உள்ளடக்கத்துக்குச் செல்

சம்பல்பூர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 21°29′N 83°59′E / 21.48°N 83.98°E / 21.48; 83.98
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்பல்பூர்
OD-3
மக்களவைத் தொகுதி
Map
சம்பல்பூர் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்14,97,719
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024 இந்தியப் பொதுத் தேர்தல்

சம்பல்பூர் மக்களவைத் தொகுதி (Sambalpur Lok Sabha constituency) என்பது கிழக்கு இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த மக்களவைத் தொகுதி சம்பல்பூர் மாவட்டம் முழுவதையும், தியோகர் மற்றும் அனுகோள் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.

சட்டசபை பிரிவுகள்

[தொகு]

எல்லை மறுநிர்ணயம் செய்வதற்கு முன்பு, இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கிய சட்டமன்றத் தொகுதிகள் பத்மாபூர், மெல்சமுண்டா, பிஜேபூர், பட்லி, பர்கர், சம்பல்பூர் மற்றும் ரைராக்கோல் ஆகும்.[1]

நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுஎல்லை நிர்ணயத்தைத் தொடர்ந்து, இந்தத் தொகுதியில் தற்போது பின்வரும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
15 குச்சிண்டா சம்பல்பூர் ரபி நாராயண் நாயக் பாஜக
16 ரெங்காலி (ப.இ.) சுதர்சன் அரிபால் பிஜத
17 சம்பல்பூர் ஜெயநாராயணன் மிசுரா பாஜக
18 ராய்ராகோல் பிரசன்னா ஆச்சார்யா பிஜத
19 தியோகர் தியோகர் ரோமஞ்சா ரஞ்சன் பிசுவால்
62 செண்டிபடா (ப.இ.) அனுகோள் அகசுதி பெகாரா பாஜக
63 ஆத்மல்லிக் நளினி காந்தா பிரதான் பிஜத

குச்சிண்டா மற்றும் தியோகர் சட்டமன்றத் தொகுதிகள் முன்பு தியோகர் மக்களவைத் தொகுதியில் இருந்தன. சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்தைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டில் ரெங்காலி சட்டமன்றத் தொகுதி நடைமுறைக்கு வந்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

[தொகு]
வெற்றிபெற்றவர்கள் பெற்ற வாக்கு விகிதம்
2024
49.48%
2019
42.05%
2014
27.65%
2009
24.72%
2004
48.18%
1999
57.56%
1998
45.77%
1996
45.23%
1991
44.82%
1989
54.56%
1984
60.68%
1980
53.95%
1977
59.49%
1971
40.72%

1952இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 18 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

சம்பல்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்.[2]

ஆண்டு உறுப்பினர் கட்சி
1951 நடபர் பாண்டே ஞானாந்திர பரிசத்
1957 ஷ்ரத்தாகர் சுபாகர்
பனமாலி கும்பார்
1962 கிஷன் பட்நாயக் பிரஜா சோசலிச கட்சி
1967 சரத்தாகர் சுபாகர் இந்திய தேசிய காங்கிரசு
1971 பனமாலி பாபு
1977 கணநாத் பிரதான் ஜனதா கட்சி
1980 கிரிபசிந்து போயி இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.)
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 பாபனி சங்கர் கோதா ஜனதா தளம்
1991 கிரிபசிந்து போயி இந்திய தேசிய காங்கிரசு
1996
1998 பிரசன்னா ஆச்சார்யா பிஜு ஜனதா தளம்
1999
2004
2009 அமர்நாத் பிரதான் இந்திய தேசிய காங்கிரசு
2014 நாகேந்திர பிரதான் பிஜு ஜனதா தளம்
2019 நிதேஷ் கங்கா தேப் பாரதிய ஜனதா கட்சி
2024 தர்மேந்திர பிரதான்

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2024 இந்தியப் பொதுத் தேர்தலின் ஆறாவது கட்டத்தில் 25 மே 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் 2024 அன்று எண்ணப்பட்டது.[3] வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தர்மேந்திர பிரதான், பிஜு ஜனதா தளம் வேட்பாளர் பிரணாப் பிரகாசு தாசை 1,19,836 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: சம்பல்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தர்மேந்திர பிரதான் 5,92,162 49.48
பிஜத பிரணாப் பிரகாசு தாசு 4,72,326 39.47
காங்கிரசு நகேந்திர குமார் பிரதான் 89,113 7.45
நோட்டா நோட்டா 12,483 1.04
வாக்கு வித்தியாசம் 1,19,836 10.01
பதிவான வாக்குகள் 11,96,747 79.50
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் {{{சுழற்சி}}}

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
  2. "17 - SAMBALPUR Parliamentary Constituency". பார்க்கப்பட்ட நாள் 29 December 2013.
  3. "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.