உள்ளடக்கத்துக்குச் செல்

கேட்டை விண்மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேட்டை விண்மீன் A/B

விருச்சிக விண்மீன் குழாமத்தில் கேட்டை விண்மீன் (Antares)
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை விருச்சிக விண்மீன் குழாம்
வல எழுச்சிக் கோணம் 16h 29m 24s[1]
நடுவரை விலக்கம் −26° 25′ 55″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)+0.96[2]
இயல்புகள்
விண்மீன் வகைM1.5Iab-b + B2.5V[3]
U−B color index+1.34[2]
B−V color index+1.83[2]
மாறுபடும் விண்மீன்LC
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−3.4[4] கிமீ/செ
Proper motion (μ) RA: −12.11[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −23.30[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)5.89 ± 1.00[1] மிஆசெ
தூரம்approx. 550 ஒஆ
(approx. 170 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)−5.28
விவரங்கள்
A
திணிவு12.4[5] M
ஆரம்883[5] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)0.1[5]
ஒளிர்வு57,500[6] L
வெப்பநிலை3400 ± 200[6] கெ
சுழற்சி வேகம் (v sin i)20 கிமீ/செ
B
திணிவு10 M
ஆரம்4 R
வெப்பநிலை18,500[6] K
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

கேட்டை விண்மீன் (Antares , α Scorpii , α Sco) என்பது விருச்சிக விண்மீன் குழாத்திலுள்ள ஒரு விண்மீன் ஆகும். இது பால் வழி நாள்மீன்பேரடையின் 16 வது பிரகாசமான விண்மீன் ஆகும்.

ரோகிணி (நட்சத்திரம்), ரேகுளுஸ், பொமல்ஹோட் மற்றும் கேட்டை விண்மீன் இவை நான்கும் பாரசீகத்தின் அரசனுக்குரிய நட்சத்திரங்களாகக் கருதப்பட்டது. கேட்டை விண்மீன் விருச்சிக விண்மீன் குழாத்தின் அதிக பிரகாசமான விண்மீன் ஆகும். விருச்சிக விண்மீன் குழாம் தேள் போன்ற வடிவம் உடையது. அதில் கேட்டை விண்மீனைத் தேளின் இதயம் எனக் குறிப்பிடுகிறார்கள். இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் +1.09.[3].

கேட்டை விண்மீன், பிரகாசமான, அதிக திணிவுடைய, நல்ல விண்மீன் படிமலர்ச்சி அடைந்த விருச்சிக கழகத்திலிள்ள விண்மீன் ஆகும். இந்த விருச்சிக கழகத்தில் 11 மில்லியன் விண்மீன்கள் உள்ளன, அதில் சராசரி வயதுடைய ஆயிரகணக்கான விண்மீன்கள் உள்ளன. இது தோரயமாக 145 ஒளியாண்டுகள் துரத்தில் உள்ளது.

பண்புகள்

[தொகு]
கேட்டை விண்மீனுக்கும் சூரியனுக்கும் இடையேயான ஒப்பீடு, கருப்பு புள்ளிக் கோடுகள் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதை ஆகும்.

கேட்டை விண்மீன் ஒரு மீப்பெருமீன் (supergiant star). இதன் விண்மீன் வகைப்பாடு M1.5Iab-b.[3]. இது தோரயமாக சூரியனை விட 883 மடங்கு ஆரம் உடையது]][5]. சூரிய குடும்பத்தில், சூரியனுக்குப் பதிலாக இந்த விண்மீனை வைத்தால் இதன் வெளிப்புறப் பகுதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை விட அதிகமாக இருக்கும். அவ்வளவு பெரியது. பார்வை இடவழு(Parallax-பல்வேறு கோணங்களில் பார்த்து அதன் கோணங்கள் மூலம் அறிதல்.) முறையில் அளவிட்டதில் கேட்டை விண்மீன், புவியிலிருந்து 550 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.[1].இதன் ஒளிர்வு அளவு (luminosity), சூரியனை விட 10000 மடங்கு அதிகம். கேட்டை விண்மீன் சூரியனுக்கு சூரியனுக்கு நேர் எதிரே வரும் போது, மே 31 ல் அனைத்து வருடங்களிலும் காணலாம். அந்தி வேளையில் தோன்றி விடியற் காலையில் மறையும். நவம்பர் 30 முதல் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு இது சூரியனுக்கு பின் புறம் இருப்பதால் இதைக் காண இயலாது.[7] இந்த மறையும் காலம் தெற்கு அரைக்கோளத்தை விட வடக்கு அரைக்கோளத்தில் அதிகமாக இருக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 van Leeuwen, F. (November 2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V. 
  2. 2.0 2.1 2.2 Nicolet, B. (1978). "Photoelectric photometric Catalogue of homogeneous measurements in the UBV System". Astronomy and Astrophysics Supplement Series 34: 1–49. Bibcode: 1978A&AS...34....1N. 
  3. 3.0 3.1 3.2 "ANTARES -- Double or multiple star". SIMBAD. Centre de Données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2011-12-31.
  4. Evans, D. S. (June 20–24, 1966), "The Revision of the General Catalogue of Radial Velocities", in Batten, Alan Henry; John Frederick (eds.), Determination of Radial Velocities and their Applications, Proceedings from IAU Symposium no. 30, University of Toronto: International Astronomical Union, Bibcode:1967IAUS...30...57E
  5. 5.0 5.1 5.2 5.3 Baade, R.; Reimers, D. (October 2007). "Multi-component absorption lines in the HST spectra of α Scorpii B". Astronomy and Astrophysics 474 (1): 229–237. doi:10.1051/0004-6361:20077308. Bibcode: 2007A&A...474..229B. 
  6. 6.0 6.1 6.2 Schröder, K.-P.; Cuntz, M. (April 2007), "A critical test of empirical mass loss formulas applied to individual giants and supergiants", Astronomy and Astrophysics, 465 (2): 593–601, arXiv:astro-ph/0702172, Bibcode:2007A&A...465..593S, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361:20066633
  7. Star Maps created using XEphem (Output generated for 2008). "LASCO Star Maps (identify objects in the field of view for any day of the year)". Large Angle and Spectrometric Coronagraph Experiment (LASCO). Archived from the original on 2012-06-30. பார்க்கப்பட்ட நாள் 2011-12-01. {{cite web}}: Check date values in: |date= (help); Unknown parameter |dead-url= ignored (help) (2009, 2010, 2011)