தலைமை அமைச்சரின் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம்
தலைமையமைச்சரின் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம் (PMGSY)[1] தேசிய அளவில் மத்திய அரசின் நிதி உதவியால் ஊரகங்களில் உள்ள அனைத்து சாலையற்ற கிராமங்களுக்கும் சாலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் 2000 ஆம் ஆண்டு திசம்பர் 25-ம் தேதி தொடங்ககப்பட்டது. இத்திட்டம் முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் அடல் பிகாரி வாஜ்பாயியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் மைய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின்[2] கீழ் செயல்படுகிறது.
தலைமை அமைச்சரின் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம் | |
---|---|
தலைமை அமைச்சர் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டம் | |
நாடு | இந்தியா |
துவங்கியது | 25 திசம்பர் 2000 |
தற்போதைய நிலை | செயல்படுகிறது |
இணையத்தளம் | pmgsy |
நோக்கம்
[தொகு]அனைத்து கிராமங்களுக்கும் சாலை ஏற்படுத்த வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி,
- 2003 ஆம் ஆண்டிற்குள் 1000 பேரும் அதற்கு மேல் மக்கள் தொகைக் கொண்ட கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்துதல்.
- 2007 ஆம் ஆண்டிற்குள் 500 பேரும் அதற்கு மேல் மக்கள் தொகைக் கொண்ட கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்துதல்.
- 2003 ஆம் ஆண்டிற்குள் 500 பேரும்ம் அதற்கு மேல் மக்கள் தொகைக் கொண்ட மலைவாழிடங்கள் (வட கிழக்கு, சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், சம்மு காசுமீரம், உத்திராஞ்சல்) பழங்குடி, பாலைவனப் பகுதிகளில் சாலை வசதி ஏற்படுத்துதல்.
- 2007 ஆம் ஆண்டிற்குள் 250 பேரும் அதற்கு மேல் மக்கள் தொகைக் கொண்ட மலைவாழிடங்கள் (வட கிழக்கு, சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், சம்மு காசுமீரம், உத்திராஞ்சல்) பழங்குடி மற்றும் பாலைநிலப் பகுதிகளில் சாலை வசதி ஏற்படுத்துதல்.
இணையத்தள மேலாண்மை, கண்காணிப்பு அமைப்பு (OMMS)
[தொகு]இத்திட்டத்தினைச் சரியான முறையில் செயல்படுத்த ஓர் இணையத்தள மேலாண்மை, கண்காணிப்பு அமைப்பு (OMMS)[3] புவியியல் தகவல் முறையில் (GIS) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான இலக்குகளை அடையாளம் காணவும், திட்டப்பணிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. மகாராட்டிரா மாநிலத்தில் பூனே நகரில் உள்ள மின் ஆளுகை துறையான சி-டாக் (C-DAC - Centre for Development of Advanced computing),[4] எனப்படும் ஒன்றிய உயர்தர கணினி மேம்பாட்டு மையத்தால் வடிவமைக்கப்பட்டது. சிடாக்கு இந்தியாவின் முதன்மையான கணினியியல் ஆராய்ச்சிக்கும் மேம்பாட்டுக்குமான நிறுவனம் ஆகும். இந்தியாவின் மிகப்பெரிய தரவுத் தளங்களில் ஒன்றாகும்.
ஒவ்வொரு புதிய சாலை ஏற்படுத்தும்பொழுதும் அதற்கான செலவினங்களைக் கண்காணிக்கும் வகையில் இணையத்தள மேலாண்மை, கண்காணிப்பு அமைப்பில் (OMMS) ஒரு தனித் தொகுதி உள்ளது. மாநில, மாவட்ட அதிகாரிகள் அளிக்கும் தரவுகளின்படி, இணையத்தள மேலாண்மை, கண்காணிப்பு அமைப்பு (OMMS) அனைத்து மக்களும் காணக்கூடிய விரிவான அறிக்கையை உருவாக்குகிறது. இது மின்னனியல் முறைமைகள் வழியாக பணம் செலுத்துதல், கடவுச்சொல் பாதுகாக்கப்பட்ட கையடக்க வடிவக் கோப்புகள் (PDF), ஊடாடும் அறிக்கைகள் போன்ற மேம்பட்ட கூறுபாடுகளை உள்ளடக்கியுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "PMGSY Scheme Operations Manual Chapter 1". Ministry of Rural Development, Government of India. Archived from the original on 15 December 2013.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-06. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
- ↑ https://online.omms.nic.in
- ↑ https://www.cdac.in