உள்ளடக்கத்துக்குச் செல்

கொதிகலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீராவி உற்பத்தி நிலையம்

கொதிகலன் (boiler) என்பது நீரையோ அல்லது வேறு பாய்மத்தையோ வெப்பமேற்றிக் காய்ச்ச உதவும் ஒரு மூடிய கலன் ஆகும். வெப்பமேற்றப்பட்ட அல்லது ஆவியாக்கப்பட்ட பாய்மம் கொதிகலனில் இருந்து வெளியேற்றப்பட்டு, பிற வேதிப்பொறியியல் செயல்களுக்கோ வெப்பமேற்றும் செயல்களுக்கோ பயன்படும்.

கொதிகலன் பொதுவாக இரும்பு அல்லது எஃகு கொண்டு செய்யப்பட்ட ஒரு அதியழுத்தக் கலனாக இருக்கும்.[1][2][3]

எரிபொருள்

[தொகு]

கொதிகலனில் வெப்பமேற்றப் பல வகையான எரிபொருள்கள் பயன்படுத்தப் படுகின்றன. விறகு, கரி, எரிநெய், மற்றும் இயற்கை எரிவளி ஆகியவை இவற்றுள் சிலவாகும். எரிவளிச் சுழலிகளில் இருந்து வெளியேற்றப்படும் வெப்பத்தையும் நீராவி உண்டாக்கக் கொதிகலன்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கொதிகலன் வகைகள்

[தொகு]

கொதிகலன்கள் பல வகைப்படும். அவற்றுள் சில கீழே:

  • பானைக் கொதிகலன்: இது விறகு அல்லது கரியை எரித்து, பாதி நீர் நிறைத்த ஒரு பானையைக் கீழிருந்து சூடாக்கி நீராவியை உண்டாக்கித் தேக்கி வைக்கும் ஒரு கொதிகலன். இது குறைந்த செயல்திறன் கொண்ட ஒன்று.
  • நெருப்புத் தூம்புக் கொதிகலன்: இவ்வகைக் கொதிகலன்களில் பெரும்பாலும் திடநிலை எரிபொருட்கள் பயன்படுத்தப் படும். ஒரு பெரிய கலனில் ஓரத்தில் இருந்து சூடுபடுத்தி, எரிப்பு வாயுக்களைத் தூம்புகளின் (குழாய்களின்) வழியே அனுப்பி அதனைச் சூழ்ந்திருக்கும் திரவத்தை (நீர்) ஆவியாக்குவது.
  • நீர்த் தூம்புக் கொதிகலன்: இவ்வகைக் கொதிகலனில் ஒரு நெருப்பு அறைக்குள் சிறு விட்டத் தூம்புகளின் வழியாக நீரைச் செலுத்தி வெப்பமேற்றப்படும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Steingress, Frederick M. (2001). Low Pressure Boilers (4th ed.). American Technical Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8269-4417-5.
  2. Steingress, Frederick M.; Frost, Harold J.; Walker, Darryl R. (2003). High Pressure Boilers (3rd ed.). American Technical Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8269-4300-4.
  3. ASME Boiler and Pressure Vessel Code, Section I, PG-5.5. American Society of Mechanical Engineers. 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொதிகலன்&oldid=4071844" இலிருந்து மீள்விக்கப்பட்டது