உள்ளடக்கத்துக்குச் செல்

கேஎல்சிசி எல்ஆர்டி நிலையம்

ஆள்கூறுகள்: 3°09′33″N 101°42′50″E / 3.15917°N 101.71389°E / 3.15917; 101.71389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KJ10 
கேஎல்சிசி

KLCC LRT Station
கேஎல்சிசி எல்ஆர்டி நிலையம் (2024)
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்KLCC LRT Station
城中城站
அமைவிடம்அம்பாங் சாலை
கோலாலம்பூர்
 மலேசியா
ஆள்கூறுகள்3°09′33″N 101°42′50″E / 3.15917°N 101.71389°E / 3.15917; 101.71389
உரிமம் பிரசரானா மலேசியா
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்[1]
தடங்கள்  கிளானா ஜெயா 
நடைமேடைநிலத்தடி தீவு மேடை
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலத்தடி நிலையம்
நடைமேடை அளவுகள்3
தரிப்பிடம் Available at Suria KLCC
துவிச்சக்கர வண்டி வசதிகள்விசையுந்து உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KJ10 
வரலாறு
திறக்கப்பட்டது1 சூன் 1999 (எல்ஆர்டி)
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
அம்பாங் பார்க்
கோம்பாக் எல்ஆர்டி
 
கிளானா ஜெயா வழித்தடம்
 
கம்போங் பாரு எல்ஆர்டி
புத்ரா அயிட்ஸ்

கேஎல்சிசி எல்ஆர்டி நிலையம் அல்லது கேஎல்சிசி இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: KLCC LRT Station; மலாய்: Stesen KLCC; சீனம்: 城中城站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.

இந்த எல்ஆர்டி நிலையம், அம்பாங் சாலையின் அவென்யூ கே (Avenue K) என்ற வணிக வளாகத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தை சூரியா கேஎல்சிசி (Suria KLCC) எனும் வணிக வளாகத்துடன் ஒரு பாதசாரி சுரங்கப்பாதை இணைக்கிறது; மற்றும் பெட்ரோனாஸ் கோபுரங்கள், மெக்சிஸ் கோபுரம் (Maxis Tower), கோலாலம்பூர் மாநாட்டு மையம் (Kuala Lumpur Convention Centre) ஆகியவற்றை உள்ளடக்கிய கோலாலம்பூர் மாநகர மையம் வளர்ச்சிப் பகுதிகளையும் இணைக்கிறது.

பொது

[தொகு]

கோலாலம்பூர் மாநகர மையத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளது. மேலும் மாநகரின் பல அடையாளங்களுக்கு மிக அருகிலும் உள்ளது. இது இலகுத் தொடருந்து அமைப்பில் மிகவும் பரபரப்பான நிலையங்களில் ஒன்றாகும். குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் நிரம்பி வழிவது வழக்கம்.

இந்த எல்ஆர்டி நிலையத்திற்கு அருகில் மற்றும் ஒரு நிலையம் உள்ளது. அந்த நிலையம் அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையம் என்று அழைக்கப்படுகிறது.

அமைவு

[தொகு]

சனவரி 2012-இல், புக்கிட் பிந்தாங்கில் உள்ள பெட்ரோனாஸ் கோபுரங்களையும் கோலாலம்பூர் பெவிலியன் வணிக வளாகத்தையும் (Pavilion Kuala Lumpur) இணைக்கும் ஒரு பாதசாரி நடைபாதை சேர்க்கப்பட்டது.

அந்தப் பாதசாரி நடைபாதை,  MR7  ராஜா சூலான் மோனோரெயில் நிலையம்,  MR6  புக்கிட் பிந்தாங் மோனோரெயில் நிலையம் மற்றும்  KG18A  புக்கிட் பிந்தாங் எம்ஆர்டி நிலையத்துடன் இணைக்கிறது.

கோலாலம்பூர் மாநகர மையம்

[தொகு]

கோலாலம்பூர் மாநகர மையத்தின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. இந்த நிலையம் மூன்று நிலைகளைக் கொண்ட ஒரு நிலத்தடி நிலையமாகும்: தரை நிலை, தொடருந்து பயன்பாட்டு நிலை மற்றும் மேடை நிலை. கிளானா ஜெயா வழித்தடத்தின் சேவைக்காக இந்த நிலையத்தில் ஒருதீவு நடைமேடையும் உள்ளது.

அனைத்து அடுக்குகளிலும் படிக்கட்டுகள், மின்படிக்கட்டுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சுமையுந்துகள் உள்ளன. அத்துடன் இரு திசைகளின் வழியாகப் பயணிக்கும் தொடருந்துகளுக்கு என தனிப்பட்ட ஒரு தீவு நடைமேடையையும் இந்த நிலையம் பயன்படுத்துகிறது. நவீன முறையிலான மழை வெயில் தடுப்பு கூரைகளால் இந்த நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

காட்சியகம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ABOUT RAPID RAIL". பார்க்கப்பட்ட நாள் May 8, 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]