செதன்
Appearance
செதன் (பிரெஞ்சு: Sedan) பிரான்சில் உள்ள ஒரு நகரம். இது பிரான்சின் வடபகுதியில் மியூசே ஆற்றங்கரையோரமாக பெல்ஜிய எல்லையிலிருந்து பத்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. செதன் எனும் பெயர் அப்பகுதிக்கான கம்யூன் எனப்படும் பிரெஞ்சு நிர்வாகப் பிரிவிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மக்கள் தொகை 23,234 (2007). கி. பி. 1424ல் உருவான இந்நகரம் பாரிசிலிருந்து சுமார் 200 கி. மீ தொலைவில் உள்ளது.