washington-trump.
- ↑ Nicole, Einbinder (13 July 2017). "This Is Why Hundreds Of Women Are Going After The NRA" (in en). Bustle. https://www.bustle.com/p/this-is-why-hundreds-of-women-are-going-after-the-nra-69967.
- ↑ Adam Serwer (11 March 2018). "Why Tamika Mallory Won’t Condemn Farrakhan" (in en). The Atlantic. https://www.theatlantic.com/politics/archive/2018/03/nation-of-islam/555332/.
- ↑ "America's Midterms — The Blue Wave" (in ஆங்கிலம்). Manhattan Neighborhood Network. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
- ↑ Stockman, Farah (December 23, 2018). "Women's March Roiled by Accusations of Anti-Semitism" (in en-US). The New York Times. பன்னாட்டுத் தர தொடர் எண்:0362-4331. https://www.nytimes.com/2018/12/23/us/womens-march-anti-semitism.html.
வெளி இணைப்புகள்
[தொகு]- Appearances on C-SPAN