உள்ளடக்கத்துக்குச் செல்

தபாஷ் பய்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தபாஸ் பய்சா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 21 56
ஓட்டங்கள் 384 336
மட்டையாட்ட சராசரி 11.29 12.00
100கள்/50கள் -/2 -/-
அதியுயர் ஓட்டம் 66 35*
வீசிய பந்துகள் 3376 2608
வீழ்த்தல்கள் 36 59
பந்துவீச்சு சராசரி 59.36 41.55
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 4/72 4/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/- 8/-
மூலம்: [1], ஏப்ரல் 5 2007

தபாஸ் பய்சா (Tapash Baisya, பிறப்பு: டிசம்பர் 25 1982), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 56 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை மித வேகப் பந்து வீச்சாளரகவும் செயல்படுகிறார். இவர் வங்காளதேச தேசிய அணி தவிர தாக்கா வாரியர்ஸ், கிழக்கு வங்காள துடுப்பாட்ட அணி, ராங்பூர் ரைடர்ஸ் மற்றுக்ம் சியல்கோட் துடுப்பாட அணி ஆகிய அணிகளுக்காகவும் இவர் விளையாடியுள்ளார்.

உள்ளூர்ப் போட்டிகள்

[தொகு]

முதல்தரத் துடுப்பாட்டம்

[தொகு]

2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசிய லீக் கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் கிழக்கு மாகாணத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.சனவரி 18, சாவர் துடுப்பாட்ட அரங்கில் வடக்கு பகுதி துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பட்டப் போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் இரண்டு பந்துகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் தஜூல் இஸ்லாம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் ஒன்பது ஓவர்களை வீசி 32 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார்.இதில் இரு ஓவர்களை மெய்டனாக வீசினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் பத்து பந்துகளில் எட்டு ஓட்டங்களை எடுத்து தஜூல் இஸ்லாம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் பந்துவீச்சில் ஒரு ஓவரை வீசி அறு ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் வடக்கு பகுதி துடுப்பாட்ட அணி ஏழு இலக்குகளில் வெற்றி பெற்றது.[1]

பட்டியல் அ

[தொகு]

2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற தாக்கா பிரீமியர் மாகாண லீக் துடுப்பாட்டத் தொடரில் இவர் அபானி துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். சூன் 8,தாக்க மைதானத்தில் விக்டோரியா சங்க துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ துடுப்பாட்டம் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியில் இரு ஓவர்கள் வீசி 12ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.மட்டையாட இவருக்கு வாய்ப்புகிடைக்கவில்லை. இந்தப் போட்டியில் அபானி அணி ஆறு இலக்குகளில் வெற்றி பெற்றது.[2]

சர்வதேசப் போட்டிகள்

[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம்

[தொகு]

2002 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி இலங்கையில்சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .சூலை 28,கொழும்பில் உள்ள துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 12 ஓவர்கள் வீசி 51 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். இதில் ஒரு ஓவரை மெய்டனாக வீசினார்.103 பந்துகளில் 51 ஓட்டங்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் எட்டு ஓவர்கள் வீசி நாற்பது ஓட்ட்ங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.பின் மட்டையாட்டத்தில் 6 பந்துகளில் 3 ஓட்டங்கள் எடுத்து டி சில்வா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இலங்கைத் துடுப்பாட்ட அணி 288 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[3]

ஒருநாள்

[தொகு]

2002 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.ஆகஸ்டு 4, கொழும்பில் உள்ள துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 5 ஓவர்களை வீசி 43 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்குகினைக் கைப்பற்றினார். மட்டையாட . இந்தப் போட்டியில் இலங்கைத் துடுப்பாட்ட அணி ஐந்து இலக்குகளால் வெற்றி பெற்றது

சான்றுகள்

[தொகு]
  1. "Full Scorecard of East Zone (Bangladesh) vs North Zone (Bangladesh), Bangladesh Cricket League, 2nd Innings - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  2. "Full Scorecard of Victoria Sporting Club vs Abahani Limited, Dhaka Premier Division, Super League - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  3. "Full Scorecard of Sri Lanka vs Bangladesh 2nd Test 2002 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தபாஷ்_பய்சா&oldid=2947535" இலிருந்து மீள்விக்கப்பட்டது