உள்ளடக்கத்துக்குச் செல்

சோபெக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோபெக்
வலது கையில் செங்கோல், இடது கையில் ஆங்க் ஏந்திய முதலைத் தலையும், மனித உடலுடன் கூடிய சோபெக் கடவுள்
துணைரெனிநூத்தெட்[1]
பெற்றோர்கள்சேத்/கனும் மற்றும் நெய்த் [2]

சோபெக் (Sobek (also called Sebek) பண்டைய எகிப்தியக் கடவுள்களில் ஒருவர். [3] சோபெக் கடவுள் நைல் நதியின் முதலைகளுடன் தொடர்புறுத்தி பேசப்படுகிறார். இக்கடவுளின் தலைப்பாகம் முதலை உருவத்துடனும், மற்ற பகுதிகள் மனித உடலுடன் கூடியுள்ளது. சோபெக் கடவுள் பார்வோன்களின் வலிமைக்கும், வளமைக்கும், இராணுவ பலத்திற்கும் காரணமாக திகழ்கிறார். மேலும் நைல் நதி முதலைகளிடமிருந்து மக்களைக் காப்பவராகவும் கருதப்படுகிறார். சேத் கடவுளின் மகன் சோபெக் கடவுள் ஆவார்.

வரலாறு

[தொகு]

பழைய எகிப்து இராச்சியக் காலம் (கிமு 2686–2181) முதல், உரோமை பேரரசில் எகிப்து இருந்த காலம் வரை (கிமு30 – 350) சோபெக் கடவுள் தொடர்ந்து எகிப்தியப் பார்வோன்கள் மற்றும் மக்களால் முதலை நகரம், பையூம் மற்றும் கோம் ஓம்போ நகரங்களில் வழிபடப்பட்டார். பழைய எகிப்து இராச்சியத்தினர் இயற்றிய பிரமிடு நூல்களில் சோபெக் கடவுள் நைல் நதி முதலையின் அவதாரம் எனக்குறிப்புகள் உள்ளது. [4][5]

பையூம் நகர பிரமிடில் உள்ள மூன்றாம் அமென்கோதேப்பின் கல்லறைக் கோயிலில சோபெக் கடவுள் சிற்பம்
பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தில் (கிமு 400-கிமு 250) பருந்து தலையுடன், முதலை உடலுடன் கடவுள் சோபெக்கின் சிற்பம்

சோபெக் கடவுள் வழிபாட்டுத் தலங்கள்

[தொகு]

பழைய எகிப்து இராச்சியக் காலம் முதல் சோபெக் கடவுள் வழிபடபட்டாலும், மத்திய கால எகிப்து இராச்சியக் காலத்தில் (கிமு 2055–கிமு 1650) பையூம் நகரம் முழுவதும் சோபெக் கடவுள் வழிபடப்பட்டார். மேலும் பிரமிடுகளில் வைக்கப்பட்ட பார்வோன்களின் கல்லறைகளில், சோபெக் கடவுளின் ஓவியம் வரையப்பட்டிருந்தது. [6][7][8][9] மேலும் சோபெக் கடவுள், வடக்கு எகிப்தின் நைல் ந்தி வடிநிலத்தில் அமைந்த பையூம் நகரத்தின் காவல் தெய்வமாக வழிபடப்பட்டார். பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி பேரரசை ஆண்ட பார்வோன் இரண்டாம் தாலமி சோபெக் கடவுளுக்கு பையூம் நகரத்தில் கோயில் எழுப்பினார்.[10] உரோமை பேரரசில் எகிப்து இருந்த காலத்திலும் சோபெக் கடவுள் வழிபடப்பட்டார். [11]

எகிப்தை ஆண்ட உரோமானியர்கள் காலத்தில், சோபெக் கடவுளை சூரியனாக வழிபட்டனர்
சோபெக் கடவுள் சித்திரம்

படக்காடசிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Francoise Dunand and Christiane Zivie-Coche (trans. David Lorton). (2004). Gods and Men in Egypt: 3000 BCE to 395 CE. Ithaca: Cornell University Press. [hereafter: Gods and Men].
  2. "Gods of Ancient Egypt: Sobek". www.ancientegyptonline.co.uk.
  3. Zecchi 2010, ப. 3–4.
  4. Bresciani 2005, ப. 199.
  5. Bresciani 2005, ப. 200.
  6. Frankfurter 1998, ப. 99, The Local Scope of Religious Belief.
  7. Frankfurter 1998, ப. 151, Mutations of the Egyptian Oracle.
  8. Frankfurter 1998, ப. 159, Mutations of the Egyptian Oracle.
  9. Frankfurter 1998, ப. 160, Mutations of the Egyptian Oracle.
  10. Bresciani 2005, ப. 203.
  11. Sippel, Benjamin (2020). Gottesdiener und Kamelzüchter: Das Alltags- und Sozialleben der Sobek-Priester im kaiserzeitlichen Fayum. Wiesbaden: Harrassowitz. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-447-11485-1.

உசாத்துணை

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
  • Beinlich, Horst. Das Buch vom Fayum: zum religiösen Eigenverständnis einer ägyptischen Landschaft. Wiesbaden: Harrassowitz, 1991.
  • Dolzani, Claudia. Il Dio Sobk. Roma: Accademia nazionale dei Lincei, 1961.
  • Kockelmann, Holger. Der Herr der Seen, Sümpfe und Flussläufe: Untersuchungen zum Gott Sobek und den ägyptischen Krokodilgötter-Kulten von den Anfängen bis zur Römerzeit. Wiesbaden: Harrassowitz, 2018.
  • Barney, Quinten. 'Sobek: The Idolatrous God of Pharaoh Amenemhet III.' Journal of the Book of Mormon and Other Restoration Scripture. Vol. 22, No. 2 (2013), pp. 22–27.
  • Benjamin Sippel: Gottesdiener und Kamelzüchter: Das Alltags- und Sozialleben der Sobek-Priester im kaiserzeitlichen Fayum. Wiesbaden: Harrassowitz, 2020, ISBN 978-3-447-11485-1.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபெக்&oldid=3144186" இலிருந்து மீள்விக்கப்பட்டது