உள்ளடக்கத்துக்குச் செல்

சாகுல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுந்தா நிலத்தை உள்ளடக்கிய சாகுலின் வரைபடம்

சாகுல் (Sahul), அல்லது சாகுல்-நிலம், மாக்னேசியா (Meganesia), பப்புவாநிலம் (Papualand) அல்லது பாரிய ஆத்திரேலியா (Greater Australia),[1] என்பது ஆத்திரேலியா, தசுமேனியா, நியூ கினி மற்றும் அரு தீவுகளின் இன்றைய நிலப்பரப்புகளை உள்ளடக்கிய ஒரு தொல் கண்டம் ஆகும்.[2][3][4][5][6]

சாகுல் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில், வடக்கிலிருந்து தெற்கே நிலநடுக்கோட்டிற்கும் 44-ஆவது இணை தெற்கிற்கும் இடையிலும், மேற்கிலிருந்து கிழக்கே 112, 152-ஆவது கிழக்கு நெடுவரைக்கோடுகளுக்கு இடையிலும் அமைந்திருந்தது.[2] சாகுல் சுந்தாவிலிருந்து அதன் மேற்கே வாலேசியன் தீவுக்கூட்டத்தால் பிரிக்கப்பட்டது.[2][7] அதன் மிகப்பெரிய அளவில், கடல் மட்டங்கள் மிகக் குறைந்த அளவில் இருந்தபோது, ​​அது தோராயமாக 10,600,000 சதுர கிலோமீட்டர் (4,100,000 சதுர மைல்) அளவில் இருந்தது.[note 1][2]

கடைசிப் பனி யுகத்திற்குப் பிறகு உலக வெப்பநிலை அதிகரித்து, கடல் மட்டம் படிப்படியாக உயர்ந்து, தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து, நியூ கினி, தசுமேனியா ஆகியவற்றில் இருந்து ஆத்திரேலியப் பெருநிலப்பகுதியைப் பிரித்தது.[8] நியூ கினி, ஆத்திரேலிய நிலப்பரப்பில் இருந்து ஏறத்தாழ 8,000 ஆண்டுகளுக்கு முன்பும், தசுமேனியா தோராயமாக 6,000 ஆண்டுகளுக்கு முன்பும் பிரிக்கப்பட்டது.[8]

சாகுல் பல்வேறு வகையான தனித்துவமான விலங்கினங்களைக் கொண்டிருந்தது, அவை சுயாதீனமாக பரிணாம வளர்ச்சியடைந்தன.[9] குறிப்பாக சாகுலில் உள்ள அனைத்துப் பாலூட்டிகளும் பலவகையான உலாவிகள், வளைகள், தோட்டிகள் மற்றும் இரைகௌவல்கள் உட்பட பைம்மாவினங்கள் ஆகும். வெளவால்களும் கொறிணிகளும் மட்டுமே நஞ்சுக்கொடி பாலூட்டிகள் ஆகும்.[9]

45,000 முதல் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் சாகுலில் முதன்முதலில் குடியேறியதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது சுந்தாவிலிருந்து வாலேசியா வழியாகக் கடலைக் கடக்கச் செய்தது.[10] சாகுலிலிருந்து மனிதர்கள் ஓசியானியா முழுவதும் பரவினர்.[3]

சாகுல் என்ற பெயர் தொல்லியலாளர்களால் பயன்படுத்தப்படுகிறது, அதே சமயம் மெகனேசியா (Meganesia) என்ற பெயர் விலங்கியல் ஆய்வாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.[4] "பாரிய ஆத்திரேலியா" என்ற பெயரும் பயன்படுத்தப்பட்டது, ஆனால் அது "நிலப்பட ஏகாதிபத்தியம்" என்று விமர்சிக்கப்பட்டது, ஏனெனில் இது நியூ கினியின் இழப்பில் இப்போதைய ஆத்திரேலியாவாக இருக்கும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.[6]

இவற்றையும் பார்க்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. இன்றைய ஆத்திரேலியா, தசுமேனியா, நியூ கினியின் பரப்பளவு தோராயமாக 8,500,000 சதுர கிமீ.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gillespie, Richard (January 2002). "Dating the First Australians". Radiocarbon 44 (2): 455–472. doi:10.1017/S0033822200031830. Bibcode: 2002Radcb..44..455G. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 White & O'Connell (1982), ப. 6.
  3. 3.0 3.1 O'Connor & Hiscock (2018), ப. 26.
  4. 4.0 4.1 Groves (1996), ப. 83.
  5. Oliver (1961), ப. 5.
  6. 6.0 6.1 Ballard (1993), ப. 20.
  7. O’Connell, Allen & Hawkes (2010), ப. 57.
  8. 8.0 8.1 Kennett, Chopping & Blewett (2018), ப. 4.
  9. 9.0 9.1 White & O'Connell (1982), ப. 12.
  10. O’Connell, Allen & Hawkes (2010), ப. 57–58.

உசாத்துணைகள்

[தொகு]
  • Ballard, Chris (1993). "Stimulating minds to fantasy? A critical etymology for Sahul". In Smith, M. A.; Spriggs, M.; Fankhouser, B. (eds.). Sahul in review: Pleistocene archaeology in Australia, New Guinea and island Melanesia (PDF). Canberra: Australian National University. pp. 17–23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7315-1540-4.
  • Oliver, Douglas L. (1961). The Pacific Islands. New York: The American Museum of Natural History.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகுல்&oldid=4058533" இலிருந்து மீள்விக்கப்பட்டது