உள்ளடக்கத்துக்குச் செல்

சூப்பர் சென்டாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூப்பர் சென்டாய் சிரீஸ்スーパー戦隊シリーズ (Sūpā Sentai Shirīzu?) என்பது 1975இல் இருந்து ஜப்பானில் நீண்டகாலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு சூப்பர் ஹீரோ தொடர் ஆகும். இதை டோய் கம்பெனி, டோய் ஏஜென்சி மற்றும் பான்டாய் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இயக்குகின்றனர். இது நிகான் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 07.30 முதல் 08.00 மணி வரை ஒளிபரப்பாகிறது. இப்போது இது 2000 எபிசோடுகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. சூப்பர் சென்டாய் மற்றும் காமன் ரைடர் ஆகிய இரு தொடர்களும் ஒளிபரப்பாகும் நேரம் சூப்பர் ஹீரோ டைம் என்று அழைக்கப்படுகிறது. சென்டாய் என்றால் போராடும் படை என்று பொருள். இத்தொடர் குழந்தைகளுக்காக இயக்கப்படும் டொக்குசாட்சு வகையைச் சேர்ந்தது. பிற்காலத்தில் இத்தொடரைத் தழுவி அமெரிக்காவில் பவர் ரேஞ்சர்ஸ் என்ற தொடர் இயக்கப்பட்டது.[1][2][3]

கண்ணோட்டம்

[தொகு]

பொதுவாக அனைத்து சூப்பர் சென்டாய் தொடர்களிலும் ஒரு சூப்பர் ஹீரோ அணி இருக்கும். அவர்களது உடை சிவப்பு, நீலம், மஞ்சள் போன்ற பல வண்ணங்களில் இருக்கும். அவர்கள் தீய அணியிடம் இருந்து உலகைக் காக்க போராடுவர். ஒவ்வொரு எபிசோடுகளிலும் ஒரு மான்ஸ்டர் (அரக்கன்) இருப்பர். அவர்களை சூப்பர் ஹீரோக்கள் அழித்துவிடுவர். பிறகு அந்த மான்ஸ்டர் வளர்ந்து மிகப்பெரிய உருவினை அடையும். அப்போது சூப்பர் ஹீரோக்கள் மெச்சா எனப்படும் மிகப்பெரிய ரோபோக்களை பயன்படுத்தி அவர்களை அழிப்பர். இறுதியாக தீய அணியின் தலைவனுடனோ அல்லது வேறு வலிமை வாய்ந்த வீரனுடனோ போராடி அழிப்பர். அதனுடன் தொடர் முடிவடையும். ஒரு தொடரின் இடையே மற்ற தொடருடன் அமையும் கூட்டணி (டீம்-அப்) எபிசோடும் அந்தத் தொடரின் பிரத்யேக திரைப்படமும் ஒளிபரப்பாகும்.

சூப்பர் சென்டாய் தொடர்கள் பட்டியல்

[தொகு]
  • ஹிமிட்சு சென்டாய் கோரேஞ்சர் (1975–1977)
  • J.A.K.Q. டெங்கேக்கிடாய் (1977)
  • பேட்டில் ஃபீவர் ஜே (1979–1980)
  • டென்ஷி சென்டாய் டென்சிமென் (1980–1981)
  • டையோ சென்டாய் சன்வல்கன் (1981–1982)
  • டய் சென்டாய் கோகிள்-வி (1982–1983)
  • காகக்கு சென்டாய் டைனாமேன் (1983–1984)
  • சௌடென்ஷி பயோமேன் (1984–1985)
  • டெங்கெக்கி சென்டாய் சேஞ்ச்மேன் (1985–1986)
  • சௌஷின்செய் ஃப்ளாஷ்மேன் (1986–1987)
  • ஹிகேரி சென்டாய் மாஸ்க்மேன் (1987–1988)
  • சோஜூ சென்டாய் லைவ்மேன் (1988–1989)
  • கௌசோகு சென்டாய் டர்போரேஞ்சர் (1989–1990)
  • சிக்யூ சென்டாய் ஃபைவ்மென் (1990–1991)
  • சோஜின் சென்டாய் ஜெட்மேன் (1991–1992)
  • கியோர்யூ சென்டாய் சியூரேஞ்சர் (1992–1993) –பவர் ரேஞ்சர்ஸ் மைட்டி மார்ஃபின் என அமெரிக்காவில் தழுவி எடுக்கப்பட்ட முதல் பவர் ரேஞ்சர்ஸ் தொடர்.
  • கோசெய் சென்டாய் டாய்ரேஞ்சர் (1993–1994)
  • நிஞ்சா சென்டாய் கக்குரேஞ்சர் (1994–1995)
  • சௌரிகி சென்டாய் ஓரேஞ்சர் (1995–1996)
  • கெகிசோ சென்டாய் கார்ரேஞ்சர் (1996–1997)
  • டெஞ்சி சென்டாய் மெகாரேஞ்சர் (1997–1998)
  • செய்ஜூ சென்டாய் ஜிங்காமேன் (1998–1999)
  • கியூகியூ சென்டாய் கோகோஃபைவ் (1999–2000)
  • மிராய் சென்டாய் டைம்ரேஞ்சர் (2000–2001)
  • ஹியாக்குஜூ சென்டாய் கவோரேஞ்சர் (2001–2002)
  • நின்பு சென்டாய் ஹரிக்கேஞ்சர் (2002–2003)
  • பகுர்யூ சென்டாய் அபாரேஞ்சர் (2003–2004)
  • டொக்குசோ சென்டாய் டெக்காரேஞ்சர் (2004–2005)
  • மஹோ சென்டாய் மஜிரேஞ்சர் (2005–2006)
  • கோகோ சென்டாய் பவுகெஞ்சர் (2006–2007)
  • ஜூகென் சென்டாய் கெக்கிரேஞ்சர் (2007–2008)
  • இஞ்சின் சென்டாய் கோ-ஆங்கர் (2008–2009)
  • சாமுராய் சென்டாய் ஷிங்கெஞ்சர் (2009–2010)
  • டென்சோ சென்டாய் கோசெய்ஜர் (2010–2011)
  • கெய்சோக்கு சென்டாய் கோக்கய்ஜர் (2011–2012)
  • டோகுமெய் சென்டாய் கோ-பஸ்டர்ஸ் (2012–2013)
  • ஸ்யூடென் சென்டாய் க்யோர்யூகர் (2013–2014)
  • ரெஷ்ஷா சென்டாய் டோக்குகர் (2014–2015)
  • ஷூரிக்கன் சென்டாய் நின்னிஞ்சர் (2015–2016)
  • டவுபட்சு சென்டாய் ஸ்யுவோகர் (2016–2017)
  • உச்சூ சென்டாய் க்யூரேஞ்சர் (2017–2018)
  • கைடோ சென்டாய் லூபின்ரேஞ்சர் VS போலீஸ் படை பேட்ரேஞ்சர் (2018-2019)
  • கிஷிரியு சென்டாய் ரியூசோல்கர் (2019-2020)
  • மஷின் சென்டாய் கிரமகர் (2020-2021)
  • கிகாய் சென்டாய் ஜென்கைகர் (2021-2022)
  • அவதாரோ சென்டாய் டான்பிரதர்ஸ் (2022-2023)
  • ஓசாமா சென்டாய் கிங்-ஓகர் (2023-2024)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "CSR Report 2009". Bandai Namco Group. பார்க்கப்பட்ட நாள் 9 February 2021.
  2. "暴太郎戦隊ドンブラザーズ". Toei Company. பார்க்கப்பட்ட நாள் 2022-01-11.
  3. Carvell, Tim; McGowan, Joe (28 October 1996). "Showdown In Toontown Children's Television, Once a Sleepy Business, Is Becoming as Hotly Competitive as the Grownup Variety. Turner, Fox, and Disney Are Trying to Topple Viacom's Nickelodeon—But How's a TV Mogul to Know What Kids Really Want?". CNN (Fortune) இம் மூலத்தில் இருந்து 21 April 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100421040310/http://money.cnn.com/magazines/fortune/fortune_archive/1996/10/28/203922/index.htm.