சூலை 20
Appearance
<< | சூலை 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சூலை 20 (July 20) கிரிகோரியன் ஆண்டின் 201 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 202 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 164 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு, கோவில் மலையின் வடக்கே அந்தோனியா கோட்டை மீது தாக்குதலைத் தொடுத்தான்.
- 1402 – அங்காரா சமரில் பேரரசர் தைமூர் உதுமானியப் பேரரசர் சுல்தான் முதலாம் பயெசிதைத் தோற்கடித்தார்.
- 1592 – கொரியா மீதான முதலாவது சப்பானிய ஆக்கிரமிப்பின் போது, சப்பானியப் படையினர் பியொங்யாங் நகரைக் கைப்பற்றினர்.
- 1799 – டெக்கில் முதலாம் கியோர்கிசு எத்தியோப்பியாவின் பேரரசராக முடிசூடினார்.
- 1807 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் உலகின் முதலாவது உள் எரி பொறிக்கான காப்புரிமையை யோசெப் நிசிபோர் நியெப்சிற்கு வழங்கினார்.
- 1810 – பொகோட்டாவின் குடிமக்கள் எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தனர்.
- 1831 – செனெக்கா, சானீ அமெரிக்கப் பழங்குடிகள் மேற்கு ஒகையோவில் உள்ள தமது நிலங்களை மிசிசிப்பி ஆற்றின் மேற்குப் பகுதியின் 60,000 ஏக்கர் நிலங்களைப் பெற்றுக் கொண்டு விட்டுக் கொடுத்தனர்.[1]
- 1871 – பிரித்தானியக் கொலம்பியா கனடாவுடன் இணைந்தது.
- 1903 – போர்டு நிறுவனம் தனது முதலாவது தானுந்தை ஏற்றுமதி செய்தது.
- 1917 – முதலாம் உலகப் போர்: யுகோசுலாவிய இராச்சியத்தை உருவாக்கும் உடன்பாடு செர்பிய இராச்சியத்திற்கும் யுகோசுலாவ் குழுவிற்கும் இடையில் எட்டப்பட்டது.
- 1920 – பாரிசு அமைதி உடன்பாட்டிற்கமைய, கிரேக்க இராணுவம் சிலிவ்ரி நகரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 1923 இல் அந்நகரைத் துருக்கியிடம் இழந்தது.
- 1922 – உலக நாடுகள் சங்கம் ஆப்பிரிக்காவில் டோகோலாந்தை பிரான்சுக்கும், தங்கனீக்காவை ஐக்கிய இராச்சியத்துக்கும் வழங்கியது.
- 1932 – புருசிய இராணுவப் புரட்சியை அடுத்து செருமானிய அரசுத்தலைவர் புருசிய அரசைக் கலைத்தார்.
- 1935 – மிலனில் இருந்து பிராங்க்ஃபுர்ட் சென்ற விமானம் சுவிட்சர்லாந்து மலையில் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
- 1940 – டென்மார்க் உலக நாடுகள் அமைப்பில் இருந்து விலகியது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனிய இராணுவத் தளபதி ஒருவனால் இட்லர் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியில் இருந்து அவர் தப்பினார்.
- 1949 – 19 மாதப் போரின் முடிவில் இசுரேலும் சிரியாவும் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டன.
- 1951 – யோர்தான் மன்னர் முதலாம் அப்துல்லா எருசலேமில் வெள்ளிக்கிழமைத் தொழுகையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1954 – மேற்கு செருமனியின் உளவுத்துறைத் தலைவர் ஒட்டோ ஜோன் கிழக்கு செருமனிக்குத் தப்பிச் சென்றார்.
- 1960 – சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமராகத் தெரிவானார். இவரே உலகில் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது பெண் அரசுத்தலைவர் ஆவார்.
- 1962 – கொலம்பியாவில் நிலநடுக்கத்தில் 40 பேர் உயிரிழந்தனர்.
- 1964 – வியட்நாம் போர்: வியட்கொங் படைகள் "காய் பே" நகரைத் தாக்கி 11 தென் வியட்நாமியப் படையினரையும் 40 பொதுமக்களையும் கொன்றனர்.
- 1969 – அப்பல்லோ திட்டம்: நாசாவின் அப்பல்லோ 11 சந்திரனில் இறங்கியது. நீல் ஆம்ஸ்ட்றோங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் முதல் மனிதர்களாக சந்திரனில் காலடி வைத்தனர்.
- 1969 – உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் ஒண்டுராசுக்கும் எல் சல்வதோருக்கும் இடையே இடம்பெற்ற கலவரங்களை அடுத்து ஆரம்பித்த 6-நாள் போர் முடிவுக்கு வந்தது.
- 1974 – சைப்பிரசில் அரசுத்தலைவர் மூன்றாம் மக்காரியோசுக்கு எதிராக கிரேக்க ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியை அடுத்து துருக்கியப் படைகள் அங்கு முற்றுகையிட்டன.
- 1976 – அமெரிக்காவின் வைக்கிங் 1 விண்கலம் செவ்வாயில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
- 1977 – அமெரிக்கா, பென்சில்வேனியா, யேம்சுடவுன் நகரில் இடம்பெற்ற பெர்ம் வெள்ளத்தில் 84 பேர் உயிரிழந்தனர்.
- 1979 – இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
- 1980 – இசுரேலின் தலைநகராக எருசலேம் நகரை ஐநா உறுப்பு நாடுகள் அங்கீகரிக்க முடியாதவாறு ஐநா பாதுகாப்பு அவை 14-0 என்ற வாக்குகளால் தடையுத்தரவைப் பிறப்பித்தது.
- 1982 – ஐரியக் குடியரசுப் படையினரால் இலண்டனில் நடத்தப்பட்ட இரு வெடிகுண்டுத் தாக்குதல்களில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 47 பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.
- 1985 – நெதர்லாந்து அண்டிலிசுவில் இருந்து வெளியேறும் தீர்மானத்தை அரூபா அரசு கொண்டுவந்தது.
- 1989 – பர்மாவின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி இராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
- 1992 – செக்கோசிலோவாக்கியாவின் பிரதமர் வாக்லாவ் அவொல் பதவி விலகினார்.
- 1997 – இலங்கையின் மூதூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஈ. எச். மகரூப் மற்றும் ஐவர் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.[2]
- 2005 – கனடாவில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமாக்கப்பட்டது.
- 2012 – அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் திரையரங்கு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்க்சி சூட்டு நிகழ்வில் 12 பேர் கொல்லப்பட்டனர், 70 பேர் காயமடைந்தனர்.
- 2013 – கொலம்பியாவின் ஆயுதமேந்திய புரட்சிப் படைப் போராளிகளின் தாக்குதலில் 17 அரசுப் படையினர் கொல்லப்பட்டனர்.
- 2015 – ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவும் கியூபாவும் முழுமையான தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டன.
பிறப்புகள்
- கிமு 356 – பேரரசர் அலெக்சாந்தர், மக்கெதோனிய மன்னர் (இ. கிமு 323)
- 647 – முதலாம் யசீத், அராபியக் கலீபு (இ. 683)
- 1804 – இரிச்சர்டு ஓவன், ஆங்கிலேய உயிரியலாளர் (இ. 1892)
- 1822 – கிரிகோர் மெண்டல், ஆத்திரிய-செருமானிய உயிரியலாளர் (இ. 1884)
- 1855 – பியேர் என்றி பியூசெயூக்சு, பிரான்சிய வானியலாளர் (இ. 1928)
- 1870 – அலெக்சேய் பாவ்லோவிச் கான்சுகி, உருசிய வானியலாளர் (இ. 1908)
- 1890 – யூலி விண்டர் கான்சன், தென்மார்க்கு-சுவிட்சர்லாந்து வானியலாளர் (இ. 1960)
- 1901 – ஜெரோம் எமிலியானுஸ்பிள்ளை, ரோமன்-கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயர் (பி. 1962)
- 1919 – எட்மண்ட் இல்லரி, நியூசிலாந்து மலையேறி (இ. 2008)
- 1923 – மு. சிவசிதம்பரம், ஈழத் தமிழ் அரசியல்வாதி (இ. 2002)
- 1925 – பிரன்சு ஃபனோன், பிரெஞ்சு-அல்சீரிய மெய்யியலாளர் (இ. 1961)
- 1938 – ப. வேலு, மலேசியாவில் எழுத்தாளர்
- 1943 – முத்து சிவலிங்கம், இலங்கை அரசியல்வாதி (இ. 2022)
- 1968 – எஸ். ஜே. சூர்யா, தமிழகத் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர்
இறப்புகள்
- 1296 – ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி, தில்லி சுல்தான்
- 1866 – பேர்னாட் ரீமன், செருமன் கணிதவியலாளர் (பி. 1826)
- 1903 – பதின்மூன்றாம் லியோ (திருத்தந்தை) (பி. 1810)
- 1920 – சாரதா தேவி, ஆன்மிகவாதியும், இராமகிருஷ்ணரின் மனைவி (பி. 1853)
- 1937 – மார்க்கோனி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய இயற்பியலாளர் (பி. 1874)
- 1951 – ஜோர்தானின் முதலாம் அப்துல்லா (பி. 1882)
- 1965 – பதுகேஷ்வர் தத், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1910)
- 1972 – கீதா தத், இந்திய நடிகை, பாடகி (பி. 1930)
- 1973 – புரூசு லீ, அமெரிக்க நடிகர் (பி. 1940)
- 1997 – எம். ஈ. எச். மகரூப், இலங்கை அரசியலாவதி (பி. 1939)
- 2014 – தண்டபாணி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 2020 – கர்ணன், தமிழக எழுத்தாளர் (பி. 1938)
சிறப்பு நாள்
- பன்னாட்டு நட்பு நாள் (அர்கெந்தீனா, பிரேசில்)
- விடுதலை நாள் (கொலம்பியா, 1810வில் எசுப்பானியாவிடம் இருந்து)
- மர நடுகை நாள் (மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு)
- அனைத்துலக சதுரங்க நாள்
மேற்கோள்கள்
- ↑ "Treaty with the Senecas, Shawnees and Wyandots (1831) - Ohio History Central". www.ohiohistorycentral.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
- ↑ "Principal Ceylon Events, 1997". Ferguson's Ceylon Directory, Colombo. 1998.