சைலேஷ் குமார் பந்தோபாத்யாய்
சைலேஷ் குமார் பந்தோபாத்யாய் (Sailesh Kumar Bandopadhyay ) இவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு காந்தியத்தை பின்பற்றுபவராகவும், மகாத்மா காந்தியின் நெருங்கிய கூட்டாளியாகவும் ஆவார் [1] . [2] மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறைகளில் இவர் செய்த சேவைகளுக்காக இந்திய அரசு 2010 ல் இவருக்கு மூன்றாவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்ம பூசண் விருது வழங்கியது. [3]
சுயசரிதை
[தொகு]சைலேஷ்குமார் பந்தோபாத்யாய் 1926 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி, வங்காளத்தின் சக்ரதர்பூரில், தற்போது இந்திய மாநிலமான சார்க்கண்டில் பிறந்தார். [4] இவரது தந்தை மிதமான நிதி ஆதாரங்களைக் கொண்ட இந்திய இரயில்வே ஊழியராக இருந்தார். இளம் சைலேஷ் விரைவில் மகாத்மா காந்தியின் செல்வாக்கின் கீழ் வந்தார். 1942 இல் மெட்ரிகுலேசன் தேர்ச்சி பெற்ற பின்னர், இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சேர்ந்தார், பிரித்தானிய இந்தியாவின் காவல்துறையினரால் இரண்டு முறை கைது செய்யப்பட்டார். [5]
1944 ஆம் ஆண்டில், பந்தோபாத்யாய் டாட்டா நகர் தொழிற்சங்க இயக்கத்தில் சேர்ந்தார். இது அப்துல் பாரி, மைக்கேல் ஜான் மற்றும் மோனி கோஷ் போன்ற அறியப்பட்ட தொழிற்சங்க ஆர்வலர்களால் வழிநடத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1946 இல், இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். விரைவில், இவர் அதன் பதவிகளில் உயர்ந்தார். 1951 இல், ஜாம்ஷெட்பூருக்கு அருகிலுள்ள காந்திய கிராம புனரமைப்பு மையத்தின் பொறுப்போடு, மாவட்ட காங்கிரசு குழுவின் அலுவலக செயலாளராக ஆனார். [5]
1951 ஆம் ஆண்டில், பந்தோபாத்யாய் அகில இந்திய நூற்பாளர்கள் சங்கத்தில் சேர்ந்தார். இது உள்நாட்டில் சேவாகிராம் சர்கா சங்கம் அழைக்கப்படுகிறது. 1961 வரை அங்கு பணியாற்றினார். இந்த நேரத்தில், இவர் நிலக்கொடை இயக்கத்திலும் ஈடுபட்டார். 1961 ஆம் ஆண்டில், இவர் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் துணை இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு இவர் 1984 வரை அதன் துணை தலைமை நிர்வாக அதிகாரியாக பணியில் இருந்து ஓய்வு பெறும் வரை பணியாற்றினார். ஓய்வு பெறுவதற்கு முன்னர், பீகார், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளங்களில் இந்த ஆணையத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார். 1969 ஆம் ஆண்டில் காந்தி நூற்றாண்டு கொண்டாட்டக் குழுவின் தலைமை நிர்வாகியாகவும் இருந்தார். [5]
அடுத்த இரண்டு தசாப்தங்களில் பந்தோபாத்யாய் காந்தி சமாரக நிதி போன்ற பல்வேறு அமைப்புகளில் பணியாற்றினார். பிரதமர் தலைமையில், மத்திய தலைவர் காதி குறித்த சான்றிதழ் குழுவின் செயலாளராகவும், காதி மிஷன் அதன் கூட்டு அழைப்பாளராகவும், காதி மற்றும் கிராம கைத்தொழில் ஆணையத்தின் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார். [5]
2006 இல், இவர் மீண்டும் காதி அமைப்பின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏழைகளின் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள பல அமைப்புகளுடன் கிராமப்புறங்களில் பந்தோபாத்யாய் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். [5]
பதவிகள்
[தொகு]1946 முதல் 1951 வரை மாவட்ட காங்கிரசு குழுவின் செயலாளராக பணியாற்றினார். [5] 1961 இல் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் துணை இயக்குநராக இருந்தார். 1969இல் காந்தி நூற்றாண்டு குழுவின் தலைமை நிவாகியாக இருந்தார்.
- 1984 இல் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். 1984இல் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார். காந்தி சமாரக நிதிக்குழுவின் செயலாளராகவும் இருந்தார் [2] மேலும், காதி மிஷனின் கூட்டு ஒருங்கிணைப்பளராகவும், காதி பற்றிய மத்திய சான்றிதழ் குழுவின் தலைவராகவும் இருந்தார்.
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
[தொகு]- பத்ம பூஷண் - 2010 [3]
- ஆனந்த புரஸ்காரம் [5]
- அஷலதா புரஸ்காரம் - விஸ்வ பாரதி பல்கலைக்கழகம்
- அன்னட சங்கர் இலக்கிய விருது - பங்களா அகாடமி
எழுத்துக்களில்
[தொகு]சைலேஷ் குமார் பந்தோபாத்யாய் ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார். இவரது புத்தகங்களில் ஒன்றான காந்தி பரிக்ரமா, கல்கத்தா பல்கலைக்கழகத்தால் தத்துவம் குறித்த மூன்று ஆண்டு கௌரவ பட்டத்திற்கான உரையாக பரிந்துரைக்கப்படுகிறது. [6]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Gandhi Man of peace". பார்க்கப்பட்ட நாள் August 9, 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 2.0 2.1 "Rediff Interview". பார்க்கப்பட்ட நாள் August 9, 2014.
- ↑ 3.0 3.1 "Padma announcement". பார்க்கப்பட்ட நாள் August 7, 2014.
- ↑ "Birth". பார்க்கப்பட்ட நாள் August 9, 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 "iPeace bio". பார்க்கப்பட்ட நாள் August 9, 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Text" (PDF). பார்க்கப்பட்ட நாள் August 9, 2014.