உள்ளடக்கத்துக்குச் செல்

கே. கே. பிர்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. கே. பிர்லா
பிறப்பு11 நவம்பர் 1918
பிலானி
இறப்பு30 ஆகத்து 2008 (அகவை 89)
குழந்தைகள்சோபனா பார்தியா
குடும்பம்Basant Kumar Birla

கிருஷ்ண குமார் பிர்லா அல்லது கே. கே. பிர்லா (Krishna Kumar Birla, அக்டோபர் 12, 1918ஆகஸ்ட் 30, 2008) என்பவர் இந்தியாவின் ஒரு முன்னணித் தொழிலதிபர். 1991 இல் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீரமைப்புக்கு ஆதரவளித்த தொழிலதிபர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர்[1].

இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் மற்றும் பல்வேறு பிர்லா குழும நிறுவனங்களின் தலைவராக திகழ்ந்தவர். பிர்லா குழுமத்திற்கு நாடு முழுவதும் சர்க்கரை ஆலை, உர தொழிற்சாலை, இரசாயன, கனரக தொழிற்சாலை, புடவை, கப்பல்துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் உள்ளன.

18 ஆண்டுகள் தொடர்ச்சியாக ராஜ்ய சபை உறுப்பினராக பதவி வகித்த பிர்லா, 1997 ம் ஆண்டு கல்கத்தா ஷெரீப் ஆகவும் பதவி வகித்தவராவார். 1997 இல் இவருக்கு புதுச்சேரி பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

மறைவு

[தொகு]

சில வாரங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பிர்லா, கொல்கத்தாவிலுள்ள தனது வீட்டில் 2008, ஆகஸ்ட் 30 காலை 7.30 மணியளவில் காலமானார். அவரது மனைவி மனோரமா தேவி ஒரு மாதத்திற்கு முன்னர் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிர்லாவுக்கு 3 மகள்கள் உள்ளனர் [2].

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._கே._பிர்லா&oldid=3241465" இலிருந்து மீள்விக்கப்பட்டது