சுதர்சன் குமார்
சுதர்சன் குமார் Sudarshan Kumar | |
---|---|
பீகார் சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2015 | |
முன்னையவர் | கச்சானந்து சாகி |
தொகுதி | பார்பிகா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
சுதர்சன் குமார் (Sudarshan Kumar) இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பீகார் சட்டமன்றத்தில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக முதல் முறையாகவும், 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலில் சனதா தளம் (இணைந்த) பார்பிகா சட்டமன்றத் தொகுதி இருந்து இரண்டாவது முறையாகவும் இவர் வெற்றி பெற்றார்.[1] பெகுசராய் மக்களவையில் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராச்சோ சிங்கின் பேரனாக அறியப்படுகிறார். சேக்புராவிலிருந்து ஐந்து முறையும், பார்பிகாவிலிருந்து ஒரு முறையும் சட்டமன்ற உறுப்பினராகவும் இவரது தாத்தா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தந்தை சஞ்சய் சிங் முன்னா இரண்டு முறை சேக்புரா தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகவும் இவரது தாயார் சிறீமதி சுனிலா தேவியும் இரண்டு முறை சேக்புரா தொகுதியில் இருந்து காங்கிரசு கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். சுதர்சன் குமார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான மக்கள் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர் ஆவார். ஆனால் இவர் பீகாரில் முக்கியப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.