சைக்ளோபுரோப்-2-யீன் கார்பாக்சிலிக் அமிலம்
பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
சைக்ளோபுரோப்-2-யீன் கார்பாக்சிலிக் அமிலம்[1] | |
இனங்காட்டிகள் | |
ChEMBL | ChEMBL1213481 |
ChemSpider | 21782462 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 25241629 |
| |
பண்புகள் | |
C4H4O2 | |
வாய்ப்பாட்டு எடை | 84.07 g·mol−1 |
மட. P | -0.816 |
காடித்தன்மை எண் (pKa) | 4.246 |
காரத்தன்மை எண் (pKb) | 9.751 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சைக்ளோபுரோப்-2-யீன் கார்பாக்சிலிக் அமிலம் (Cycloprop-2-ene carboxylic acid) என்பது C4H4O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் சீனா, சப்பான், தைவான் போன்ற நாடுகளில் காணப்படும் உருசுலா சப்னிகிரிகன்சு என்ற பூஞ்சை வகைகளில் காணப்படும் பூஞ்சை நஞ்சு ஆகும் [2].
உணவாக உட்கொள்ளும்போது இம் மூலக்கூறு ராபடோமயோலிசிசு எனப்படும் தசைச்செல் அழிப்பு நோயை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது [2].
சுண்டெலிக்கான இதன் உயிர்க் கொல்லும் அளவு ஒரு கிலோகிராமுக்கு 2.5 மில்லி கிராம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குருதி ஊன் நீரில் கிரியேட்டின் பாசுபோகினேசு என்ற நொதியின் செயல்பாடு அதிகரித்துக் காணப்படுவதைக் கொண்டு இதை அறியலாம். பலபடியாக்கல் வழியாக நிகழும் யீன் வினை இந்நஞ்சை நீக்கும் [2].
3-(சைக்ளோபுரோப்-2-என்-1-ஆயில்)ஆக்சசோலிடினோன் என்பது வழக்கத்திற்கு மாறான நிலைப்புத்தன்மை கொண்ட ஒரு வகை சைக்ளோபுரோப்-2-யீன் கார்பாக்சிலிக் அமிலமாகும். பாக்சு மற்றும் பலர் இதை தயாரித்தனர். டையீல்சு ஆல்டர் வினையில் பங்கேற்கும்போது இவை டையீனோபில்களாக உள்ளன [3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "NChemBio.179-comp1". The PubChem Project. USA: National Center for Biotechnology Information.
- ↑ 2.0 2.1 2.2 Matsuura, Masanori; Saikawa, Yoko; Inui, Kosei; Nakae, Koichi; Igarashi, Masayuki; Hashimoto, Kimiko; Nakata, Masaya (2009). "Identification of the toxic trigger in mushroom poisoning". Nature Chemical Biology 5 (7): 465–7. doi:10.1038/nchembio.179. பப்மெட்:19465932.
- ↑ Yan, Ni; Liu, Xiaozhong; Pallerla, Mahesh K.; Fox, Joseph M. (2008-06-01). "Synthesis of Stable Derivatives of Cycloprop-2-ene Carboxylic Acid". The Journal of Organic Chemistry 73 (11): 4283–4286. doi:10.1021/jo800042w. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3263. பப்மெட்:18452335. Bibcode: 2007JOCh...72.1134P.