உள்ளடக்கத்துக்குச் செல்

சவேடகன் அடுக்குத் தூபி

ஆள்கூறுகள்: 16°47′54″N 96°08′59″E / 16.798354°N 96.149705°E / 16.798354; 96.149705
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவேடகன் தூபி
அடிப்படைத் தகவல்கள்
புவியியல் ஆள்கூறுகள்16°47′54″N 96°08′59″E / 16.798354°N 96.149705°E / 16.798354; 96.149705
சமயம்பௌத்தம்
மண்டலம்யாங்கன் பிராந்தியம்
மாநகராட்சியாங்கன்
செயற்பாட்டு நிலைசெயல்பாட்டில் உள்ளது
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டதுயாங்கன்
இணையத்
தளம்
www.shwedagonpagoda.com.mm

ஷ்வேடகோன் அடுக்கு ஸ்தூபி அதிகாரப்பூர்வமாக ஷ்வேடகோன் சிதி டாவ் என்றும் சிறந்த டகோன் ஸ்தூபி அல்லது தங்கத் ஸ்தூபி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் ஸ்தூபி மியான்மர், ரங்கூனில் அமைந்துள்ள ஒரு தங்கமுலாம் பூசப்பட்ட ஸ்தூபியாகும். இதன் மொத்த உயரம் 99 மீட்டர் உயரம் (325 அடி).[1] பகோடா சிங்குட்தரா மலையில் அமைந்துள்ளது, காண்டோஜி ஏரிக்கு மேற்காகவும், யங்கோன் நகர வானில் மிக உயர்ந்த கட்டிடமாக ஆதிக்கம் செலுத்துகிறது.

வரலாறு

[தொகு]
1825 ஆம் ஆண்டில் ஷ்வேடகோன் ஸ்தூபி

6 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் மோன் மக்களால் பகோடா கட்டப்பட்டது என்று வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.[2] எனினும், புராணத்தின் படி, ஷ்வேடகோன் ஸ்தூபி (பகோடா) சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது, இது உலகின் மிகப் பழமையான பெளத்த தலமாக உள்ளது.[3] பாரம்பரியம் படி , சிங்குட்தரா மலையின் வடக்குப் பகுதியிலிருந்து தப்புசா மற்றும் பாலகிகா - என்ற இரண்டு வியாபாரம் செய்யும் சகோதரர்கள் தற்போது யங்கோன் எனும் அழைக்கப்படும் பகுதியில் தங்களது வாழ்நாள் பயனாக கௌதம புத்தரை சந்தித்தனர் மற்றும் புத்தரிடமிருந்து அவரது எட்டு முடிகளை பெற்றனர். சகோதரர்கள் பர்மாவுக்குத் திரும்பினர், அங்கு ஆட்சிபுறிந்த அரசர் ஓகலப்பாவின் உதவியுடன்,சிங்குட்தரா மலையில் கௌதம புத்தரின் சிலைகள் மற்றும் புத்த மதங்களின் புனித நூல்கள் ஆக அணைத்தும் புனிதப்படுத்தப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டது. அப்போது அரசர், முடிகள் இருந்த பெட்டியை திறந்தபோது, பல நம்பமுடியாத விஷயங்கள் பின்வருமாறு நடந்ததாக செவி வழிச்செய்தி உள்ளது:

சிவேடகன் தூபி, 1824-1826

இந்த ஸ்தூபி 14 ஆம் நூற்றாண்டு வரை பராமரிக்கப்படாமல் சேதமடைந்தமிருந்தது. அரசர் பின்னியா யு (1323-1384) அவர்களால் ஸ்தூபி மறுசீரமைக்கப்பட்டு 18 மீ (59 அடி) உயரத்திற்கு மீண்டும் கட்டப்பட்டது. ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், ராணி பின்னியா தவு (1453-1472) தூபியின் உயரத்தை 40 மீ (131 அடி) உயர்த்தினார். மேலும் அவர் மலையின் மீது மேடை போல தளம் அமைத்தார், அதன் மீது கொடிகளை அமைத்தார், அதன் பராமரிப்புக்காக நிலம் மற்றும் பரம்பரை அடிமைகளை நியமித்தார். 1472 ஆம் ஆண்டில் அவரது மருமகன் தாம்மசேதிக்கு பின்னா தாவ் தனது அரியணை அளித்தார். தனது மீதமுள்ள நாட்களை கழிப்பதற்கு அவர் டகானுக்கு திரும்பினார். வாழும் கடைசி நாட்களில் படுக்கை இருக்கும் போது, அவரது தலை தூபியை பார்த்துக்கொண்டிருப்பதற்கு ஏதுவாக தூபி இருக்கும் திசை நோக்கி வைக்கப்பட்டது. சவேடகனில் உள்ள கல்வெட்டுகளில் மோன் இனத்தை சேர்ந்தவர்களால் 1436 ஆம் ஆண்டு முதல் தாம்மசேதி காலம் வரையில் செய்யப்பட்ட பல சீரமைப்புப் பணிகள் குறிக்கப்பட்டுள்ளது. 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பர்மாவின் மிகவும் பிரபலமான பௌத்த புனித யாத்ரீக ஸ்தலமாக ஷ்வேடகோன் பகோடா மாறியது.

பின்வரும் நூற்றாண்டுகளில் தொடர்ச்சியான பூகம்பங்கள் ஸ்தூபி க்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தின. 1768 பூகம்பத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய சேதமானது ஸ்தூபி யின் உச்சியைக் கீழே கொண்டுவந்தது, ஆனால் அரசர் ஹிசினுஷுன் தற்போதைய அதன் உயரமான 99 மீ (325 அடி) உயரத்திற்கு உயர்த்தினார். 1871 ஆம் ஆண்டில், பிரிட்டனால் கீழ் பர்மாவைக் கைப்பற்றிய பின்னர், ஒரு புதிய குடை கிரீடம் மன்னர் மின்டான் மின்ரால் வழங்கப்பட்டது. 1970 அக்டோபரில் மிதமான பூகம்பம் குடையின் கிரீடத்தை அதன் அடிப்பகுதி அமைப்பில் இருந்து விளகியது வெளிப்படையாக தெரிந்தது.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Shwedagon Pagoda Architecture". shwedagonpagoda.com. The Board of Trustees of Shwedagon Pagoda. Archived from the original on 2 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 31 October 2016.
  2. Pe Maung Tin (1934). "The Shwe Dagon Pagoda". Journal of the Burma Research Society: 1–91. 
  3. Hmannan Yazawin. Royal Historical Commission of Burma. 1832.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]