தனுஷா மாவட்டம்
தனுஷா மாவட்டம் (Dhanusa District), (நேபாளி: धनुषा जिल्ला ⓘ, மத்திய நேபாளத்த்தின், மாநில எண் 2-இல் அமைந்துள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிடம் ஜனக்பூர் நகரம் ஆகும்.
1180 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தனுஷா மாவட்டத்தின் மக்கள் தொகை 7,54,777 ஆக உள்ளது. [1] இம்மாவட்டத்தில் பொதுவாக 85% மக்கள் மைதிலி மொழி மற்றும் 4.4% விழுக்காடு மக்கள் நேபாள மொழி பேசுகின்றனர்.
வரலாறு
[தொகு]இராமாயண காவியத்தின் நாயகி சீதை பிறந்த ஊர், இம்மாவட்டத்தின் முக்கிய நகரான ஜனக்பூர் ஆகும். ஜானகி கோயில் மற்றும் இராமன் – சீதையின் திருமண அரங்கம் ஜனக்பூரில் உள்ளது.
பிற தகவல்கள்
[தொகு]இம்மாவட்டம் ஏழு நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. நேபாளத்தின் முதல் அதிபர் ராம் பரன் யாதவ், இம்மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதி எண் 5-இலிருந்து ஏப்ரல் 2008-இல் போட்டியிட்டு வென்றவர். தனுஷா மாவட்டத்தின் தொடருந்து நிலையம், இந்தியாவின் ஜெயா நகருடன் இணைக்கிறது.[2]
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
[தொகு]நேபாளத்தின் புவியியல் மற்றும் தட்ப வெப்ப மண்டலங்கள்[3] | உயரம் | பரப்பளவு % |
---|---|---|
Lower Tropical climate | 300 மீட்டருக்கும் கீழ் | 92.5% |
Upper Tropical | 300 - 1,000 மீட்டர்கள் | 7.5% |
நகராட்சிகள் மற்றும் கிராம வளர்ச்சி மன்றங்கள்
[தொகு]தனுஷா மாவட்டம் ஆறு நகராட்சி மன்றங்களையும், 97 கிராம வளர்ச்சி மன்றங்களையும் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 2013-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418000000/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012.
- ↑ "Registered Star Hotels". Government of Nepal, Ministry of Tourism and Civil Aviation, Tourism Industry Division. Archived from the original on 2010-04-12. பார்க்கப்பட்ட நாள் 2010-08-09.
- ↑
The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013
{{citation}}
: horizontal tab character in|series=
at position 91 (help)
வெளி இணைப்புகள்
[தொகு]- தனுஷா மாவட்ட இணையதளம்
- Dhanusa District map at Digital Himalaya
- (via Nepal Maps)