உள்ளடக்கத்துக்குச் செல்

டேவிட் லிவிங்ஸ்ட்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிட் லிவிங்ஸ்ட்டன்
பிறப்பு(1813-03-19)19 மார்ச்சு 1813
பிலாந்தைர், இசுக்கொட்லாந்து
இறப்பு1 மே 1873(1873-05-01) (அகவை 60)
இன்று ஜாம்பியாவில் உள்ள சித்தம்போ கிராமம்
இறப்பிற்கான
காரணம்
மலேரியா, இரத்தக்கழிசல்

டேவிட் லிவிங்ஸ்ட்டன் (David Livingstone) (1813-1873) என்பவர் ஆப்பிரிக்காக் கண்டத்தித்திற்குச் சென்று அதன் பல பகுதிகளைக் கண்டறிந்து பெரும் புகழ்பெற்ற நாடாய்வாளர் ஆவார்.

பிறப்பு

[தொகு]

இசுக்கொட்லாந்திலுள்ள சிற்றூரில் 1813 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி டேவிட் லிவிங்ஸ்ட்டன் பிறந்தார்.[1]

கல்வி

[தொகு]

எளிய குடும்பத்தில் பிறந்ததால் இவர் தமது பத்தாம் வயதிலேயே ஒரு பஞ்சாலையில் வேலை செய்யத் தொடங்கினார். எனினும் இரவுப் பள்ளிகளில் படித்து வந்தார். பின்பு கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பயின்று மருத்துவப் பட்டம் பெற்றார். 1838 ஆம் ஆண்டு லண்டன் சமயப் பிரசார சங்கத்தில் சேர்ந்தார்.[2]

ஆப்பிரிக்கப் பயணம்

[தொகு]

லண்டன் சமயப் பிரசார சங்கத்தினர் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப 1841-ல் இவரை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பினர். ஆப்பிரிக்காவின் பல பகுதிகளைக் கண்டறிந்தார். 1851 ஆம் ஆண்டு சாம்பசி ஆறு தோன்றும் இடத்தைக் கண்டுபிடித்தார். சாம்பசி ஆற்றில் மிகப் பெரிய அருவியொன்றைக் கண்டு அதற்கு அந்நாளில் இங்கிலாந்தில் ஆட்சி புரிந்த விக்டோரியா மகாராணியின் பெயரால் ‘விக்டோரியா அருவி’ என்று பெயரிட்டார். 1856 ஆம் ஆண்டில் இவர் இங்கிலாந்து திரும்பினார்.

மத்திய ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா பயணம்

[தொகு]

சமயப் பிரச்சார சங்கத்தை விட்டு விலகி 1858ஆம் ஆண்டு மத்திய ஆப்பிரிக்காவையும், கிழக்கு ஆப்பிரிக்காவையும் ஆராய்வதற்காகச் சென்றார். செல்லும் வழியிலே அராபியர்கள் ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக விற்பனை செய்யக் கடத்திச் செல்வதைக் கண்டார். இக்கொடிய முறையை ஒழிக்க இவர் அரும் பாடுபட்டார்.[3]

இறப்பு

[தொகு]

1873 ஆம் ஆண்டில் லிவிங்ஸ்ட்டன் காலமானார். இவருடைய உடலை இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "David Livingstone Centre: Birthplace Of Famous Scot". Archived from the original on 12 பெப்பிரவரி 2007. பார்க்கப்பட்ட நாள் 12 சூலை 2018.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  2. Easton, Mark (3 September 2017). "Why don't many British tourists visit Victoria Falls?". BBC News. பார்க்கப்பட்ட நாள் 2018-07-12.
  3. MacPherson, Hamish (30 April 2023). "Remembering the abolitionist work of explorer David Livingstone". The National (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-01.
  • "குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1993, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.

வெளி இணைப்புகள்

[தொகு]

 இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Cameron, Verney Lovett". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 5. (1911). Cambridge University Press.