சேத் கோடின்
சேத் கோடின் | |
---|---|
2009 ஆம் ஆண்டில் சேத் கோடின் | |
பிறப்பு | அக்டோபர் 7, 1960 நியூ யார்க். |
படித்த கல்வி நிறுவனங்கள் | இடுப்ச் பல்கலைக்கழகம் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் |
பணி | நூலாசிரியர் மறும் தொழில் முனைபவர் |
வாழ்க்கைத் துணை | கெலன் கோடின் |
வலைத்தளம் | |
SethGodin.com |
சேத் கோடின் (Seth Godin, பிறப்பு: சூலை 10, 1960) ஒரு அமெரிக்க நூலாசிரியர், தொழில் முனைவர், சந்தைப்படுத்துபவர் மற்றும் பேச்சாளர் ஆவார். இவர் 17 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய மனித கூட்டங்கள் (The Tribes) என்னும் நூல் ஒரு சிறந்த சுய மேலாண்மை நூலாகக் கருதப்படுகிறது. முன்னோடியான பல தொழில் நிருவனங்களைத் துவக்கி நடத்தி வந்துள்ளார்
பின்புலம்
[தொகு]நியூ யார்க் நகரில் மெளன்ட் வெர்னன் என்னுமிடத்தில் பிறந்த இவர் வில்லியம்ஸ் வில்லி உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். இடுப்ச் பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் மற்றும் தத்துவத்தில் இளங்கலைப்பட்டமும், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் வணிக மேலாண்மைக் கல்லூரியில்[1] வணிக மேலாண்மை முதுகலைப் பட்டப்படிப்பும் பயின்றார். 1983 முதல் 1986 ஆம் ஆண்டு வரை சுபின்னாக்கர் என்னும் மென்பொருள் நிறுவனத்தில் முத்திரை மேலாளராகப் பணிபுரிந்தார்.[1]
1986 ஆம் ஆண்டு சுபின்னாக்கர் நிறுவனத்திலிருந்து விலகி, தமது சேமிப்பான 20,000 டாலர்களைப் பயன்படுத்தி நியூயார்க் நகரில்சொந்தமாகப் புத்தகங்களைச் சிப்பம் செய்யும் தொழிலைத் தொடங்கினார். பின்பு மார்க் கர்சிப் என்பவரைச் சந்தித்து இயோயோடைன் என்னும் நிறுவனத்தை நிறுவினார்.[2] ஒருசில ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகங்களைச் சிப்பம் செய்யும் தொழிலைப் பணியாளர்களுக்கு விற்றுவிட்டு இயோயோடைனிலேயே முழுக்கவனம் செலுத்தினார். இங்கு தான் அவர் “அனுமதியுடன் சந்தைப்படுத்துதல்” என்னும் கோட்பாட்டையும் உருவாக்கினார்.
வணிக நிறுவனங்கள்
[தொகு]1995 ஆம் ஆண்டு இயோயோடைனை நிறுவினார். இதன் மூலம் போட்டிகள், கணினி மூலம் விளையாட்டுக்கள், வணிக நிறுவனங்களுக்கு தகவல் தேடல் போன்ற சேவைகளைப் பயனாளிகளுக்கு செய்து கொடுத்தார். 1996 ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் இபிளாட்ரியான பங்குதாரர்கள் என்னும் முன்னோடியான ‘துணிகரமுயற்சிக்கு நிதி வழங்கும் நிறுவனம்’ 20 விழுக்காடு பயனை எதிபார்த்து 4 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தது..[2] கணினிமூலம் அமெரிக்கா, அமெரிக்கன் எக்ச்பிரச், எச்சூர் பிளாக், மைக்ரோசாப்ட், புராக்டர் மற்றும் கேம்பிள், சோனி இசை, சீபிரன்ட், வோல்வோ போன்ற நிறுவனங்கள் இயோயோடைனின் சேவையைப் பயன்படுத்தியுள்ளனர்.[3] இயோயோடைன் நிறுவனத்தில், சேத் கோடின் “அனுமதியுடன் சந்தைப்படுத்துவது, அந்நியர்களை நண்பர்களாகவும், நண்பர்களை வாடிக்கையாளர்களாகவும் மாற்றுதல்” என்னும் நூலை வெளியிட்டார். 1998 ஆம் ஆண்டு இயோயோடைன் நிறுவனத்தை யாகூ நிறுவனத்திற்கு 30 மில்லியன் டாலர்களுக்கு விற்றார்.[4][5] அதன் பின் 2000 ஆம் ஆண்டு வரை யாகூ நிறுவனத்தின் நேரடி சந்தைப்பிரிவின் உதவித் தலைவராக பதவி வகித்தார்.[6]
2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுகுயிடோ என்னும் சமுக வலைத் தளத்தைத் துவக்கினார். இந்நிறுவனம் வாடிக்கையாளர்களை ‘ஆடிஆசான்கள்’ என்று அழைத்து ‘ஆடிகள்’ என்னும் வலைத்தளப் பக்கங்களில் தமக்கு ஆர்வமான பொருள் குறித்து தகவல்களைப் பதிவு செய்ய அனுமதித்தது.[7] இந்நிறுவனம் தமது வருவாயில் 5 விழுக்காடைத் தானமாகவும் 50 விழுக்காடை ஆடிஆசான்களுக்கும் வழங்கியது.[8] சேத் கோடினைப் பற்றியும் சுகுயிடோ பற்றியும் தகவல்கள் சிஎன்என் நிறுவனத்தினாலும், வாசிங்டன் போசிட் பத்திரிகையினாலும் வெளியிடப்பட்டன.[9][10] இந்த வலைத்தளம் எச் எக்ச் எச் டபுள்யூ சமூக வலைத்தளப்பிரிவில் சிறந்த வலைத்தளத்திற்கான பரிசையும் வென்றது.[11] 2008 ஆம் வருடம் சூலை மாதத்தில் உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட 500 வலைத்தளங்களில் இதுவும் ஒன்று.[12] 2014 ஆம் வருடம் ஆகஸ்டு 15 ஆம் தேதி, சுகுயிடோ நிறுவனத்தை கப்பேசச் நிறுவனம் வாங்கி விட்டதாகவும், சுகுயிடோவின் சில அம்சங்களை கப்பேசஜ் நிறுவனத்திலிருந்து தளப்படுத்துவது தான் நோக்கம் என்று சேத் கோடின் கூறுகிறார்.[13]
மற்ற திட்டங்கள்
[தொகு]சேத்கோடின் “இதைமாற்று” என்னும் வலைத்தளம் துவங்கத் தேவையான கருவை உருவாக்கினார். இந்த வலைத்தளம் பிடிஎப் கோப்புகள் மூலம் சிந்தனைளைப் பரப்பும் நோக்கம் கொண்டது.[14] இந்த வலைத்தளத்தை உருவாக்குவதற்கு கோடின் 2004 ஆம் ஆண்டு கோடையில், அமித்குப்தா, கேதரின் கிக்கி, உநோவா வெய்ச், போபி எச்பிரிட்டு, மைக்கேல் சிர்வோடாஸ் என்று 5 பயிற்சியாளர்களை பணிக்கு அமர்த்தினார்.[15] 2004 ஆகஸ்டு 14 ஆம் தேதி இந்த வலைத்தளம் பயனுக்கு வந்தது.[16] டாம் பீட்டாச், கிரிச் ஆண்டா்சன், கை கவாசாகி போன்ற நிறுவனங்கள் தங்களுடைய அறிவிப்புக்களை இந்த வலைதளத்தில் வெளியிட்டன.[17] 2005 ஆம் ஆண்டு சூலை மாதம் ‘இதைமாற்று’ என்னும் இந்த வலைத்தளம் 800 சிஇத்ரிட் என்னும் வணிக தகவல்களை வழங்கும் அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது.[18][19]
2008 ஆண்டு டிசம்பர் மாதம் வணிக மேலாண்மை முதுகலைப்படிப்பிற்கு மாற்றாக, ஆறு மாதப் படிப்பு ஒன்றை, நியூயார்க் நகரம் கேசிடிங் இடத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடத்த இருப்பதாகவும் விரும்பியவர்கள் அணுகலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.[20] 48000 நபர்கள் விளம்பரத்தைப் பார்வையிட்டு 340 பேர் மனு செய்து கொண்டனர். இதிலிருந்து 27 பேரை குழு நேர்காணலுக்கு அழைத்தார். இவர்கள் சுமார் இரண்டு மணி நேரம் ஒருவருக் கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.[21] இவர்களும் சேத் கோடினும் கலந்து பேசி சிறந்தவர்கள் என்று தாம் கருதியவர்களுள் 9 பேர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இவர்கள் ஆறுமாதம் பயிற்சியளிக்கப்பட்டு, பட்டம் பெற்றுச் சென்றனர்.[22]
2012 ஆம் ஆண்டு சூன் மாதம் பொதுமக்கள் நிதியுதவியுடன் நூல் வெளியீடு என்னும் புதிய திட்டத்தை அறிவித்தார். தமது அடுத்த நூலான ‘தி ஐ காரச் ஏமாற்று : ஏன் கலையை வளர்க்க வேண்டும்’ என்னும் நூலிற்கு புத்தக வெளியீட்டு நிறுவனங்களை அணுகாமல் ‘கிக் சுடார்டர்’ என்னும் பொதுமக்களிடம் நிதியுதவி பெற்று படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நிறுவனத்தைத் துவங்கினார்.[23] முதல் வாரத்திலேயே 2,50,000 டாலர்களை வாசகர்களிடமிருந்து, இந்த முயற்சி பெற்றுத் தந்தது. இதன் தொடர்ச்சியாக ஒரு வெளியிடும் நிறுவனத்திடமும் புத்தகத்தை வெளியிட ஒப்பந்தம் செய்து கொண்டார்.[24]
2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோடின் ‘இயர்வுல்ப்” என்னும் வலைத்தளத்தில் ‘போட்காஸ்ட்’ என்னும் தகவல் பரிமாறும் சாதனத்தையும் உருவாக்கினார். இந்த தகவல் பரிமாற்று எற்பாடு ‘போட்காஸ்ட்’ மூலம் ஒவ்வொரு வாரமும், தங்களது கனவு வணிக நிறுவனங்களை எவ்வாறு திறம்பட நடத்துவது என்பது குறித்து பணிமனை மூலம் 30 தொழில் முனைவோருக்கு விளக்கி வருகிறார்.[25]
எழுதிய நூல்கள்
[தொகு]2014 ஏப்ரல் 17 ஆம் நாள் வரை கோடின் 17 நூல்களை எழுதியுள்ளார். அவைகளுள் மனித கும்பல் (Tribes), லின்ச் பின் என்பவை சிறந்த நூல்களாகும். இவையல்லாமல் ‘உள்ளே விலையில்லா பரிசு’ ( Free Prize Inside) என்னும் நூல் போர்ப்ஸ் (Forbes) பத்திரிக்கையின் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த வணிக நூலாக அறிவிக்கப்பட்டது.[26][27] பழுப்பு மாடு என்றும் இவரின் மற்றொரு நூல் வெளியிடப்பட்ட முதல் இரண்டு வருடங்களில் 15000 படிகள் விற்றுத் தீர்ந்தன.[28] முழுகுதல் என்னும் மற்றொரு நூல் பிசுனச் வீக், மற்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைகளால் சிறந்த நூலாக அறிவிக்கப்பட்டது.[29][30] 1990 ஆம் வருடம் பல எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சக்தியின் உலகம் என்னும் சிறுவர்களுக்கான நூல்களையும் வெளியிடச் செய்தார்.[31]
2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சேத் கோடின் எழுதி வெளியிட்ட’ ஒவ்வொரு சந்தையாளர்களும் பொய்யர்களே’ என்னும் நூல் ஒவ்வொரு சந்தையாளரும் வைத்திருக்க வேண்டிய 6 நூல்களில் ஒன்று என் போர்ப்ஸ் பத்திரிகை அறிவித்துள்ளது.[32]
வலைப்பதிவு
[தொகு]சேத் கோடின் ஒரு வலைப்பதிவும் பராமரித்து வருகிறார்[33]
ஆதரங்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Rivera, Jeff (August 25, 2010). "So What Do You Do, Seth Godin, Author and Marketing Guru?". Mediabistro. பார்க்கப்பட்ட நாள் October 21, 2014.
- ↑ 2.0 2.1 Kuntz, Mary (September 9, 1998). "Entrepreneur Profiles: Point, Click--And Here's The Pitch: Yoyodyne uses prizes to get you to read those online ads". BusinessWeek. http://www.businessweek.com/smallbiz/news/columns/98-06/e3564029.htm. பார்த்த நாள்: December 20, 2014.
- ↑ Yahoo! to Acquire Yoyodyne பரணிடப்பட்டது 2005-03-17 at the வந்தவழி இயந்திரம் Earthweb News. October 12, 1998.
- ↑ Junnarkar, Sandeep. "Yahoo to buy Yoyodyne". CNET News. பார்க்கப்பட்ட நாள் 19 December 2013.
- ↑ Yahoo Acquiring Yoyodyne Wired.com. October 12, 1998.
- ↑ "Speaker: Seth Godin". Business Week's "Ultimate Entrepreneur for the Information Age". Special Libraries Association. June 18, 2008. Archived from the original on ஜூலை 4, 2008. பார்க்கப்பட்ட நாள் December 20, 2014.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ Eric Enge Interviews Seth Godin பரணிடப்பட்டது 2015-05-26 at the வந்தவழி இயந்திரம் on Stone Temple Consulting. June 20, 2007
- ↑ Clear Blogging: How People Blogging Are Changing the World and How You Can Join Them. Springer. 2007. p. 290. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59059-691-3.
- ↑ Wong, Grace Make Money with Squidoo CNN. February 10, 2006
- ↑ Squidoo Washington Post. January 8, 2006.
- ↑ Squidoo Honored at 10th SXSW Interactive Web Awards on Viget Labs. March 14, 2007
- ↑ Traffic Details: Squidoo.com பரணிடப்பட்டது 2020-03-10 at the வந்தவழி இயந்திரம் on Alexa.com. Retrieved July 18, 2008
- ↑ "Seth Godin’s Squidoo Acquired by HubPages". SearchEngineWatch. August 19, 2014 இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 22, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160422032547/https://searchenginewatch.com/sew/news/2361066/seth-godin-s-squidoo-acquired-by-hubpages.
- ↑ ChangeThis
- ↑ ChangeThis FAQ பரணிடப்பட்டது 2010-01-31 at the வந்தவழி இயந்திரம் ChangeThis.
- ↑ ChangeThis Is Now Live Seth Godin's Blog. August 14, 2004.
- ↑ Whatever Happened to ChangeThis? Seth Godin's Blog. "We featured authors as diverse as Tom Peters, Amnesty International, Chris Anderson, Hugh Macleod, George Lakoff and Guy Kawasaki."
- ↑ ChangeThis Returns பரணிடப்பட்டது 2009-01-13 at the வந்தவழி இயந்திரம் on 800-CEO-Blog. July 1, 2005
- ↑ Progressive "ChangeThis" Under New Stewardship பரணிடப்பட்டது 2012-07-20 at Archive.today on bnet. September 12, 2005
- ↑ If you could change your life... blog post by Seth Godin
- ↑ The Apprentices ஃபோர்ப்ஸ் magazine. April 27, 2009
- ↑ "Graduation Day".
- ↑ This Might Work . . . Godin Blog June 18, 2012
- ↑ Author Godin Draws Readers "Giving Readers a Say," Wall Street Journal, June 24, 2012
- ↑ "Seth Godin's Startup School". Archived from the original on 2017-07-19. பார்க்கப்பட்ட நாள் 2016-06-22.
- ↑ Jerod Morris (25 April 2014). "The Best of Seth Godin on Copyblogger". Copyblogger. Copyblogger. பார்க்கப்பட்ட நாள் 27 April 2014.
- ↑ "Forbes.com Business Book of the Year". Forbes. http://www.forbes.com/2004/12/08/cx_da_1208bizbooks.html. பார்த்த நாள்: 2014-01-20."
- ↑ Hogan, Ron (2005-05-16). "How to Succeed in Business (Books)". Publishers Weekly. http://www.publishersweekly.com/pw/print/20050516/21040-how-to-succeed-in-business-books.html. பார்த்த நாள்: 2014-01-20."...reports that the two-year-old title has more than 150,000 copies in print after 23 printings"
- ↑ Business Week Bestseller List: October 8th, 2007
- ↑ New York Times Bestseller List: June 8th 2007
- ↑ People (magazine), July 30, 1990, "Worlds of Power" series review by Ralph Novak
- ↑ Alexis, Carine (2016-04-09). "6 Essential Books Every Marketer Should Have On Their Shelf". ஃபோர்ப்ஸ். http://www.forbes.com/sites/propointgraphics/2016/04/09/6-essential-books-every-marketer-should-have-on-their-shelf/#31c5ec515411. பார்த்த நாள்: 2016-05-04.
- ↑ "Seth Godin – The Art of Noticing and Then Creating". On Being with Krista Tippett. Archived from the original on செப்டம்பர் 8, 2015. பார்க்கப்பட்ட நாள் September 3, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)