உள்ளடக்கத்துக்குச் செல்

தாமசு பர்கெ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமசு பர்கெ
Thomas Burke
1918 ஆம் ஆண்டில் தாமசு பர்கெ
தனிநபர் தகவல்
பிறப்புசனவரி 15, 1875
பாசுடன், அமெரிக்கா
இறப்புபிப்ரவரி 14, 1929
பாசுடன், மாசாசூசெட்சு, அமெரிக்கா
Alma materபாசுடன் பல்கலைக்கழக சட்டப் பள்ளி
உயரம்6 அடி 0 அங்குலம்
எடை146 எல்பி
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)100-800 மீ
கழகம்பாசுடன் தடகள சங்கம்
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)100 மீ – 11.2 (1895)
200 மீ – 22.6 (1897)
400 மீ – 48.5 (1896)
800 மீ – 1:55.9 (1897)

தாமசு எட்மண்டு டாம் பர்கெ (Thomas Edmund "Tom" Burke) ஓர் அமெரிக்க ஓட்டப்பந்தய வீரராவார். 1875 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1896 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ஒலிம்பிக் போட்டியின் 100 மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் வெற்றி பெற்ற முதல் வீரராவார்.[1]

வாழ்க்கைக்குறிப்பு

[தொகு]

பர்க் 1875 ஆம் ஆண்டு மாசசூசெட்சில் பிறந்தார். தெற்கு பாசுடனில் உள்ள சஃபோல்க் தடகள சங்கம் மற்றும் பாசுடன் தடகள சங்கம் ஆகியவற்றிற்காக இவர் போட்டியிட்டார். [2]

பாசுடன் பல்கலைக்கழகச் சட்டப் பள்ளியில் மாணவராக இருந்த பர்கெ 1895 ஆம் ஆண்டு நடைபெற்ற தடகளப் போட்டிகளில் தொழில்முறை தடகள ஒன்றியப் பட்டத்தை வென்றார். இப்போட்டியில் பர்கெ 400 மீட்டர், 440 யார்டு போட்டிகளில் ஓடி வென்றார். இதன் மூலம் 400 மீட்டர், 440 யார்டு ஓட்டப்பந்தயங்களில் புகழ்பெற்ற தடகள வீரரானார். ஏதென்சு நகரில் 1896 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடக்க நவீன ஒலிம்பிக் போட்டிகளில் இவர் கலந்து கொண்ட முதல் நிகழ்வில் பல சிறந்த ஓட்டப்பந்தய வீரர்கள் இல்லை. வியக்கத்தக்க வகையில் பர்கெ 100 மீட்டர் பந்தயத்தை வென்றார். குதிகால் தொடக்க முறை எனப்படும் உடல் வளைந்த நிலையில் நின்று ஓடத் தொடங்குபவர் என்பதற்காகவும் பர்கெ அறியப்படுகிறார். இம்முறை அந்த நேரத்தில் அசாதாரணமானது ஆனால் இப்போது நிலையான பயன்பாட்டில் உள்ளது. இறுதிப் போட்டியில் பர்கெ 12.0 நொடிகளில் ஓடி முதல் பரிசை வென்றார். தொடக்க சுற்றில் இவர் மேலும் சிறப்பாக 11.8 நொடிகளில் ஓடியிருந்தார்.

இதே ஒலிம்பிக்கில், பர்கெ 400 மீட்டர் ஓட்டத்தையும் வென்றார். இந்த நிகழ்விற்கான பர்கெவின் நேரங்கள் தொடக்க சுற்றில் 58.4 நொட்டிகளாகவுனம் இறுதிப் போட்டியில் 54.2 நொட்டிகளாகவும் இருந்தது இரண்டு போட்டிகளிலும் பர்கெ முதலிடம் பிடித்தார்.

பின்னர் பர்கெ தனது வாழ்க்கையில் நீண்ட தூர ஓட்டங்களிலும் நிபுணத்துவம் பெற்றார். 440 யார்டு 880 யார்டு ஓட்ட நிகழ்வுகளில் கல்லூரிகள் சங்க அமெரிக்கத் தொழில் முறை தடகளப் பட்டங்களை வென்றார். 1896 ஒலிம்பிக்கில் பெற்ற வெற்றியால் ஈர்க்கப்பட்டு பாசுடனில் 1897 ஆம் ஆண்டில் நடைபெற்ற மராத்தான் நிகழ்வில் தொடக்க ஓட்டக்காரர்களில் ஒருவராக இருந்தார்.

பர்கெ பின்னர் ஒரு வழக்கறிஞரானார். ஆனால் ஒரு தடகள பயிற்சியாளராகவும், பாசுடன் செய்தியிதழ் போன்ற பத்திரிகைகளில் பகுதிநேர பத்திரிகையாளராகவும் இருந்தார்,

43 வயதாக இருந்தபோது இவர் முதலாம் உலகப் போரில் முதல் கப்பற்படை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அமெரிக்க இராணுவத்தில் இந்த பதவியைப் பெற்ற மூத்த மனிதர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

1929 ஆம் ஆண்டு 53 ஆவது வயதில் ஒரு படகு விபத்தில் சிக்கி பர்கெ இறந்தார். [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Thomas Burke". Olympedia. பார்க்கப்பட்ட நாள் 20 December 2020.
  2. https://irishboston.blogspot.com/2011/04/boston-runner-thomas-e-burke-wins-440.html
  3. https://irishboston.blogspot.com/2011/04/boston-runner-thomas-e-burke-wins-440.html

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமசு_பர்கெ&oldid=3995971" இலிருந்து மீள்விக்கப்பட்டது